பாஜகவின் அடுத்த தலைவர் யார்? வானதி சீனிவாசன் திடீரென செய்த போஸ்ட்.. தாமரையில் திக்திக்
சென்னை: பாஜகவின் அடுத்த தலைவர் யார் என்ற கேள்வி நிலவும் நிலையில் பாஜக எம்எல்ஏ வானதி சீனிவாசன் செய்துள்ள போஸ்ட் ஒன்று விவாதங்களை ஏற்படுத்தி உள்ளது.
பாஜக தலைவர் மாற்றம் விரைவில் நடக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. இளைஞர் ஒருவர் பாஜக தலைவராக வரப்போவதாக தகவல்கள் வருகின்றன.

முதல்முறை மத்திய அமைச்சராக பொறுப்பேற்றுள்ள பாஜக தேசிய தலைவர் ஜே பி நட்டா சுகாதாரத்துறை அமைச்சராக தேர்வாகி உள்ளார். சுகாதாரம் மற்றும் குடும்ப நல அமைச்சகம் எனப்படும் இந்த துறையின் அமைச்சராக கடந்த முறை மன்சுவிக் மாண்டவியா இருந்த நிலையில் நட்டா அந்த துறையை பெற்றுள்ளார்.
இந்த நிலையில்தான் பாஜகவின் தேசிய தலைவராக இருக்கும் ஜே பி நட்டா மாற்றப்பட உள்ளதாக தகவல்கள் வெளியாகி உள்ளது. நட்டாவின் மாற்றம் கிட்டத்தட்ட உறுதியாகி உள்ளது
தலைவர் மாற்றம்: இத்தனை நாட்கள் வெறும் தேசிய தலைவராக இருந்த அவர் அமைச்சராகி உள்ளார். அவர் பாஜக சட்டப்படி இரண்டு பொறுப்புகளில் இருக்க முடியாது என்பதால் பாஜக தேசிய தலைவர் பதவியில் நீடிக்க முடியாது.
அதோடு அவரின் பதவிக்காலமும் முடிகிறது. இது போக பாஜகவின் புதிய தேசிய தலைவராக மத்திய பிரதேசம் முன்னாள் முதல்வர் சிவராஜ் சிங் சவுகான் தேர்வு செய்யப்பட உள்ளதாக தகவல் வெளியாகி வந்தது. சிவராஜ் சிங் சவுகான் மத்திய பிரதேசத்தின் மிகப்பெரிய தலைவர்.
சிவராஜ் சிங் சவுகான் இந்த லோக்சபா தேர்தலில் ஓரங்கட்டப்பட்டார். மோடி, நட்டா, அமித் ஷா மூலம் பிரச்சாரத்திற்கு கூட கொண்டு வரப்படாமல் ஓரம்கட்டுப்பட்டார். முதல்வர் பதவியும் பறிக்கப்பட்டு வீட்டில் அமர வைக்கப்பட்டார். இந்த நிலையில்தான் ஆர்எஸ்எஸ் அழுத்தம் காரணமாக தற்போது சிவராஜ் சிங் சவுகான் ஆக்டிவ் அரசியலுக்குள் மீண்டும் நுழைந்து உள்ளார். ஆனால் அவரும் தற்போது அமைச்சராகி உள்ளார்.

யார் அடுத்த தலைவர்?: அதன்படி கடந்த 2019ஆம் ஆண்டு முதல் பாஜகவின் தேசிய தலைவராக பதவி வகித்து வரும் ஜே.பி.நட்டாவின் பதவிக் காலம் இம்மாதத்துடன் நிறைவடைகிறது. பாஜக கட்சி விதிப்படி, கட்சித் தலைவரின் பதவிக் காலம் மூன்று ஆண்டுகள் ஆகும்.
2023 ஜனவரியில் நட்டாவின் பதவிக்காலம் முடிந்த நிலையில் மக்களவை தேர்தலையொட்டி மேலும் ஓராண்டுக்கு பதவி காலம் நீட்டிக்கப்பட்டது. பாஜகவின் புதிய தேசிய தலைவராக மத்திய பிரதேசம் முன்னாள் முதல்வர் சிவராஜ் சிங் சவுகான் தேர்வு செய்யப்பட உள்ளதாக தகவல்கள் வந்த நிலையில் அவர் அமைச்சர் ஆவதால் வேறு ஒருவர் பாஜக தலைவராக உள்ளதாக தகவல்கள் வருகின்றன.
ஆர்எஸ்எஸ் சார்பாக ஹரியானா முன்னாள் முதல்வர் மனோகர் லால் கட்டார் பெயர் பரிந்துரைக்கப்பட்ட நிலையில் அவரும் அமைச்சர் ஆகிவிட்டார். இதையடுத்து பாஜக தேசிய செயலாளர் வினோத் தாவ்டே பெயர் தலைவருக்கான லிஸ்ட்ல பரிசீலனையில் இருப்பதாக தகவல் வெளியாகி உள்ளது.
வானதி சீனிவாசன்: பாஜகவின் அடுத்த தலைவர் யார் என்ற கேள்வி நிலவும் நிலையில் பாஜக எம்எல்ஏ வானதி சீனிவாசன் செய்துள்ள போஸ்ட் ஒன்று விவாதங்களை ஏற்படுத்தி உள்ளது.
அவர் செய்துள்ள போஸ்டில், 1951-ல் ஜன சங்கம் தொடங்கப்பட்டது முதல் 1980-ல் அது பாஜகவை மாறியது தொடங்கி இன்று வரை, பாஜகவின் தலைவர் யார் என்பது அவர் தேர்ந்தெடுக்கப்படும் முறை யாருக்கும் தெரியாது. பாஜக தேசியத் தலைவராக இருந்தவர்களின் வாரிசுகள் யாரும் தலைவர் பதவிக்கு வந்ததில்லை.
அடுத்த பாஜக தலைவர் யார் என்பது யாருக்கும் தெரியாது. ஆனால், காங்கிரஸில் அடுத்த 50 ஆண்டுகளுக்குப் பிறகு யார் தலைவர் என்பது அனைவருக்கும் தெரியும். இதுதான் வாரிசு அரசியல். இதைத்தான் பாஜக எதிர்க்கிறது... அதனால் அடுத்த பாஜக தலைவர் யார் என்பது யாருக்கும் தெரியாது. என்று போஸ்ட் செய்துள்ளார்.
இளைஞர் ஒருவர்: இது போக அனுராக் தாக்கூர் பாஜக தேசிய தலைவர் ஆகலாம் என்றும் கூறப்படுகிறது. புதிய அமைச்சர்கள் குழுவில் இருந்து அனுராக் தாக்கூர் விலக்கப்பட்டிருப்பது, கட்சி அமைப்புக் கட்டமைப்பில் அவருக்கு இடமளிக்கப்படுவதற்காகத்தான்.. அவர் தலைவர் ஆக சான்ஸ் உள்ளது என்று பாஜக வட்டாரங்கள் தெரிவிக்கின்றன. கடந்த முறை தகவல் மற்றும் ஒளிபரப்பு மற்றும் விளையாட்டு இலாகாக்கள் அமைச்சராக இருந்தவருக்கு இந்த முறை பதவி கொடுக்கப்படாத நிலையில் அவர் கட்சி தலைவர் ஆவதாக செய்திகள் வருகின்றன.
-
முதல் நாளே அமெரிக்காவுக்கு வெற்றி.. ஹார்முஸ் வழியாக 34 கப்பல்கள் சென்றன - டிரம்ப் பதிவு -
கைப்புள்ள, நாய் சேகர்னு எனக்கும் பட்ட பெயர் வைக்க தெரியும்! பிடிஆருக்கு சுந்தர் சி பதிலடி -
ஹார்முஸில் இறங்கும் இந்திய கடற்படை.. நடுக்கடலில் சிக்கியுள்ள இந்திய கப்பல்களை மீட்க அதிரடி ஆபரேஷன் -
10 கோடி வீட்டை 100 கோடிக்கு விற்ற நடிகை மீனா.. சென்னையில் நில மதிப்பு ராக்கெட் போல் உயர்ந்த இடங்கள் -
கடைசி சான்ஸ்.. மிஸ் பண்ணிடாதீங்க.. பிறப்புச் சான்றிதழில் வருது மேஜர் முடிவு.. ஆவணங்களை ரெடி பண்ணுங்க -
வார்த்தையை விட்ட எடப்பாடி பழனிசாமி.. வரிந்து கட்டிய பிரேமலதா.. செல்போனில் காரசார உரையாடல் -
”5 கேப்டன் இருந்தும் என் பக்கத்துல இருக்கான் மச்சா” மும்பை அணியை செய்யும் சிஎஸ்கே! தெறிக்கும் மீம்ஸ் -
நாய்க்கு கூட நன்றி இருக்கும்.. எடப்பாடி பழனிசாமி குறித்து சசிகலா விமர்சனம் -
LIK vs TN 2026 box office: மூன்று நாள் முடிவில் பிரதீப் ரங்கநாதன் Vs நட்டி யாருக்கு வெற்றி? வசூல் நிலவரம் -
மகளிருக்கு டபுள் ஜாக்பாட்.. மகளிர் உரிமை தொகை + ரூ.8000.. மொத்தம் ரூ.10,000! திமுக மெகா ப்ளான்! -
Tamil New Year Wishes in Tamil: சித்திரை திருநாளில் தமிழ் புத்தாண்டு வாழ்த்துக்கள் பகிர அழகிய படங்கள் -
ஜனநாயகன் லீக்.. இயக்குநர் அமீர் கருத்துக்கு வலுக்கும் எதிர்ப்பு.. ஆர்கே செல்வமணி விளக்கம்












Click it and Unblock the Notifications