'வலிமை' ஃபர்ஸ்ட் லுக்...சொன்னபடியே வாக்குறுதியை நிறைவேற்றிய வானதி சீனிவாசன்.. ட்விட்டர் டிரெண்டிங்
சென்னை: அஜித்தின் வலிமை ஃபர்ஸ்ட் லுக் ஃபோஸ்டர் இன்று வெளியாகியுள்ள நிலையில், தான் வென்றதும் வலிமை அப்டேட் வந்துவிட்டது என பாஜக எம்எல்ஏ வானதி சீனிவாசன் ட்வீட் செய்துள்ளார்.
Recommended Video
தமிழ்நாட்டில் கடந்த ஏப்ரல் மாதம் சட்டசபைத் தேர்தல் நடைபெற்றது. இதில் அதிமுக கூட்டணியில் களமிறங்கிய பாஜக, மொத்தம் 20 தொகுதிகளில் போட்டியிட்டது.
இந்தத் தேர்தலில் நான்கு பாஜக எம்எல்ஏக்கள் வெற்றி பெற்றனர். கடந்த 2001ஆம் ஆண்டு தேர்தலுக்குப் பிறகு பாஜக சட்டசபைத் தேர்தலில் வெல்வது இதுவே முதல்முறையாகும்.

வானதி சீனிவாசன்
இந்த சட்டசபைத் தேர்தலில் வெற்றி பெற்றவர்களில் முக்கியமானவர் வானதி சீனிவாசன். கோவை தெற்கு தொகுதியில் வானதி சீனிவாசனுக்கு எதிராக மக்கள் நீதி மய்யத்தின் தலைவர் கமல் களமிறங்கினார். வாக்கு எண்ணிக்கை போதும் கூட ஒவ்வொரு சுற்றிலும் இருவரும் மாறி மாறி முன்னிலை வகித்தனர். இறுதியில் சுமார் 1500 வாக்குகள் வித்தியாசத்திலேயே வானதி சீனிவாசன் வென்றார்.

வலிமை அப்டேட்
தேர்தல் பிரசாரத்தின் சமயத்தில் கடந்த மார்ச் மாதம் இளைஞர் ஒருவர், 'வலிமை அப்டேட் எப்ப?' என ட்விட்டரில் வானதி சீனிவாசனை டெக் செய்து கேட்டிருந்தார். ட்விட்டரில் ஆக்டிவாக இருக்கும் வானதி சீனிவாசன் அதற்குப் பதிலும் அளித்திருந்தார். அதாவது "நான் வெற்றி பெற்ற உடன் நிச்சயமாக 'வலிமை' பட அப்டேட் கிடைக்கும் தம்பி" என ட்வீட் செய்திருந்தார்.

கோரிக்கை
இந்த ட்வீட் அப்போதே இணையத்தில் டிரெண்ட் ஆனது. தேர்தலில் வானசி சீனிவாசன் வென்றதும்கூட, பலரும் வலிமை பட அப்டேட்டை எப்படியாவது பெற்றுத் தர வேண்டும் எனப் பலரும் அந்த பழைய ட்வீட்டை ரீட்வீட் செய்து வந்தனர். மேலும். அவரையும் டேக் செய்தும் கேட்டு வந்தனர்.

வென்றதும் வந்த வலிமை அப்டேட்
இந்நிலையில், பல மாதங்களாகக் காத்திருந்த அஜித் ரசிக்கர்களை குஷிப்படுத்தும் வகையில் வலிமை திரபைப்டத்தின் ஃபர்ஸ்ட் லுக் ஃபோஸ்டர் இன்று வெளியானது. இதனை ட்விட்டரில் அஜித் ரசிகர்கள் கொண்டாடி வருகின்றனர். இந்நிலையில் வலிமை ஃபர்ஸ்ட் லுக்கை ட்விட்டரில் பகிர்ந்துள்ள வானதி சீனிவாசன், "நான் வெற்றி பெற்றவுடன் வலிமை அப்டேட் வந்து விட்டது" என பதிவிட்டுள்ளார். வானதி சீனிவாசனின் இந்த ட்வீட்டை அஜித் ரசிகர்களும் பலரும் ரிடீவீட் செய்து வருகின்றனர்.

வலிமை
போனி கபூர் தயாரிப்பில் இயக்குநர் எச் வினோத் இயக்கத்தில் நடிகர் அஜித் நடிப்பில் உருவாகி வரும் திரைப்படம் வலிமை. கடந்த 2019ஆம் ஆண்டு இறுதியில் இந்தப் படத்தில் ஷூட்டிங் தொடங்கியது. அதன் பிறகு மிகக் குறைவான அளவே இந்தப் படம் குறித்த அப்டேட்களை படக்குழு வெளியிட்டது. இதனால் அஜித் ரசிகர்கள் ஏமாற்றத்தில் இருந்தனர்.

அஜித்
அப்போது அஜித் ரசிகர்கள் பல்வேறு இடங்களிலும் வலிமை அப்டேட் குறித்துக் கேட்ட சம்பவங்களும் நடந்தன. இந்தியா இங்கிலாந்து டெஸ்ட் தொடரின்போது, இங்கிலாந்து வீரர் மொயின் அலியிடம் வலிமை அப்டேட்டை கேட்டார். அதேபோல ஐரோப்பியக் கோப்பை கால்பந்து போட்டியிலும் வலிமை அப்டேட் குறித்த பதாகை ஒருவர் வைத்திருந்தார். அந்தப் படமும் வைரலானது குறிப்பிடத்தக்கது.
-
Vanathi Srinivasan: முகத்தில் சோகம்.. வானதி சீனிவாசன் திடீர் வீடியோ.. மருத்துவமனை பெட்டில் இருந்தபடி உருக்கம் -
தங்கம் மீண்டும் ரூ.10,000? மக்கள் அனைவருக்கும் உள்ள கேள்வி.. ஒரே வரியில் ஆனந்த் சீனிவாசன் நறுக் -
தவெக விற்கு தேர்தலில் ஆதரவு கிடையாது.. ‘ஜனநாயகன்’ லீக் காட்சிகளால் பின்வாங்கிய முஸ்லிம் மக்கள் கழகம் -
திமுகவிற்கு ‘குட்பை'.. விஜயின் தவெகவிற்கு மம்தா பானர்ஜியின் திரிணாமுல் காங்கிரஸ் ஆதரவு! -
வீட்டு கேஸ் சிலிண்டர் 14.2 கிலோ எடையில் விநியோகம் செய்யப்படுவது ஏன் தெரியுமா? -
கூட்டுறவு வங்கி நகைக்கடன் தள்ளுபடி யாருக்கு கிடைக்கும்? நகை மதிப்பீட்டில் உள்ள ஏல ரகசியம் இதுதானா -
சிறகடிக்க ஆசை: விஜயா செய்த சதி, ஜெயிலுக்கு போகும் மொத்த குடும்பம்.. மனோஜால் ஏற்படும் விபரீதம்! ஜெயித்த ரோகிணி -
இப்போ முடியாது.. தேர்தல் முடிந்ததும் செட்டில் பண்றேன்.. கறாராக பேசிய லீமா ரோஸ்.. விக்கித்த எடப்பாடி -
சுப்மன் கில் ஆட்டத்தை பார்க்க வந்த சாரா டெண்டுல்கர்.. பாவமாக அமர்ந்திருந்த அர்ஜுன் டெண்டுல்கர் மனைவி -
ஹார்முஸில் இறங்கும் இந்திய கடற்படை.. நடுக்கடலில் சிக்கியுள்ள இந்திய கப்பல்களை மீட்க அதிரடி ஆபரேஷன் -
நாய்க்கு கூட நன்றி இருக்கும்.. எடப்பாடி பழனிசாமி குறித்து சசிகலா விமர்சனம் -
கடைசி சான்ஸ்.. மிஸ் பண்ணிடாதீங்க.. பிறப்புச் சான்றிதழில் வருது மேஜர் முடிவு.. ஆவணங்களை ரெடி பண்ணுங்க












Click it and Unblock the Notifications