கோவை - பெங்களூர் வந்தே பாரத் ரயில் சேவையில் மாற்றம்.. பயணிகளே நோட் பண்ணுங்க.. ரயில்வே அப்டேட்
கோவை: கோவை - பெங்களூர் இடையே நீண்ட நாட்களுக்கு பிறகு வந்தே பாரத் ரயில் சேவை இயக்கப்பட்டு வரும் நிலையில் தற்போது அந்த சேவையில் சிறிய மாற்றம் செய்யப்பட்டுள்ளது. திருப்பூர், ஈரோடு, சேலம், தர்மபுரி மற்றும் ஓசூர் ஆகிய நகரங்களில் நின்று செல்லும் இந்த ரயில் சேவையில் தென்மேற்கு ரயில்வே மாற்றம் கொண்டு வந்துள்ளது.
இந்தியன் ரயில்வே பயணிகளின் பாதுகாப்பு மற்றும் அதி நவீன சேவையை வழங்கும் வகையில் பல்வேறு முயற்சிகளை செய்து வருகிறது. வந்தே பாரத் ஸ்லீப்பர், புல்லட் ரயில் என புதுப்புது ரயில்களை இயக்கவும் முடிவு செய்து அதற்கான நடவடிக்கைகளில் ஈடுபட்டு வருகிறது. அந்த வகையில் சில இடங்களில் ரயில் சேவைகளும் அதிகரிக்கப்பட்டு வருகிறது.

கோவை பெங்களூர் வந்தே பாரத் ரயில்
அந்த வகையில் தென்மேற்கு ரயில்வேயிலும் சில சேவைகள் மாற்றப்பட்டுள்ளன. அதன்படி, கோவை - பெங்களூர் வந்தே பாரத் ரயில் சேவையின் நேரம் மாற்றப்பட்டுள்ளது. தென்னகத்தின் மான்செஸ்டர் என்று அழைக்கப்படும் கோவைக்கும் இந்தியாவின் சிலிகான் சிட்டி என்று அழைக்கப்படும் பெங்களூருக்கும் இடையே நேரடி வந்தே பாரத் ரயில் சேவை இயக்கப்பட வேண்டும் என்பது பயணிகளின் நெடு நாள் கோரிக்கையாக இருந்தது.
தினமும் ஆயிரக்கணக்கான பயணிகள் இந்த ரூட்டில் பயணிப்பதால் வந்தே பாரத் ரயில் சேவை கிடைத்தால் விரைவாகவும் சொகுசாகவும் பயணிக்க முடியும் என்பதால் கோவை - வந்தே பாரத் ரயில் சேவைக்கு பெரும் எதிர்பார்ப்பு நிலவியது. இதையடுத்து, கடந்த ஆண்டு ஜனவரி முதல் இரு நகரங்களுக்கு இடையேயேயும் வந்தே பாரத் ரயில் சேவை இயக்கப்பட்டு வருகிறது.
கால அட்டவணை மாற்றம்
377 கிலோ மீட்டர் தொலைவு கொண்ட இந்த பயண பாதையை 6 மணி நேரம் 20 நிமிடங்களில் சென்றடைகிறது. இந்த வந்தே பாரத் ரயில் மொத்தம் 5 ஸ்டேஷன்களில் நின்று செல்கின்றன. அதாவது திருப்பூர், ஈரோடு, சேலம், தர்மபுரி மற்றும் ஓசூர் ஆகிய நகரங்களில் இந்த ரயில் நின்று செல்லும்.
கோவையில் இருந்து காலை 7.25 மணிக்கு புறப்படும் ரயில் பெங்களூர் கண்ட் ரயில் நிலையத்திற்கு பிற்பகல 1.45 மணிக்கு வந்து சேரும். மறுமார்க்கத்தில் பெங்களூரில் இருந்து 2.20 மணிக்கு புறப்பட்டு கோவைக்கு இரவு 8.40 மணிக்கு வந்து சேரும். இந்த கால அட்டவனையில்தான் தற்போது தென்மேற்கு ரயில்வே மாற்றம் கொண்டு வந்துள்ளது.
எப்போது வந்து சேரும்?
புதிய கால அட்டவணைப்படி (வண்டி எண் 20642) கோவை- பெங்களூர் வந்தே பாரத் ரயில் ஓசூருக்கு வருவது 10 நிமிடங்கள் தாமதம் ஆகும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. தற்போது 12.03 மணிக்கு ஓசூர் வரும் நிலையில் இனி 12.13 மணிக்கு ஓசூர் வரும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
வரும் 15 ஆம் தேதி முதல் இந்த மாற்றம் அமலுக்கு வருகிறது. இதர கால அட்டவணை எதுவும் மாற்றப்படவில்லை. வந்தே பாரத் ரயிலில் கோவையில் இருந்து பெங்களூர் செல்ல ரூ.1,260 கட்டணம் ஆகும். எக்ஸிகியூட்டிவ் சேர் கார் பெட்டியில் பயணிக்க ரூ.2,190 ஆகும்.
-
இர்ஃபானின் ரூ. 3650 பிரியாணியை வறுத்தெடுத்த யூடியூப்பர்.. ப்ளூ சட்டை மாறனுடன் ஒப்பிட்டு கலாய் -
கங்கணம் கட்டி சதி பண்ணிருக்கீங்க.. சேகர் பாபுவை போனில் வறுத்து எடுத்த ஸ்டாலின்.. ஷாக் தகவல்! -
4 தொகுதி இடைத்தேர்தலை புறக்கணிக்க திமுக முடிவு? ஸ்டாலினின் ராஜதந்திரம்! -
Indoor Plants: வீட்டின் காற்றைச் சுத்திகரித்து ஆக்ஸிஜன் அளவை அதிகரிக்கும் இன்டோர் செடிகள்! -
திருச்சி கிழக்கு இடைத்தேர்தல்.. தவெக வேட்பாளராக சிரஞ்சீவி? மேடையில் முதல்வர் விஜய் தந்த செம ஹிண்ட் -
தேசிய அளவில் பலவீனமடையும் பாஜக எதிர்ப்பு.. காங்கிரஸ் செயலால் திட்டத்தை மாற்றும் திமுக! -
“தவெகவுக்கு ஓட்டு போடாத தென்காசி மக்களும் பாதிக்கப்படுகிறோம்”.. நள்ளிரவில் எழுந்த திடீர் போராட்டம்! -
"பச்சை துரோகம்.. வாக்கு அறுவடை முடிந்ததும் ரிசர்வ் வங்கியை காரணம் காட்டுவதா?" தங்கம் தென்னரசு தாக்கு -
ஐடி ஊழியர்களை விட "இவர்கள்" காட்டில்தான் பணமழை! அடுத்த 5 ஆண்டுகளில் இந்தியாவில் ஏற்பட போகும் மாற்றம் -
நன்றி மறக்காத விஜய்.. தவெகவின் முதல் ராஜ்யசபா எம்பி யார்? ரேசில் முன்னணியில் ’லெஃப்ட் - ரைட்’ ஹேண்ட் -
விவசாயக் கடன் தள்ளுபடி.. பொய் சொல்லி ஏமாற்ற மாட்டேன்! விவசாயிகளே கவலைப்படாதீங்க.. விஜய் உத்தரவாதம் -
வளைகுடாவில் இந்தியாவிற்கு கிடைத்தது மாற்றுப்பாதை.. ஓமனால் பெரிய குட்நியூஸ்












Click it and Unblock the Notifications