வண்டலூர் குழந்தைகள் காப்பகத்தில்.. 18 சிறுமிகளுக்கு பாலியல் தொல்லை.. 3 பேர் கைது.. பரபர பின்னணி!
சென்னை: வண்டலூர் அருகே குழந்தைகள் காப்பகத்தில் 18 சிறுமிகள் பாலியல் தொல்லைக்கு ஆளான சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. இந்த விவகாரம் தொடர்பாக விடுதி உரிமையாளர்களின் கார் ஓட்டுநர் கைது செய்யப்பட்டுள்ளார். அதுமட்டுமல்லாமல் பாலியல் தொல்லை தொடர்பாக விடுதி காப்பாளரிடம் சிறுமிகள் புகார் அளித்த போது, அவர் எந்த நடவடிக்கையும் எடுக்காமல் அமைதி காத்ததும் அதிர்ச்சியை ஏற்படுத்தி இருக்கிறது.
செங்கல்பட்டு மாவட்டம் வண்டலூர் அருகில் தனியார் குழந்தைகள் காப்பகம் செயல்பட்டு வருகிறது. இந்த குழந்தைகள் காப்பகத்தை அருள்தாஸ் மற்றும் அவரது மகள் பிரியா ஆகியோர் நடத்தி வந்துள்ளனர். இந்த காப்பகத்தில் பெற்றோரை இழந்த 40 சிறுமிகள் தங்கி படித்து வந்திருக்கின்றனர். இந்த நிலையில் அங்கு படித்து வந்த சிறுமிகளுக்கு அருள்தாஸின் கார் ஓட்டுநர் பழனி என்பவர் பாலியல் தொல்லை கொடுத்திருக்கிறார்.

சிறுமிகளுக்கு பாலியல் தொல்லை
பழனியின் இந்த செயல் தொடர்ச்சியாக நடந்து வந்திருக்கிறது. இதன் காரணமாக சிறுமிகள் காப்பக உரிமையாளர் அருள்தாஸிடம் கூறி இருக்கின்றனர். ஆனாலும் கார் ஓட்டுநர் பழனி மீது எந்த நடவடிக்கையையும் அருள்தாஸ் எடுக்கவில்லை. பல்வேறு சிறுமிகளும் புகார் அளித்திருக்கின்றனர். அப்போது அருள்தாஸ் அமைதி காத்து வந்திருக்கிறார்.
சிறுமிகள் புகார்
இந்த நிலையில் குழந்தைகள் காப்பகத்தை மாவட்ட குழந்தைகள் நல அலுவலர்கள் ஆய்வு செய்திருக்கின்றனர். அப்போது கார் ஓட்டுநர் பழனியால் பாதிக்கப்பட்டுள்ள சிறுமிகள் சிலர் குழந்தைகள் நல அலுவலர்களிடம் புகார் அளித்துள்ளனர். பின்னர், உடனடியாக அவர்கள் கூடுவாஞ்சேரி அனைத்து மகளிர் காவல் நிலையத்தில் புகார் அளித்துள்ளனர்.
3 பேர் கைது
உடனடியாக குழந்தைகள் காப்பகத்திற்கு வந்த போலீசார், கார் ஓட்டுநர் பழனியை போக்சோ சட்டத்தின் கீழ் கைது செய்தனர். அதுமட்டுமல்லாமல் சிறுமிகள் புகார் அளித்த போது கண்டுகொள்ளாமல் மறைத்த காப்பக உரிமையாளர் அருள்தாஸ் மற்றும் அவரின் மகள் பிரியா ஆகியோரும் விசாரணைக்காக காவல் நிலையம் அழைத்து செல்லப்பட்டனர்.
18 சிறுமிகள்
இதனிடையே விசாரணையின் போது அருள்தாஸ்க்கு உடல்நலக்குறைவு ஏற்பட்டு மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டுள்ளார். இதனால் பிரியா மற்றும் பழனி ஆகிய இருவரிடமும் போலீசார் விசாரணை மேற்கொண்டனர். இதனிடையே மொத்தமாக பழனியால் 18 சிறுமிகள் பாலியல் தொல்லைக்கு ஆளானது கண்டுபிடிக்கப்பட்டது.
போலீஸ் விசாரணை
இதனைத் தொடர்ந்து 3 பேர் மீதும் மொத்தமாக 11 பிரிவுகளின் கீழ் போலீசார் வழக்குப்பதிவு செய்திருக்கின்றனர். குழந்தைகள் காப்பகத்திலேயே கார் ஓட்டுநர் 18 சிறுமிகள் பாலியல் தொல்லை கொடுத்துள்ள சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தி இருக்கிறது. அதேபோல் காப்பகத்தில் உள்ள மற்ற குழந்தைகளிடம் விசாரணை மேற்கொள்ளப்பட்டு வருகிறது.
-
4 தொகுதி இடைத்தேர்தலை புறக்கணிக்க திமுக முடிவு? ஸ்டாலினின் ராஜதந்திரம்! -
ஸ்டாலின் மீதிருந்த கோபம்.. தவெகவிற்கு தாவுகிறார் திமுகவின் இளம் நம்பிக்கை? பெரிய டீமும் போகுது -
கட்டப்பா கூட ஒரு டைம்தான் குத்துனாரு.. இப்படி தினம் தினம் பண்ணுறீங்களே! கோபத்தின் உச்சியில் ஸ்டாலின் -
MDMK: எம்எல்ஏக்கள் ராஜினாமா இல்லை.. புது வியூகம் எடுக்கும் மதிமுக? திமுகவுக்கு கல்தா கன்பார்ம்? -
தமிழக அமைச்சரவையில் சீனியாரிட்டி லிஸ்ட்.. பின் தள்ளப்பட்ட செங்கோட்டையன்.. வன்னி அரசுக்கு எந்த இடம் -
முதல்வர் விஜய்யே நினைத்தாலும் பரந்தூர் விமான நிலையத்தை ரத்து செய்வது மிக கடினம்.. ஏன் தெரியுமா? -
வளைகுடாவில் இந்தியாவிற்கு கிடைத்தது மாற்றுப்பாதை.. ஓமனால் பெரிய குட்நியூஸ் -
திடீரென டெல்லியில் டிஜிபி சந்தீப் ராய் ரத்தோர்.. அமித்ஷா – உள்துறை செயலாளருடன் சந்திப்பு.. பின்னணி -
DMART முதலாளிக்கு இப்படியொரு பிஸ்னஸ் இருக்கா.. ஒரு வீட்டுக்கு ரூ.27.5 லட்சம் .. ஆடிப்போன மும்பை மக்கள்! -
உதயசூரியனில் போட்டியிட்ட 2 மதிமுக எம்எல்ஏக்கள் ராஜினாமா செய்ய முடிவு? திமுகவுக்கு பெருத்த ஷாக்! -
விவசாயக் கடன் தள்ளுபடி.. பொய் சொல்லி ஏமாற்ற மாட்டேன்! விவசாயிகளே கவலைப்படாதீங்க.. விஜய் உத்தரவாதம் -
அண்ணாமலை ஒரு பிராண்டு.. விட்றாதீங்க! லெட்டரைப் பார்த்ததும் பதறிப் போன டெல்லி! குவியும் ஆஃபர்கள்!












Click it and Unblock the Notifications