வெறும் 14 நிமிடங்களில்! வந்தே பாரத் ரயிலில் நடந்த சம்பவம்.. வழக்கத்தைவிட முக்கால் மணி நேரம் குறைவு

Subscribe to Oneindia Tamil

சென்னை: சென்னை சென்ட்ரல் , எழும்பூரில் வந்தே பாரத் ரயில்களில் வெறும் 14 நிமிடங்களில் ஒரு அதிசய சம்பவம் நடந்தது.

வந்தே பாரத் ரயில் உள்நாட்டிலேயே தயாரிக்கப்பட்டது. தமிழகத்தின் சென்னை பெரம்பூர் ஐசிஎஃப் தொழிற்சாலையில்தான் இந்த வந்தே பாரத் ரயில்கள் தயாரிக்கப்பட்டன. இவற்றில் மொத்தம் 8 பெட்டிகள் வரை உள்ளன. தனியாக என்ஜின் கிடையாது.

Vande Bharat train was cleaned in just 14 minutes

இந்த ரயிலில் பாதுகாப்பு அம்சங்கள் நிறைய உள்ளதால் பொதுமக்கள் இதில் விரும்பி பயணம் செய்கிறார்கள். இந்த ரயில் இந்தியாவில் 34 வழித்தடங்களில் இயக்கப்பட்டு வருகின்றன. இதன் கட்டணம் கூடுதலாக இருந்தாலும் பயண நேரம் குறைவு என்பதால் மக்கள் இதில் பயணிக்கி விரும்புகிறார்கள்.

இந்த ரயிலில் அடுத்த ரயில் நிலையம் குறித்த தகவல்கள் டிஜிட்டலில் வெளியிடப்பட்டிருக்கும். ஏற்கெனவே 25 ரயில்கள் இருந்த நிலையில் தற்போது கடந்த வாரம் கூடுதலாக 9 வழித்தடங்களுக்கான வந்தே பாரத் ரயில்களை பிரதமர் நரேந்திர மோடி திறந்து வைத்தார். அதில் தமிழகத்திற்கு இரு ரயில்கள் கிடைத்தன.

அதில் ஒன்று சென்னை- நெல்லை, மற்றொன்று சென்னை - விஜயவாடா ஆகும். நேற்று தூய்மை இந்தியா திட்டத்தின் 9ஆவது ஆண்டு நிறைவு தினம் கொண்டாடப்பட்டது. நாடு முழுவதும் தூய்மை இயக்கம் நடத்தப்பட்டது. அதன் ஒரு பகுதியாக சென்னை சென்ட்ரலிலும் எழும்பூரிலும் வந்தே பாரத் ரயில்களில் தூய்மை பணிகள் மேற்கொள்ளப்பட்டன.

Vande Bharat train was cleaned in just 14 minutes

வழக்கமாக ஒரு மணி நேரம் தூய்மை பணிகள் நடைபெறும். இந்த நிலையில் சோதனை முயற்சியாக 14 நிமிடங்களில் ஒட்டுமொத்த ரயிலும் சுத்தம் செய்யப்பட்டது. டைமர் கடிகாரத்தில் நேரத்தை கணக்கிட்டு தொடங்கும் நேரம் முடிக்கும் நேரம் கண்காணிக்கப்பட்டது. ஏற்கெனவே இந்த ரயிலை சுத்தம் செய்யும் அதே தூய்மைப் பணியாளர்கள் சுத்தம் செய்தனர்.

உள்புறம், வெளிப்புறத்தில் சுத்தம் செய்யும் பணிகள் நடந்தன. இதுகுறித்து எழும்பூரில் ஆய்வு மேற்கொண்ட சென்னை கோட்ட மேலாளர் விஸ்வநாத் ஈர்யா கூறியிருப்பதாவது: மற்ற நாட்களில் பணியாற்றும் ஊழியர்களை வைத்தே 14 நிமிடங்களில் வந்தே பாரத் ரயிலை சுத்தம் செய்துள்ளோம். இது போன்று மற்ற ரயில்களிலும் தூய்மைப் பணிகளை மேற்கொள்ள இருக்கிறோம் என்றார்.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+