145 கிமீ வேகம்.. சோதனை ஓட்டத்தில் மாஸ் காட்டிய வந்தே பாரத் சரக்கு ரயில்! எப்போது பயன்பாட்டுக்கு வரும்?

Subscribe to Oneindia Tamil

சென்னை: வந்தே பாரத் சரக்கு ரயிலுக்கான சோதனை ஓட்டம் இன்று நடைபெற்றது. சென்னை ஐசிஎஃப்பில் தயாரிக்கப்பட்ட இந்த ரயில் சோதனை ஓட்டத்தின் போது அதிகபட்சமாக மணிக்கு 145 கிலோ மீட்டர் வேகத்தை எட்டியது. சரக்குகளை விரைவாக கொண்டு செல்வதற்கு ஏற்ற வகையில், இந்த சரக்கு ரயில் இயக்கப்பட உள்ளது. அடுத்த ஆண்டு ஜனவரி மாதம் ரயில் பயன்பாட்டுக்கு வரும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. சோதனை ஓட்டம் எங்கு நடைபெற்றது உள்ளிட்ட விவரங்களை இங்கே விரிவாக பார்க்கலாம்.

இந்தியாவில் அதிநவீன சொகுசு வசதிகளுடன் வந்தே பாரத் ரயில்களுடன் இயக்கப்பட்டு வருகின்றன. வந்தே பாரத் ஸ்லீப்பர் ரயில்களையும் முக்கியமான வழித்தடங்களில் இயக்க ரயில்வே ஆயத்தமாகி வருகிறது. பயணிகளுக்கான வந்தே பாரத் ரயிலை போன்று, சரக்குகளை கொண்டு செல்லவும் வந்தே பாரத் சரக்கு ரயில் விரைவில் இயக்கப்பட உள்ளது.

Vande Bharat Freight Train Trial Run Operated at 145 km h - When will it enter service

வந்தே பாரத் சரக்கு ரயில்

அழுகக்கூடிய பொருட்கள், மதிப்புமிக்க பொருட்கள் கொண்டு செல்க இந்த வந்தே பாரத் சரக்கு ரயில்கள் இயக்கப்படும் என்று தெரிகிறது. சென்னையில் உள்ள ரயில்வே பெட்டி தொழிற்சாலை இந்த ரயிலை தயாரித்துள்ளது. இந்த ரயிலின் தொழில் நுட்ப அடிப்படையிலான சோதனை ஓட்டம் இன்று நடைபெற்றது. சோதனை ஓட்டத்தின் போது மணிக்கு 145 கிலோ மீட்டர் வேகத்தை இந்த ரயில் எட்டியுள்ளது.

கோடா டிவிஷனில் இந்த சோதனை ஓட்டம் நடைபெற்றது. சோதனை ஒட்டம் பற்றி ரயில்வே அதிகாரி சவுரவ் ஜெயின் கூறியதாவது:- "இந்த சோதனைகள் ஆராய்ச்சி வடிவமைப்பு மற்றும் தரநிலைகள் அமைப்பு' (RDSO) மூலம் மேற்கொள்ளப்பட்டது. சென்னையின் ஐசிஎஃப் (ICF)-லிருந்து கோட்டா கோட்டத்திற்கு ரயிலின் புரோடைப் மாடல் பெட்டி கொண்டு வரப்பட்டது.

145 கிமீ வேகத்தில் இயக்கப்பட்டது

இந்திய ரயில்வேயின் அதிவேகச் சோதனைக்கான வழித்தடங்களில் ஒன்றாக கோட்டா - நாக்தா - சவாய் மாதோபூர் வழித்தடம் உள்ளது. இந்த ரூட்டில் தொழில்நுட்பச் சோதனைகள் நடத்தப்பட்டு வருகின்றன. முதல் நாளான இன்று சோதனை ஓட்டம் கோடாவில் இருந்து மஹித்புர் சாலை வரை மணிக்கு 120 கிலோ மீட்டர் வேகம் வரையிலும் , மஹித்பூர் ரோடு - பவானி மண்டி ரூட்டில் மணிக்கு 120 கி.மீ வரை 135 கி.மீ வேகம் வரையில் இயக்கப்பட்டது.

பின்னர் இதே ரூட்டில் மஹிதாபூர் சாலை டூ கோடா வரையில் வரும் போது மணிக்கு 145 கி.மீ வேகம் வரை எட்டியது. முதல் நாளிலேயே அதிகபட்ச வேகத்தை எட்டியுள்ளது. அனைத்து வழித்தடங்களிலும் கிரீன் சிக்னல் ஏற்படுத்தப்பட்டு இடையூறு இல்லாமல் இந்த சோதனை ஓட்டம் நடைபெற்றது" என்றார்.

இன்று நடைபெற்ற சோதனைகள் என்னென்ன?

* எமெர்ஜென்சி பிரேக்கிங் டிஸ்டன்ஸ் டெஸ்ட்
* கப்ளர் ஃபோர்ஸ் சோதனை,
* வளைவு செயல்திறன் சோதனை
* பிரேக்கிங் மற்றும் அதிர்வு சோதனைகள்
* மறு உருவாக்க ஆற்றல் மற்றும் PAPIS சோதனைகள்
* சிக்னல் மற்றும் தொலைத்தொடர்பு சோதனைகள்
* கதவு செயல்பாடு மற்றும் பிற பாதுகாப்பு சோதனைகள்
* சிசிடிவி, லைட்டிங் மற்றும் ஷார்ட் சர்க்யூட் சோதனைகள் ஆகியவை நடைபெற்றன.

எப்போது பயன்பாட்டுக்கு வரும்?

16 பெட்டிகள் கொண்ட இந்த வந்தே பாரத் ரயிலில், இரண்டு டிரைவிங் டிரெயிலர் கோச்கள் மற்றும் இரண்டு நான் டிரைவிங் டிரெயிலர் கோச்கள் போக 12 பார்சல் பெட்டிகள் உள்ளன. 397 டன்கள் வரை இவற்றில் ஏற்ற முடியும். குளிர்சாதன வசதி, சரக்குகளை எளிதாக ஏற்றி இறக்க ரோலர் வசதி உள்ளிட்டவை இடம் பெற்றுள்ளன. சோதனை ஓட்டம் வெற்றிகரமாக முடிந்தால், நாட்டின் முதல் வந்தே பாரத் சரக்கு ரயில் சேவையை வரும் 2027-ஜனவரியில் தொடங்க ரயில்வே திட்டமிட்டுள்ளது.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+