ஜோதிமணியை எதிர்க்க முடியாதா? அண்ணாமலை ஏன் கரூரில் நிற்கல? வானதி ஆட்கள் குமுறுறாங்களா? உண்மையா?
சென்னை: கரூரில் அண்ணாமலை இருக்க ஏன் கோவைக்கு வருகிறார் என்று வானதி ஆட்கள் கேட்கின்றனர். வானதி ஆட்கள் கேட்கவில்லை என்று சொல்வீர்களா? அவர்கள் வெளியே சொல்ல மாட்டார்கள். கட்சி கட்டுப்பாடு காரணமாக வெளியே சொல்ல மாட்டார்கள். ஆனால் தெரிந்தவர்களிடம் பேசுவார்கள் என்று மூத்த பத்திரிகையாளர் பிரியன் தெரிவித்துள்ளார்.
கோவை தொகுதி பாஜக வேட்பாளராக அண்ணாமலை அறிவிக்கப்பட்டு உள்ளார். ஏற்கனவே கோவை லோக்சபா தொகுதி வேட்பாளராக திமுக சார்பாக கணபதி ராஜ்குமார் அறிவிக்கப்பட்டு உள்ளார். அதிமுகவின் கோவை நாடாளுமன்ற வேட்பாளராக சிங்கை ராமச்சந்திரன் அறிவிக்கப்பட்டு உள்ளார்.

ராமச்சந்திரன் கோவிந்தராசு என்றும் அழைக்கப்படும் சிங்கை ஜி. ராமச்சந்திரன் அந்த கட்சியின் சர்ப்ரைஸ் தேர்வாகி மாறி உள்ளார். கோவை தொகுதி பாஜக வேட்பாளராக அண்ணாமலை அறிவிக்கப்பட்ட நிலையில் அங்கே கடந்த தேர்தலில் கட்சிகள் வாங்கிய வாக்கு சதவிகிதம் எவ்வளவு என்று பார்க்கலாம்.
2019 பொதுத் தேர்தல். கோவையில் அதிமுக + பாஜக + பாமக +தேமுதிக + தமிழ் மாநில காங்கிரஸ் சேர்ந்து வாங்கிய வாக்குகள் 31% மட்டுமே. திமுக கூட்டணியில் கம்யூனிஸ்ட் வேட்பாளர் வாங்கியது 46%. இப்போது திமுக கூட்டணி அப்படியே உள்ளது.
ஆனால் பாஜக கூட்டணியில் அதிமுக , தேமுதிக இல்லை. திமுக கூட்டணியில் மக்கள் நீதி மையம் சேர்ந்திருக்கு. இவர்களிடம் 11% வாக்கு வேறு கோவையில் உள்ளது. அப்படி இருக்க அண்ணாமலைக்கு கோவை களநிலவரம் சாதகமாக இருக்குமா என்ற கேள்வி எழுந்துள்ளது.
எப்படி இருக்கும்?: இந்த நிலையில் கோவையில் நிலவரம் எப்படி இருக்கும் என்று மூத்த பத்திரிகையாளர் ப்ரியன் ஒன்இந்தியாவிற்கு பேட்டி அளித்துள்ளார். அதில்., பல தொகுதிகளில் வேட்பாளர்கள் தேர்வில் கட்சி நிர்வாகிகள் இடையே அதிருப்தி உள்ளது. உதாரணமாக ஒரு மாவட்டத்தில் இருந்து இன்னொரு மாவட்டத்திற்கு ஒரு வேட்பாளர் சென்றாலே அந்த மாவட்ட நிர்வாகிகள் அதிருப்தி அடைகின்றனர். நம்ம மாவட்டத்தில் ஆள் இல்லையா என்று கேட்கின்றனர். வானதி ஆட்களே மனசுக்குள் கேட்டுக்கொண்டு இருக்கின்றனர்.
கரூரில் அண்ணாமலை இருக்க ஏன் கோவைக்கு வருகிறார் என்று வானதி ஆட்கள் கேட்க்கின்றனர். வானதி ஆட்கள் கேட்கவில்லை என்று சொல்வீர்களா? அவர்கள் வெளியே சொல்ல மாட்டார்கள். கட்சி கட்டுப்பாடு காரணமாக வெளியே சொல்ல மாட்டார்கள். ஆனால் தெரிந்தவர்களிடம் பேசுவார்கள். அவர் ஏன் தொகுதி மாறி போட்டியிடுகிறார்.
ஜோதிமணியை எதிர்க்க தைரியம் இல்லையா? என்று கேட்பார்கள். கோவைக்கு ஏன் வர வேண்டும். நயினார் நாகேந்திரன் எம்எல்ஏ. அவர் நிற்கவில்லையா? அதேபோல் வானதிக்கு கொடுக்கலாமே என்று தொண்டர்கள் கேட்கிறார்கள். சிபி ராதாகிருஷ்ணன் இல்லாத போது ஏன் வானதிக்கு கொடுக்கலாமே என்று தொண்டர்கள் கேட்கிறார்கள். அவர் உள்ளூரிலேயே விலை போகவில்லை.
அப்படி இருக்க எப்படி அண்ணாமலை கோவையில் இடம் கொடுக்கலாம் என்று கேட்கின்றனர். ஆனால் இது பாஜகவில் மட்டுமில்லை. இது போன்ற உட்கட்சி மோதல் எல்லா கட்சியிலும் உள்ளது. காங்கிரசில் கூட உள்ளது. திமுகவில் உள்ளது. ஒரு உதாரணத்திற்காக இங்கே பாஜகவை சொல்கிறேன் என்று மூத்த பத்திரிகையாளர் பிரியன் தெரிவித்துள்ளார்.
-
பெருந்துறை இடைத்தேர்தலில் அண்ணாமலை போட்டியிடுகிறாரா? பாஜகவில் செல்வாக்கை நிரூபிக்க ஆசிட் டெஸ்ட்? -
இனிமேலாவது வீரவசனம் பேசாமல் மாற்றத்தைக் கொடுங்கள் CM விஜய் சார்! அன்பில் மகேஷ் பதிவு -
அவசரப்பட்டு கையெழுத்து போட்டுட்டோமோ? முட்டி மோதும் 3 அதிமுக ’மாஜி’ எம்எல்ஏக்கள்! தவெக கொடுத்த ஆஃபர்! -
ஸ்டாலினின் எச்சரிக்கை.. பதறிப்போய் ஆளை தூக்கிய விஜய்.. பயத்தில் அவசர அவசரமாக வியூகம்.. நடந்தது என்ன? -
மும்மொழி.. மத்திய அரசுக்கு எதிராக அண்ணாமலை முதல் முறையாக கருத்து? -
பிரதமர் மோடியை வணங்கி.. பத்மஸ்ரீ விருது பெற்ற சிலம்ப கலைஞர் பழனிவேல்! தமிழருக்கு பெரிய கவுரவம் -
மாசம் ரூ.10000 கோடி செலவு.. படிச்சு படிச்சு மோடி சொல்ல இதுதான் காரணம்..! -
அண்ணன் வர்றாரு! என்னப்பா ஆரம்பிச்சுருவோமா? அண்ணாமலை ஆரம்பிக்கும் ’பார்ட்டி’.. இதுதான் கொடி, சின்னமா? -
விஜய் செய்த சாணக்கியத்தனம்.. சத்தமில்லாமல் வெளியேற்றப்பட்ட கம்யூனிஸ்ட்கள்! இதை யாரும் கவனிக்கலையே! -
உதயநிதி வீட்டை கேட்கும் ஆதவ் அர்ஜுனா.. இந்த வீடுதான் வேண்டும்.. கோட்டையில் நீடிக்கும் மல்லுக்கட்டு -
இசக்கி சுப்பையா யார் தெரியுமா? அடுத்து தாவும் அரசியல் புள்ளி இவரா? தவெக பக்கம் சாயும் அதிமுக கோட்டை -
மு.க.ஸ்டாலின் - எடப்பாடி பழனிசாமி இணைவார்கள்!ஆருடம் கணித்த.. ஆதவ் அர்ஜுனா!












Click it and Unblock the Notifications