சென்னை அப்டேட்டுகளுக்கு
நோட்டிபிகேஷனை அனுமதி  
Just In
Oneindia App Download

முதல்ல ஹெச். ராஜா சொன்னாரா… இப்போ வானதி சீனிவாசன் சொல்றாங்க.. அப்ப தலைமை சொல்லாதா?

Google Oneindia Tamil News

Recommended Video

    அவசரப்பட்டு வேட்பாளர் பட்டியலை வெளியிட்ட எச்.ராஜா- வீடியோ

    சென்னை:கோவையில் பாஜக சார்பில் போட்டியிடும் சி.பி. ராதாகிருஷ்ணனை வெற்றி பெற வைப்போம் என்று அக்கட்சியின் முக்கிய தலைவர்களில் ஒருவரான வானதி சீனிவாசன் கூறியிருக்கிறார்.

    நாடு முழுவதும் லோக்சபா தேர்தல் 7 கட்டங்களாக நடைபெறுகிறது. வரும் ஏப்ரல் 18ம் தேதி, தமிழகத்தின் 39 தொகுதிகளுக்கும், புதுச்சேரியின் ஒரு தொகுதிக்கும் தேர்தல் நடத்தப்பட உள்ளது.

    அதற்காக அதிமுக, திமுக ஆகிய கூட்டணிகள் உருவாகி அந்த கட்சியினரும் தேர்தல் பிரச்சாரத்தில் இறங்கி இருக்கின்றன. வேட்பாளர்களையும் அறிவித்து களப்பணிகளிலும் இரு கட்சிகளும் இறங்கி உள்ளன.

    கட்சியே அறிவிக்கல.. அதுக்குள்ள முந்திக்கொண்டு சொன்ன ஹெச்.ராஜா.. இதோ வேட்பாளர் பட்டியல் கட்சியே அறிவிக்கல.. அதுக்குள்ள முந்திக்கொண்டு சொன்ன ஹெச்.ராஜா.. இதோ வேட்பாளர் பட்டியல்

    அதிமுக கூட்டணி கட்சிகள்

    அதிமுக கூட்டணி கட்சிகள்

    அதிமுக கூட்டணியில் பாஜக - 5, பாமக - 7, தேமுதிக - 4 என தொகுதிகள் ஒதுக்கப்பட்டுள்ளன. தமாகா - 1, புதிய நீதிக்கட்சி - 1, புதிய தமிழகம் - 1, என்.ஆர்.காங்கிரஸ் - 1 என தொகுதிகள் ஒதுக்கப்பட்டுள்ளன. மீதமுள்ள 20 தொகுதிகளில் அதிமுக போட்டியிட உள்ளது.

    திமுக கூட்டணியில் யார்?

    திமுக கூட்டணியில் யார்?

    திமுக கூட்டணியில் காங்கிரஸ் - 10, மார்க்சிஸ்ட், இந்திய கம்யூனிஸ்ட், விடுதலை சிறுத்தைகள் கட்சிக்கு தலா 2 தொகுதிகள் ஒதுக்கப்பட்டுள்ளன. மதிமுக, இந்திய யூனியன் முஸ்லீம் லீக், கொங்கு நாடு மக்கள் தேசிய கட்சி, இந்திய ஜனநாயக கட்சிக்கு தலா ஒரு தொகுதி ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளன. மீதமுள்ள 20 தொகுதிகளில் திமுக போட்டியிடுகிறது.

    வேட்பாளர் பட்டியல்

    வேட்பாளர் பட்டியல்

    அதே நேரத்தில் தமிழக பாஜக வேட்பாளர்கள் உத்தேச பட்டியல் வெளியாகி உள்ளது. கன்னியாகுமரியில் பொன்.ராதாகிருஷ்ணன், கோவையில் சி.பி.ராதா கிருஷ்ணன், சிவகங்கையில் ஹெச்.ராஜா, ராமநாதபுரத்தில் நயினார் நாகேந்திரன் ஆகியோர் போட்டியிட உள்ளதாக தெரிகிறது.

    டுவிட்டர் செய்தி

    இந் நிலையில் கோவையில் ராதாகிருஷ்ணன் வெற்றிபெற வைப்போம் என்று அக்கட்சியின் முக்கிய தலைவர்களில் ஒருவரான வானதி ஸ்ரீனிவாசன் கூறி இருக்கிறார். அவர் தமது டுவிட்டர் பதிவில் இதை கூறியிருக்கிறார்.

    வெற்றி பெற உழைப்போம்

    வெற்றி பெற உழைப்போம்

    கோவை பாராளுமன்ற வேட்பாளர் சி.பி. ராதாகிருஷ்ணன் வெற்றிபெற உழைப்போம் என்று வானதி ஸ்ரீனிவாசன் தனது டுவிட்டரில் பதிவிட்டுள்ளார். ஹெச். ராஜாவைத் தொடர்ந்து, வானதி சீனிவாசனும் வேட்பாளர் யார் என்பதை அறிவித்துள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.

    English summary
    Bjp leader vanathi srinivasan wished and tweeted that we have work for c.p. Radhakrishnans victory in Coimbatore constituency.
     
     
     
    உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
    Enable
    x
    Notification Settings X
    Time Settings
    Done
    Clear Notification X
    Do you want to clear all the notifications from your inbox?
    Settings X