மிக விரைவில் 'வலிமை' அப்டேட்... வானதி ஸ்ரீனிவாசன் வெற்றிக்கு பின்... வைரலாகும் பழைய ட்வீட்

Subscribe to Oneindia Tamil

சென்னை: சட்டசபை தேர்தலில் வானதி ஸ்ரீனிவாசன் வெற்றியடைந்ததைத் தொடர்ந்து, அவர் முன்பு குறிப்பிட்டதைப் போல வலிமை அப்டேட் விரைவில் வழங்க வேண்டும் என அவரது பழைய ட்வீட் இணையத்தில் மீண்டும் வைரலாகியுள்ளது.

தமிழகத்தில் சட்டசபை தேர்தல் முடிவுகள் ஒரு வழியாக அறிவிக்கப்பட்டுவிட்டன. மொத்தமுழுள்ள 234 தொகுதிகளில் திமுக கூட்டணி 159 இடங்களைக் கைப்பற்றி ஆட்சியைப் பிடித்துள்ளது.

குறிப்பாக திமுக மட்டும் 125 இடங்களில் வென்றுள்ளது. 1996ஆம் ஆண்டுக்குப் பின், திமுக தனிப்பெரும்பான்மையுடன் ஆட்சி அமைக்கிறது. இன்னும் சில தினங்களில் மு க ஸ்டாலின் ஆளுநரை சந்தித்து ஆட்சி அமைக்க உரிமை கோருவார் என எதிர்பார்க்கப்படுகிறது.

4 தொகுதிகளில் பாஜக

4 தொகுதிகளில் பாஜக

இந்த் தேர்தலில் அனைவருக்கும் ஆச்சரியத்தை அளிக்கும் வகையில் பாஜக நான்கு இடங்களைக் கைப்பற்றியுள்ளது. 2001ஆம் ஆண்டுக்குப் பிறகு பாஜக தமிழக சட்டசபையில் நுழைவது இதுவே முதல்முறையாகும். பாஜக நட்சத்திர வேட்பாளர்களாகக் கருதப்பட்ட எச் ராஜா, எல் முருகன், அண்ணாமலை, குஷ்பு ஆகியோர் தோல்வியடைந்தபோதும், மொடக்குறிச்சி, நாகை, நெல்லை, கோவை ஆகிய நான்கு தொகுதிகளை பாஜக கைப்பற்றியுள்ளது.

கோவை தெற்கு

கோவை தெற்கு

அதிலும் குறிப்பாகக் கோவை தெற்கு தொகுதியில் பாஜக-மநீம-காங்கிரஸ் ஆகிய கட்சிகளுக்கு இடையே கடும் மும்முனைப் போட்டி நிலவியது. வாக்கு எண்ணிக்கையில் ஒவ்வொரு சுற்றிலும் ஒருவர் என மாறி மாறி முன்னிலை வகித்து வந்தனர். இறுதிக்கட்டத்தில் கமல் மற்றும் வானதி ஸ்ரீனிவாசன் ஆகியோருக்கு இடையே கடும் போட்டி நிலவியது.

வானதி ஸ்ரீனிவாசன்

வானதி ஸ்ரீனிவாசன்

தமிழகத்தில் மநீம அனைத்து தொகுதிகளிலும் தோல்வியடைந்த நிலையில், கமல் மட்டுமாவது வெற்றி வாகை சுடுவார் என்ற அக்கட்சியினர் பெரிதும் எதிர்பார்த்தனர். இருப்பினும், பாஜகவின் மாநில மகளிர் அணித் தலைவி வானதி ஸ்ரீனிவாசன் 1540 வாக்குகள் வித்தியாசத்தில் கமல்ஹாசனை வீழ்த்தினார். காங்கிரஸ் கட்சி இதில் மூன்றாம் இடத்திற்குத் தள்ளப்பட்டது.

பழைய ட்வீட் வைரல்

பழைய ட்வீட் வைரல்

பெரும் போராட்டத்திற்குப் பிறகு வென்ற வானதி ஸ்ரீனிவாசனை பலரும் பாராட்டி வருகின்றனர். அதேநேரத்தில் அவரது பழைய ட்வீட் ஒன்றும் தற்போது இணையத்தில் ட்ரெண்டாக தொடங்கியுள்ளது. அது வேறு எதுவும் இல்லை வலிமை அப்டேட் தொடர்பாக வானதி ஸ்ரீனிவாசன் பதிவிட்ட ட்வீட் தான்.

வலிமை அப்டேட்

வலிமை அப்டேட்

ட்விட்டரில் மிக ஆக்டிவாக இருப்பவர் வானதி ஸ்ரீனிவாசன். வாக்குப்பதிவுக்கு முன்னர், தீவிர தேர்தல் பிரசாரத்தில் ஈடுபட்டுக் கொண்டிருந்த போது, அவரிடம், 'வலிமை அப்டேட் எப்ப?' என ட்விட்டரில் ஒருவர் கேள்வி எழுப்பியிருந்தார். அதற்கு, வானதி ஸ்ரீனிவாசன் "நான் வெற்றி பெற்ற உடன் நிச்சயமாக 'வலிமை' பட அப்டேட் கிடைக்கும் தம்பி" எனப் பதில் அளித்திருந்தார்.

ட்விட்டரில் கோரிக்கை

ட்விட்டரில் கோரிக்கை

இந்த ட்வீட் அப்போது இணையத்தில் ட்ரெண்டாது. இந்நிலையில், இப்போது வானதி ஸ்ரீனிவாசன் வென்றுள்ள நிலையில், வலிமை பட அப்டேட்டை எப்படியாவது பெற்றுத் தர வேண்டும் எனப் பலரும் அந்த பழைய ட்வீட்டை ரீட்வீட் செய்து வருகின்றனர். மேலும், வானதி ஸ்ரீனிவாசனை டாக் செய்தும் வலிமை அப்டேட்டை கேட்டு வருகின்றனர்.

அஜித்தின் வலிமை

அஜித்தின் வலிமை

போனி கபூர் தயாரிப்பில் இயக்குநர் எச் வினோத் இயக்கத்தில் நடிகர் அஜித் நடிப்பில் உருவாகி வரும் திரைப்படம் வலிமை. இப்படத்தின் அறிவிப்பு வெளியானது முதலே வெகு சில அப்டேட்களை மட்டுமே படக்குழு வெளியிட்டுள்ளது. இந்தியா இங்கிலாந்து டெஸ்ட் தொடரின்போது, இங்கிலாந்து வீரர் மொயின் அலியிடம்கூட வலிமை அப்டேட்டை கேட்ட வீடியோவும் வைரலானது.

ரசிகர்கள் ஏமாற்றம்

ரசிகர்கள் ஏமாற்றம்

அஜித் பிறந்த நாளை முன்னிட்டு மே 1ஆம் தேதி முதல் வலிமை தொடர்பாக அப்டேட்கள் வரிசையாக வெளியிடப்படும் எனக் கடந்த சில வாரங்களுக்கு முன் தயாரிப்பு நிறுவனம் அறிவித்திருந்தது. இதனால் அஜித் ரசிகர்கள் உற்சாகத்தில் இருந்ததனர். இருப்பினும், கடந்த வாரம் கொரோனா பரவல் காரணமாக நாட்டிலுள்ள தற்போதுள்ள நிலையில், கொண்டாட்டங்களுக்கு இது சரியான நேரமாக இருக்காது என்பதால் வலிமை அப்டேட்கள் வெளியாகாது எனத் தயாரிப்பு நிறுவனம் அறிவித்திருந்தது குறிப்பிடத்தக்கது.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+