வண்டலூர் பூங்காவுக்கு போறீங்களா.. புதிய நுழைவு கட்டணம் இன்று முதல் அமல்! கிண்டி பூங்காவிலும் மாற்றம்
சென்னை: சென்னையை அடுத்த வண்டலூர் உயிரியல் பூங்காவில் உயர்த்தப்பட்ட கட்டண முறை இன்று முதல் அமலுக்கு வந்தது.
தமிழக சுற்றுச்சூழல், காலநிலை மாற்றம் மற்றும் வனத்துறை அரசு கூடுதல் தலைமைச் செயலாளர் சுப்ரியா சாஹூ வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் கூறியிருப்பதாவது: தமிழ்நாட்டில் வண்டலூர் அறிஞர் அண்ணா உயிரியல் பூங்கா, கிண்டி சிறுவர் பூங்கா, சேலம் குரும்பப்பட்டி உயிரியல் பூங்கா, வேலூர் அமிர்தி உயிரியல் பூங்கா ஆகிய 4 உயிரியல் பூங்காக்கள் செயல்பட்டு வருகின்றன.

இந்த பூங்காக்கள் பார்வையாளர்களிடம் இருந்து பெறப்படும் நுழைவுக் கட்டண வருவாய் அடிப்படையில் செயல்பட்டு வருகின்றன. உணவு, ஊதியம், அத்தியாவசிய மற்றும் கட்டாய பராமரிப்பு மற்றும் பிற வளர்ச்சிப் பணிகளுக்கான செலவினங்களை சமாளிக்க கட்டண வருவாய் பயன்படுத்தப்படுகிறது.
அதன்படி, 5 வயதுக்கு உட்பட்ட குழந்தைகள் மற்றும் மாற்றுத்திறனாளிக்கு இலவச நுழைவு கட்டணம் தொடர்கிறது. 5 முதல் 17 வயது வரை உள்ள அரசு மற்றும் அரசு உதவி பெறும் பள்ளி மாணவர்களுக்கான 2 அடுக்கு கட்டணம் ஒரு குழுவாக நிர்ணயம் செய்யப்பட்டு அவர்களுடன் வரும் ஆசிரியர்களுக்கும் சலுகை கட்டணமாக ரூ.20 மட்டும் வசூலிக்கப்படும்.
வண்டலூர் உயிரியல் பூங்காவிற்கு வருகை தரும் பெரியவர்களின் நுழைவு கட்டணம் ரூ.115-ல் இருந்து ரூ.200 ஆக நிர்ணயிக்கப்பட்டுள்ளது. பேட்டரி வாகன கட்டணம் ரூ.100-ல் இருந்து ரூ.150 ஆகவும் சஃபாரி வாகன கட்டணம் ரூ.50-ல் இருந்து ரூ.150 ஆகவும் நிர்ணயிக்கப்பட்டுள்ளது. வீடியோ கேமரா ஒளிப்பதிவு கட்டணம் ரூ.500-ல் இருந்து ரூ.750 ஆக நிர்ணயம் செய்யப்படுகிறது.
சக்கர நாற்காலிக்கான ரூ.25 கட்டணம் ரத்து செய்யப்படுகிறது. வாகன கட்டணங்கள் மணிக்கணக்கில் இருந்து நாள் கணக்கில் நிர்ணயிக்கப்பட்டுள்ளது. கிண்டி சிறுவர் பூங்காவில் நுழைவு கட்டணமாக பெரியவர்களுக்கு ரூ.60 ஆகவும், 5 முதல் 12 வயது சிறுவர்களுக்கு ரூ.10 ஆகவும் நிர்ணயிக்கப்பட்டுள்ளது. வீடியோ கேமராவுக்கு ரூ.200 நிர்ணயிக்கப்பட்டுள்ளது.
சேலம் குரும்பப்பட்டி உயிரியல் பூங்காவிற்கு நுழைவு கட்டணமாக பெரியவர்களுக்கு ரூ.50-ம், 5 முதல் 12 வயது சிறுவர்களுக்கு ரூ.10-ம் நிர்ணயிக்கப்பட்டுள்ளது. வீடியோ கேமரா பதிவுக்கு ரூ.150 வசூலிக்கப்படுகிறது. வேலூர் அமிர்தி உயிரியல் பூங்கா நுழைவு கட்டணமாக பெரியவர்களுக்கு ரூ.30-ம், 5 முதல் 12 வயது சிறுவர்களுக்கு ரூ.10-ம் வசூலிக்கப்படுகிறது. இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.
-
டெல்லியிலும் கொங்கு சமையல் மணக்கப்போகுது.. முதல்வர் விஜய்க்கு சமைக்கும் மாதம்பட்டி ரங்கராஜ்! -
உதயநிதி வீட்டை கேட்கும் ஆதவ் அர்ஜுனா.. இந்த வீடுதான் வேண்டும்.. கோட்டையில் நீடிக்கும் மல்லுக்கட்டு -
சீமான் வீட்டு விசேஷத்தில் தாய்மாமன் சீருடன் அனிதா ராதாகிருஷ்ணன்! வாசல் வரை வரவேற்று.. என்ன ஒரு பாசம் -
எடப்பாடி அனுப்பிய மெசேஜ்.. சி.வி. சண்முகம் வீட்டில் உறுதிபடுத்திய கே.சி வீரமணி.. இணைகிறது அதிமுக -
நாளுக்கு நாள் மோசமாகும் இந்தியா.. குட்டி குட்டி நாடெல்லாம் நம்மை முந்திக்கொண்டு செல்கிறது! -
விஜய் நியமித்த 2 நாளில்.. IPS அருணை கோர்ட்டிலேயே காத்திருக்க சொன்ன நீதிபதி சுவாமிநாதன்.. ஏன்? -
420 யூனிட் ஓடியிருக்கிறது.. ஆனால் 200 யூனிட் கழிக்காமல் 100 யூனிட் கழித்தது ஏன்? விளக்கம் -
'நீங்க உம் மட்டும் கொட்டுங்க தெய்வமே.. மற்றதை நான் பார்த்துக்கிறேன்' தெறிக்கும் ஆதவ் அர்ஜுனா மீம்ஸ்! -
அவரை முதல்ல தூக்கணும்.. பிளான் போட்டு வேலை பார்த்த மூவர் அணி.. விஜய்க்கு எகிறிய பிரஷர்.. என்னாச்சு? -
கடைகளை மூடிய பணியாளர்கள்.. ஸ்தம்பித்த டாஸ்மாக்.. இரவோடு இரவாக அமைச்சர் விக்னேஷ் வெளியிட்ட அறிவிப்பு -
கோவை மக்களே 5 ஆண்டுகளுக்கு பின் வந்த குட்நியூஸ்.. விஜய் கொடுத்த கிரீன் சிக்னல் - டூயல் கான்செப்ட் பஸ் ஸ்டாண்ட்! -
அப்பறம் வச்சிக்கிறேன்.. கடுப்பான விஜய்.. கோபத்தின் உச்சிக்கே போயிட்டாராமே.. அப்படி என்ன நடந்தது?












Click it and Unblock the Notifications