கிளம்பிருச்சே.. சாதாரண் வந்தே பாரத் ரயில் வரப்போதுங்க.. விரைவில் ஒப்புதல்? ரயில்வே சொன்ன குட்நியூஸ்
சென்னை: மிகுந்த ஆர்வத்தை ஏற்படுத்தி கொண்டிருக்கும், சாதாரண் வந்தே பாரத் எப்போது பயன்பாட்டுக்கு வரப்போகிறது என்பது குறித்த தகவல் ஒன்று வெளியாகி உள்ளது. இது பயணிகளுக்கு மிகுந்த மகிழ்ச்சியை தந்து வருகிறது.
வந்தே பாரத் ரயில் பொதுமக்களின் அபார ஆதரவை பெற்று வருவதையடுத்து, ரயில்வேயின் அடுத்தடுத்த விரிவாக்கம் நடந்து வருகிறது.. அந்தவகையில், சாதாரண பெட்டிகளை கொண்ட "வந்தே சதரன்" ரயில்கள் தயாராகி கொண்டிருக்கின்றன.

கடந்த ஆகஸ்ட்டில் இதற்கான பணிகள் துவங்கியது.. மேற்கு வங்கத்தில் உள்ள சித்தரஞ்சன் தொழிற்சாலையில், இதற்கான இன்ஜின்களும் தயாரிக்கப்பட்டன.
முகப்பு தோற்றம்: ரெயில் பெட்டிகள் தயாரிப்பு பணிகள் சென்னை ஐசிஎப் ரெயில் பெட்டி தொழிற்சாலையில் தயாரிக்கப்பட்டு வருகின்றன... பெரம்பூரில் உள்ள கேரேஜ் மற்றும் லோகோ ஒர்க்சில் ஏரோடைனமிக் முகப்பு தோற்றம் கொண்ட 2 என்ஜின்கள் டிசைன் செய்யப்பட்டிருக்கின்றன.
ஏற்கனவே உள்ள வந்தே பாரத் ரயிலிலேயே ஒருசில மாற்றங்களை செய்து, இந்த ரயில் தயாராகிறது. அந்தவகையில், இந்த ரயிலில் ஏசி வசதி கிடையாது.. சாதாரண பெட்டிகள்தான் இருக்கும்.. 8 முன்பதிவு இல்லாத பெட்டிகள் உள்பட 22 பெட்டிகளை கொண்டது இந்த வந்தே சதரன் ரயில்கள்..
ஸ்பெஷல் வசதிகள்: கிட்டத்தட்ட சுமார் 1800 பயணிகள் இதில் பயணிக்க முடியுமாம்... படுக்கை வசதிகளுடன் விளக்குகளும் பொருத்தப்பட்டுள்ளன. ஃபேன்கள், சுவிட்சுகள், பேனல்கள், எல்இடி விளக்குகள் நவீன வடிவில் பொருத்தப்பட்டுள்ளன.. ஒவ்வொரு சீட்டிற்கும் செல்போன் சார்ஜர் வசதி உண்டு.. முக்கியமாக, மாற்றுத்திறனாளிகள் பயன்படுத்தும் வகையில் ஒரு கழிப்பறையும் இருக்கிறதாம். எல்எச்பி பெட்டிகளுடன் இருபுறமும் மின்சார என்ஜின் கொண்டு இயங்கும்.
எந்த ஒரு நிலையிலும் ரயிலை பின்னோக்கி இயக்க தேவையில்லை. 2 முனைகளிலும் இன்ஜின்கள் இருக்கும். ஒவ்வொரு ரயில் பெட்டியும் நிரந்தர கப்ளர்கள் மூலம் இணைக்கப்பட்டுள்ளதால், பெட்டிகள் பிரிந்து செல்வதற்கு வாய்ப்பு இருக்காது.. ரயில் நிற்கும்போது ஏற்படும் அதிர்வுகளை பயணிகள் உணர முடியாது.. மணிக்கு 130 கிலோமீட்டர் வேகத்தில் பயணிக்கக்கூடியது என்பதால், இந்த ரயில் மீதான எதிர்பார்ப்பு கூடியபடியே உள்ளது.
அதிகாரிகள் நம்பிக்கை: இவைகளை நாடு முழுவதும் இயக்கப்போவதாக தகவல்கள் வெளியாகி வரும்நிலையில், அநேகமாக இந்த மாத இறுதிக்குள் வந்தே சதரன் ரயில்கள் ஓடும் வகையில் தயாரிப்பு பணிகளை முடுக்கிவிட்டுள்ளதாக அதிகாரிகள் ஏற்கனவே தெரிவித்திருந்தனர். இந்நிலையில், சாதாரண வந்தே பாரத் ரயில் குறித்து இன்னொரு சிறப்பு தகவலை அதிகாரிகள் வெளியிட்டுள்ளனர்.
சாதாரண் வந்தே பாரத் ரயில் தயாரிப்பு பணிகள் இப்போது இறுதிகட்டத்தை எட்டிவிட்டது.. முதல் ரயில் தற்போது தயாராகி உள்ள நிலையில், அதற்கு முன்பாக, உத்தரபிரதேசம் மாநிலம், லக்னோவில் உள்ள ஆர்டிஎஸ்ஓ எனப்படும், ரயில்வே ஆராய்ச்சி வடிவமைப்பு மற்றும் தர நிறுவனத்துக்கு அனுப்பி வைக்கப்படவுள்ளது.
விரைவில் ஒப்புதல்?: லக்னோவில் உள்ள ரயில்வே ஆராய்ச்சி வடிவமைப்பு மற்றும் தர நிறுவனத்தின் ஒப்புதலுக்கு அனுப்பி வைக்கப்பட்டதுமே அங்கு ஆய்வு செய்யப்பட்டு, ஒப்புதல் தரப்படும். அதற்கு பிறகு, பயன்பாட்டிற்கு வரும். அந்தவகையில், இந்த மாத இறுதியில், இந்த ரயிலை அறிமுகப்படுத்த, ரயில்வே திட்டமிட்டுள்ளது" என்று நம்பிக்கை தெரிவித்துள்ளனர் அதிகாரிகள்.
-
கோயம்புத்தூர்-க்கு ஓடிவரும் ராகுல் ப்ரீத் சிங்.. ரேஸ் கோர்ஸ் சாலையில் புது ஆரம்பம்! -
பிறந்தநாளன்று புதிய கட்சி அறிவிப்பு? பாஜக மேலிடத்திடம் டைம் கேட்ட அண்ணாமலை.. ரகசிய மூவ்! -
தாய் பத்திரம் தொலைஞ்சிருச்சா? ஆன்லைனில் ஈஸியாக ஒரிஜினலை மீட்க 6 ஆவணங்கள் என்ன? சிம்பிள் ஸ்டெப்ஸ் -
முக்கோணப் போட்டியில் தமிழ்நாடு.. 112 ஐ நெருங்கும் விஜய்? மாஸ் கம்பேக்கில் திமுக.. பதற்றத்தில் அதிமுக -
பனையூர் பாபுவுக்கு ஸ்கெட்ச்! அடுத்து ஆளூர் ஷாநவாஸை நோக்கி குரைக்கிறார்கள்! சிந்தனைச் செல்வன் -
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்! -
அரசியலுக்கு முழுக்கு.. திமுக பொதுச்செயலாளர் பதவியில் இருந்து விலகும் துரைமுருகன் -
தந்தை இறப்பில் நடந்தது மீண்டும் வேண்டாம்.. தாயார் மறைவில் அஜித் குடும்பம் எடுத்த முடிவு! வருத்தத்தில் ரசிகர்கள் -
தமிழக பள்ளி – கல்லூரி மாணவர்களுக்கு அரசு பஸ்சில் இலவச பயணம்.. அறிவித்தார் போக்குவரத்து அமைச்சர் -
8-வது ஊதியக் குழு அப்டேட்! சாதாரண ஊழியருக்கு 1.5 லட்சம்.. மத்திய அரசு ஊழியர்களுக்கு குஷி -
முதல்வர் விஜய்யை சந்திக்காத மேயர் பிரியா! சுணக்கத்தில் சென்னை மாநகராட்சி.. மோதலா? து.மேயர் விளக்கம் -
திருச்சி-க்கு வரும் தாஜ்.. ஒரே நேரத்தில் 3 மெகா பிராண்ட்.. அதுவும் இந்த ஏரியாவுல!












Click it and Unblock the Notifications