வந்தே பாரத் ரயில் சேவை.. மறுபடியும் நொறுங்கிடுச்சே.. அரக்கோணம் கிட்ட என்ன நடந்தது.. அதென்ன நம்பர்?
சென்னை: வந்தே பாரத் ரயிலில் மீண்டும் ஒரு கல்வீச்சு சம்பவம் நடந்துள்ள நிலையில், வன்முறையாளர்களை போலீசார் வலைவீசி தேடி கொண்டிருக்கிறார்கள்.. அத்துடன், அவசர எண் ஒன்றும் பொதுமக்களுக்கு பகிரப்பட்டுள்ளது.
இந்தியாவில் ரயில்வே துறையானது, பல்வேறு அறிவிப்புகளை வெளியிட்டபடியே உள்ளது.. ரயில்வே துறையை நவீனமயமாக்க பல்வேறு நடவடிக்கைகளையும் மேற்கொண்டு வருகிறது.

எக்ஸ்பிரஸ் ரயில்களைபோல சதாப்தி, ராஜ்தானி போன்ற சொகுசு ரயில்கள் சில வழித்தடங்களில் இயக்கப்பட்டு வருகின்றன. இந்த நிலையில், விமானத்திற்கு நிகரான சொகுசு வசதிகளுடன் அதிவேக ரயிலாக வந்தே பாரத் ரயிலை ரயில்வே தற்போது நாடு முழுவதும் இயக்க தொடங்கியுள்ளது.
கனவு திட்டம்: தமிழகத்திலும் சென்னை- மைசூரு இடையேயும் சென்னை - கோவை வழித்தடத்திலும் இரு ரயில்கள் இயக்கப்பட்டு வருகின்றன. வந்தே பாரத் ரயிலில் பல நவீன வசதிகள் இருந்தாலும் வந்தே பாரத் அதிவேகத்தில் இயக்கப்படும் என்ற அறிவிப்புதான் பயணிகள் மத்தியில் பெரும் எதிர்பார்ப்பை ஏற்படுத்தியது.
இது பிரதமர் மோடியின் கனவு திட்டம் என்று சொல்லப்படுகிறது. அதனால்தான், அவரே ஒவ்வொரு ரயிலையும் நேரில் சென்று தொடங்கி வைத்தும் வருகிறார். முழுவதும் குளிரூட்டப்பட்ட பெட்டிகளாக கண்ணாடியால் மூடப்பட்டு சுழலும் இருக்கைகள், தொடுதிரை வசதிகள், நவீன கழிவறைகள் எனப் பல்வேறு சிறப்பம்சங்கள் இடம்பெற்றுள்ளன.

ரயில் என்ஜின்: ரயில் என்ஜின், ரயிலின் மற்ற பெட்டிகளுடனேயே இணைந்திருக்கும்.. அத்துடன், ரயிலில் தானியங்கி கதவுகள், ஏசி வசதி, வைஃபை வசதி, ஜிபிஎஸ், ஆடியோ, வீடியோ, பயோ டாய்லெட்டுகள் இப்படி பல வசதிகள் இதில் உள்ளன... இவைகள் உட்பட வந்தே பாரத் ரயிலின் பெட்டிகள் முழுக்க முழுக்க, சென்னை பெரம்பூர் லோகோ ஃபேக்ட்ரியில் தயாரிக்கப்படுகிறது.
பரோட்டாவில் புழு: ஆனால் வந்தே பாரத் ரயில் போக்குவரத்து துவங்கியதில் இருந்தே ஏகப்பட்ட புகார்கள் வெளிவந்தவண்ணம் உள்ளன.. ரயில் பெட்டியில் மழைநீர் ஒழுகியது, மர்ம நபர்கள் கல்வீசி தாக்குதல், பரோட்டாவில் புழுக்கள் போன்ற புகார்கள் வெளியாகிய வண்ணம் உள்ளன.. இதில் வந்தே பாரத் ரயிலில் வழங்கப்பட்ட உணவில் பரோட்டாவில் புழு நெளிந்தது அதுவும், வீடியோவாக வெளிவந்து அதிர்ச்சியை கிளப்பியது.. இது தொடர்பான விசாரணைகள் ஒருபக்கம் நடந்து கொண்டிருக்கும் நேரத்தில், இன்னொரு பரபரப்பை கிளப்பி கொண்டிருக்கிறது.
கர்நாடக மாநிலம் மைசூருவில் இருந்து சென்னைக்கு நேற்றுமுன்தினம் மாலை வந்தே பாரத் எக்ஸ்பிரஸ் ரயில் புறப்பட்டது. தமிழக எல்லைக்குள் நுழைந்து காட்பாடி மற்றும் அரக்கோணம் இடையே வந்து கொண்டிருந்தது. மகேந்திரவாடி - அன்வர்திகான் பேட்டை ரயில் நிலையங்களுக்கு இடையில் வந்தபோது மாலை சுமார் 6 மணி இருக்கும். அப்போது அடையாளம் தெரியாத நபர்கள் சிலர் ரயில் பெட்டி மீது கற்களை வீசியுள்ளனர். அதில் C6 பெட்டியில் 75 மற்றும் 76 ஆகிய இருக்கைகளுக்கு அருகில் இருந்த கண்ணாடி சேதம் அடைந்தது.
நொறுங்கிய கண்ணாடிகள்: இதைக்கண்ட பயணிகள் கடும் அதிர்ச்சி அடைந்தனர்... இதுபற்றி வந்தே உடனடியாக பாரத் எக்ஸ்பிரஸ் ரயில் டிரைவருக்கு தெரிவிக்கப்பட்டது. அவர் சென்னை ரயில்வே போக்குவரத்து கன்ட்ரோல் ரூமுக்கு தகவல் தந்தார்.. இதையடுத்து, அரக்கோணம் ரயில்வே பாதுகாப்பு படை போலீசில் வழக்குப்பதிவு செய்யப்பட்டது. வந்தே பாரத் எக்ஸ்பிரஸ் மீது கல் வீசி தாக்குதல் நடத்திய நபர்களை ரயில்வே போலீசாரும் தேடி கொண்டிருக்கிறார்கள்.. சேதமடைந்த கண்ணாடிகளையும் சரிசெய்யும் பணிகளும் நடந்து வருகின்றன.
அவசர உதவி எண்: இது குறித்து சென்னை கோட்ட ரயில்வே அதிகாரிகள் முக்கிய அறிவிப்பு ஒன்றை வெளியிட்டுள்ளார்.. "ரயில் மீது கற்களை வீசுவது என்பது ரயில்வே சட்டத்தில் 153 மற்றும் 154 பிரிவுகளின்கீழ் குற்றமாகும். இது போன்ற கல்வீச்சு சம்பவங்கள் நடந்தால், கட்டணமில்லா உதவி எண் 139-க்கு தகவல் தெரிவிக்கலாம்" என்று அறிவித்துள்ளார்..
இதுவரை 15 வந்தே பாரத் ரயில்கள் பயன்பாட்டிற்கு வந்துள்ள நிலையில் அவற்றில் சில ரயில்கள் மீது கல் வீசி தாக்குதல் நடத்தும் சம்பவங்கள் தொடர்ந்து நடந்து வருகின்றன.. கிட்டத்தட்ட 6, 7 முறை இப்படியான கல்வீசி தாக்குதலும், கண்ணாடி நொறுங்குதலும் நடந்தபடியே உள்ள நிலையில், இப்போது இன்னொரு சம்பவமும் நடந்துள்ளது மிகுந்த பரபரப்பை ஏற்படுத்தி வருகிறது.. வன்மம் கொண்ட அந்த வன்முறையாளர்கள் என்று, போலீசாரும் வலைவீசி தேடி வருகிறார்கள்.
-
தங்கம்.. 'தரை' தட்டியது ஏன்? கூடை கூடையாக மார்க்கெட்டில் விற்ற அரபு நாடுகள்.. ஒரு ராட்சனின் வீழ்ச்சி -
இமாச்சல் போல.. தமிழகத்தில் அரசு ஊழியர்களின் மாத சம்பளத்தை 30% குறைக்க வேண்டியது வரும்.. அன்புமணி -
டெல்லி தந்த கிரீன் சிக்னல்.. 4 வழியாக மாறும் தமிழ்நாட்டின் மூன்று முக்கிய சாலைகள்.. மெகா பிளான்! -
அதிமுக கூட்டணியில் பாமகவுக்கு 18, அமமுகவுக்கு 11 தொகுதிகள் ஒதுக்கீடு! -
PHH, AAY ரேஷன் கார்டுதாரர்களுக்கு முக்கிய அறிவிப்பு! கார்டு காலி ஆயிடும்..ரேகை வைக்கலைனா ப்ளாக் தான் -
நாகர்கோவில் எம்எல்ஏ காந்திக்கு கல்தா.. பாஜக தலைமை முடிவால் கலக்கம் -
பெட்ரோல் இல்லை.. ஆசிய நாடுகளுக்கு ‘நோ’ சொன்ன அராம்கோ? உலக அரசியலே தடம் புரள போகுது? -
பாரதத்தின் நிரந்தர பிரதமர்.. வட இந்தியாவில் திமுக சிலிண்டர் விளம்பரம் ஹிட்.. தர்ம சங்கடத்தில் பாஜக -
தங்கக் காசு மூலம் டிரம்ப் வேலையை காட்டிட்டாரு! அமெரிக்காவில் தங்க நாணயம் தந்த அதிர்ச்சி -
10 பைசா கூட வராது.. தங்கத்தை மொத்தமாக விற்கும் முதலீட்டாளர்கள்.. நெருங்கி வரும் பேரழிவு? -
தேமுதிகவுக்கு எத்தனை தொகுதிகள்? எங்கெங்கு போட்டியிடுகிறார்கள்? உத்தேச பட்டியல் இதுதானா? -
பாஜகவுக்கு 27 சீட்.. என்.டி.ஏ கூட்டணியில் தொகுதி பங்கீட்டை இறுதி செய்து அறிவித்தார் எடப்பாடி!












Click it and Unblock the Notifications