கேள்விக்குறியாகும் சென்னையின் சுற்றுச்சூழல்.. எரிவுலை திட்டத்தை கைவிட வேண்டும் - வானதி சீனிவாசன்
சென்னை: குப்பைகளை உரமாக்கும் மையங்களை மூடிவிட்டு எரிவுலைகளை அமைக்கும் திட்டத்தை சென்னை மாநகராட்சி கைவிட வேண்டும் என்றும், தலைநகர் சென்னையின் சுற்றுச்சூழலைப் பாதுகாக்க முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தலையிட வேண்டும் என்று பாஜக தேசிய மகளிர் அணி தலைவர் வானதி சீனிவாசன் தெரிவித்துள்ளார்.
இதுகுறித்து, கோவை தெற்குத் தொகுதி எம்எல்ஏவும், பாஜக தேசிய மகளிர் அணி தலைவருமான வானதி சீனிவாசன் கூறியுள்ளதாவது: சுமார் ஒரு கோடி மக்கள் வசிக்கும் சென்னை மாநகராட்சியில் குப்பை மேலாண்மை என்பது மிகப்பெரிய பிரச்னையாக உள்ளது. மாநகரின் பல இடங்களில் குப்பை குவிந்து கிடப்பதும், அதிலிருந்து துர்நாற்றம் வீசி, மக்களுக்கு உடல்நல பாதிப்புகளை ஏற்படுத்துவதும் தொடர்கதையாகி வருகிறது. அதுவும் பண்டிகை காலங்களில் சென்னை மாநகரம், குப்பை நகரமாகி விடுகிறது.

இந்நிலையில், சென்னை மாநகராட்சி பகுதிக்குள் செயல்பட்டு வரும், மக்கும் குப்பையை உரமாக்கும் 168 மையங்களை மூட முடிவு செய்திருப்பதாக வரும் செய்திகள் அதிர்ச்சி அளிக்கிறது. அது மட்டுமல்லாது, மக்காத கழிவுகளிலிருந்து மறுசுழற்சி செய்ய வாய்ப்புள்ள பொருட்களைப் பிரித்தெடுக்கும் 88 பொருள் மீட்பு வசதி மையங்களை (Material recover facility) மூடவும் மாநகராட்சி முடிவு செய்துள்ளதாக தெரிகிறது.
கழிவு மேலாண்மை பெரும் பிரச்னையாக உருவெடுத்துள்ள நிலையில் சென்னை மாநகராட்சியின் இதுபோன்ற நடவடிக்கைகள் நிலைமையை மேலும் மோசமாக்கி விடும். இது கண்டனத்திற்குரியது. உரமாக்கும் மையங்கள், பொருள் மீட்பு வசதி மையங்களில் இருந்து கடுமையான தூர்நாற்றம் வீசுவதாக பொதுமக்கள் புகார் தெரிவித்ததால், அதை மூடும் முடிவை எடுத்திருப்பதாக சென்னை மாநகராட்சி தெரிவித்துள்ளது.
நவீன தொழில்நுட்பங்களைப் பயன்படுத்தி நுர்நாற்றம் வீசுவதை தடுத்து, மக்களுக்கு பாதிப்பில்லாமல் இந்த மையங்களை செயல்படுத்துவது சிறந்த நிர்வாகத்தின் அடையாளம். அதைவிடுத்து, துர்நாற்றம் வீசுவதாகக் கூறி, உரமாக்கல் மையங்களை மூடுவது, மூட்டைப்பூச்சிக்கு பயந்து வீட்டை கொளுத்துவது போன்றது.
மக்கும் குப்பையை உரமாக்குவதற்குப் பதிலாக, மூடிய அமைப்புக்குள், உயர் வெப்ப நிலையில் எரித்து சாம்பலாக்கும் எரிவுலைகளை அமைக்க மாநகராட்சி திட்டமிட்டுள்ளது. இதனால் வெளிவரும் புகை சுற்றுச்சூழலுக்கும் பெரும் கேடு விளைவிக்கும். எனவே, குப்பையை எரிக்கும் எரிவுலை திட்டத்தை கைவிட்டு, நவீன தொழில்நுட்பத்தைப் பயன்படுத்தி குப்பையை உரமாக்கும் மையங்களை மீண்டும் செயல்பாட்டுக்கு கொண்டுவர வேண்டும். முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் இதில் நேரடியாக தலையிட்டு தலைநகர் சென்னையை பாதுகாக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று தெரிவித்துள்ளார்.
-
சென்னையில் ஷாக்! போலீசாரின் பிடியில் சிக்கிய மனைவியின், கழுத்தை அறுத்து கணவனே கொலை செய்த கொடூரம் -
சென்னையில் கொடூர சம்பவம்.. கஞ்சா விற்பனையை தட்டிக்கேட்ட இளைஞர் அம்மிக்கல்லால் அடித்து கொலை! -
“என் மகனுக்கு TVK என பெயர் வைக்கப் போகிறேன்” - தவெக எம்.எல்.ஏ பல்லவி அறிவிப்பு -
அமைச்சர் ராஜ்மோகன் கையால் பட்டம் வாங்க மறுத்து மாணவர் செய்த செயல்! சென்னை கல்லூரியில் நடந்த பரபரப்பு -
தலைமை செயலக பகுதியில் திடீரென புகை மூட்டம்! மூச்சுத்திணறலால் பொதுமக்கள் அவதி.. சென்னையில் பரபரப்பு -
மெரினா கடற்கரைக்கு அடியில் அதிசயம்! சென்னை மெட்ரோ 2ம் கட்டத்தில் மாஸ்: லைட்ஹவுஸ் நிலையம் உருவாகிறது -
மயிலாப்பூர் டூ அம்பத்தூர்.. கார் இருந்தாலும் சைக்கிள் பயணம்! உலக சைக்கிள் தினத்தில் அறிய வேண்டிய கதை -
தலைமைச் செயலகமா? தவெக தலைமை அலுவலகமா? வானதி சீனிவாசன் கேள்வி -
சென்னையில் இன்று இடி, மின்னலுடன் மழை கொட்டப் போகுது.. தமிழகம் முழுக்க 22 மாவட்டங்களுக்கு எச்சரிக்கை -
கங்கணம் கட்டி சதி பண்ணிருக்கீங்க.. சேகர் பாபுவை போனில் வறுத்து எடுத்த ஸ்டாலின்.. ஷாக் தகவல்! -
4 தொகுதி இடைத்தேர்தலை புறக்கணிக்க திமுக முடிவு? ஸ்டாலினின் ராஜதந்திரம்! -
ஐடி ஊழியர்களை விட "இவர்கள்" காட்டில்தான் பணமழை! அடுத்த 5 ஆண்டுகளில் இந்தியாவில் ஏற்பட போகும் மாற்றம்












Click it and Unblock the Notifications