வண்டலூரில் விழுந்த சூப்பர் சர்ப்ரைஸ்.. உயிரியல் பூங்காவில் இத்தனை வசதிகளா? சுற்றுலா பயணிகளுக்கு ஜாலி
சென்னை: காணும் பொங்கல் பண்டிகையையொட்டி பொதுமக்கள் பூங்கா, கடற்கரை மற்றும் சுற்றுலா தலங்களுக்கு குடும்பத்துடன் செல்வது வழக்கமாகும்.. அந்தவகையில், வண்டலூர் பூங்காவில் நேற்று முதல் ஆயிரக்கணக்கான பார்வையாளர்கள் குவிந்து வருகிறார்கள்.. பூங்காவில் சுற்றுலா பயணிகளின் வசதிக்காக பல்வேறு வசதிகள் ஏற்பாடு செய்யப்பட்டு உள்ள நிலையில், இன்றைய தினமும் ஏராளமானோர் வரக்கூடும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
வண்டலூர் பூங்காவில் அரிய வகை மிருகங்கள் உள்ளன.. 2,400 மிருகங்கள் இங்கு பராமரிக்கப்பட்டு வருகின்றன.. அரியவகை பறவைகளும் உள்ளன.. இதனால், ஏராளமான சுற்றுலா பயணிகள் இதை பார்ப்பதற்காக குவிவார்கள்.. முக்கியமாக குழந்தைகளுக்கு இந்த பூங்காவை ஆர்வத்துடன் காட்டி மகிழ்வார்கள்.

வண்டலூர் பூங்கா சர்ப்ரைஸ்
எப்படியும் ஒரு நாளைக்கு, 2500 முதல் 3000 பேர் வரை இந்த பூங்காவுக்கு வந்து செல்கிறார்கள்... அதுவும் லீவு நாட்கள் என்றால், 10 ஆயிரம் பேர்கூட வந்து செல்கிறார்கள்.
கடந்த டிசம்பர் மாதம் டிசம்பரில் மட்டும் 1.33 லட்சத்திற்கும் மேற்பட்ட பார்வையாளர்கள் பூங்காவிற்கு வருகை தந்துள்ளனர். ஆங்கில புத்தாண்டு தினத்தன்று வண்டலூர் உயிரியல் பூங்காவுக்கு 13 ஆயிரத்து 200 பேர் வருகை தந்திருந்தனர்.. அதேபோல அரையாண்டு விடுமுறை நாட்களில் அறிஞர் அண்ணா உயிரியல் பூங்காவிற்கு 1 லட்சத்து 33 ஆயிரம் பேர் வந்து சென்றிருக்கிறார்கள்..
சிறப்பு ஏற்பாடுகள்
இன்றைய தினம் காணும் பொங்கல் என்பதால், அதிக அளவிலான சுற்றுலா பயணிகள் வருகை தரக்கூடும் என்று எதிர்பார்க்கப்படுகிறது... இதற்கான சிறப்பு வசதிகளை பூங்கா நிர்வாகம் செய்துள்ளது..
குறிப்பாக, பூங்கா பார்வை நேரம் காலை 8 மணி முதல் மாலை 5 மணி வரை நீட்டிக்கப்பட்டுள்ளது. தனித்தனி வாகன நிறுத்துமிடங்கள் இருசக்கர வாகனங்கள், கார்கள் மற்றும் கனரக வாகனங்களுக்கு ஏற்படுத்தப்பட்டு, வாகன நிறுத்துமிடங்களில் இருந்து பூங்காவிற்கு செல்ல 10 கூடுதல் பஸ்கள் இயக்கப்படுகின்றன.
கழிப்பறை, குடிநீர், சக்கர நாற்காலி வசதி
பார்வையாளர்களுக்கு மின்னணு நுழைவுச் சீட்டுகள் கியாஸ்க், வாட்ஸ்அப் இணையதளம் மற்றும் வண்டலூர் பூங்கா மொபைல் செயலி மூலம் வழங்கப்படுகின்றன. இலவச வைபை வசதி, பணமாக டிக்கெட் வாங்க ஒரு கவுன்டர் மட்டுமே செயல்படுகிறது. பூங்காவிற்குள் பிளாஸ்டிக் கவர்களில் அடைக்கப்பட்ட உணவுப்பொருட்கள், பிளாஸ்டிக் குடிநீர் பாட்டில்கள், கரும்பு, பீடி, சிகரெட், மது மற்றும் தடை செய்யப்பட்ட பொருட்களை கொண்டு வர அனுமதி இல்லை.
பார்வையாளர்களுக்காக 4 புதிய கழிப்பறை வளாகங்கள் மற்றும் 2 மாற்றுத்திறனாளிகள் கழிப்பறைகள் உருவாக்கப்பட்டு, பூங்கா முழுவதும் சுத்திகரிக்கப்பட்ட குடிநீர் வசதி கிடைக்கிறது. மாற்றுத்திறனாளிகள் பார்வையாளர்களுக்கு சக்கர நாற்காலி வசதி மற்றும் ஏற்புடைய நடை பாதைகள் அமைக்கப்பட்டுள்ளன. கூடுதல் தகவல் பலகைகள் மற்றும் திசை குறிப்பு பலகைகள் பல இடங்களில் நிறுவப்பட்டுள்ளன.
கண்காணிப்பு கேமராக்கள்
பாதுகாப்புக்காக 100க்கும் மேற்பட்ட போலீசார், 65 வனத்துறை பணியாளர்கள் மற்றும் 60 தன்னார்வலர்கள் பணியில் ஈடுபட்டனர். பார்வையாளர்களின் நடமாட்டத்தை கண்காணிக்க 100க்கும் மேற்பட்ட கண்காணிப்பு கேமராக்கள் பொருத்தப்பட்டுள்ளன.
தினமும் மாலை 4 மணிக்கு யானைகளுக்கு உணவு வழங்கும் நிகழ்ச்சி நடைபெறும் மற்றும் பார்வையாளர்களுக்காக 7D திரையரங்கு இயக்கப்படுகிறது.. இவை யாவும் சுற்றுலா பயணிகளை கவரும் என்றே எதிர்பார்க்கப்படுகிறது.












Click it and Unblock the Notifications