இதுக்குத்தான் அவ்வளவு சீன்-ஆ? பல்லை காட்டிய வந்தே பாரத் ரயில்.. இந்த 2 போட்டோவை பாருங்க புரியும்
சென்னை: வந்தே பாரத் ரயிலில் வழங்கப்படும் உணவு சரியாக இல்லை என்று மக்கள் இடையே புகார்கள் வைக்கப்பட்டு வருகின்றன.
வந்தே பாரத் ரயில் மக்கள் இடையே பெரிய அளவில் வரவேற்பை பெற்றுள்ளது. அந்த அளவிற்கு மக்கள் இந்த ரயிலில் செல்ல தீவிர ஆர்வம் காட்டி வருகின்றனர்.
சமீபத்தில் சென்னையில் இருந்து கோயம்புத்தூருக்கு வந்தே பாரத் ரயிலை பிரதமர் மோடி திறந்து வைத்தார். சென்னை முதல் பெங்களூர் வரை ஏற்கனவே வந்தே பாரத் சேவை உள்ளது. முதல்முறையாக தமிழ்நாடு உள்ளேயே வந்தே பாரத் ரயில் சென்னை - கோவை இடையே திறக்கப்பட்டு உள்ளது. இதன் மூலம் 6 மணி நேரத்தில் கோவை செல்ல முடியும்.

சென்னை - கோவை இடையே பயணிகள் அதிக அளவில் பயணிக்கும் நிலையில் வந்தே பாரத் ரயில் சேவைக்கான டிக்கெட் வரிசையாக இந்த மாதம் முழுக்க பல சீட்களுக்கு புக் செய்யப்பட்டு உள்ளது.
இந்த ரயில்கள் புதன்கிழமை தவிர வாரத்தின் பிற 6 நாட்களும் இருமார்க்கமாக இயங்க உள்ளது
சராசரியாக மணிக்கு 110 கி.மீ வேகத்தில் ரயில் இயக்க திட்டமிடப்பட்டுள்ளது. முதலில் 8 ஏசி பெட்டிகளுடன் இந்த ரயில் இயக்கப்பட உள்ளது. மொத்தம் 536 இருக்கைகள் இருக்கும். அதன்பிறகு பெட்டிகளின் எண்ணிக்கை 16 ஆக அதிகரிக்கப்படும்.
இது போக சென்னை டூ நெல்லை, கோவை டூ மதுரை ஆகிய மாவட்டங்களுக்கும் விரைவில் வந்தே பாரத் ரயில் தொடங்கப்பட உள்ளது. இந்த நிலையில்தான் வந்தே பாரத் ரயில்களில் தண்ணீர் லீக் ஆகும் பிரச்சனை ஏற்பட்டு உள்ளது.
உணவு: வந்தே பாரத் ரயிலில் வழங்கப்படும் உணவு சரியாக இல்லை என்று மக்கள் இடையே புகார்கள் வைக்கப்பட்டு வருகின்றன. அதன்படி வந்தே பாரத் ரயில்களில் மிக மோசமான உணவுகள் வழங்கப்படுகின்றன. காய்ந்து போன சப்பாத்தி, கடுமையாக இருக்கும் பன்னீர் வழங்கப்படுகின்றன என்று புகார்கள் வைக்கப்படுகின்றன.
அதிலும் எல்லா ரூட்டிலும் ஒரே மாதிரியான உணவு வழங்கப்படுகிறது. வந்தே பாரத் ரயிலில் வழங்கப்படும் உணவில் கலாச்சாரத்திற்கு, மாநிலத்திற்கு தகுந்தபடி எந்த விதமான மாற்றங்களும் இல்லை என்றும் புகார் வைக்கப்படுகிறது. அதோடு வந்தே பாரத் தொடங்கிய நாளில் நல்ல பேக்கிங்கில் கொடுக்கப்பட்ட உணவுகள் தற்போது மோசமான அட்டைகளில் கொடுக்கப்படுகின்றன, என்றும் புகார் வைக்கப்பட்டு உள்ளது.
இதை நெட்டிசன் ஒருவர் பகிர்ந்து வந்தே பாரத் தொடங்கிய நாளில் நல்ல பேக்கிங்கில் கொடுக்கப்பட்ட உணவுகள் இப்போது மிக மோசமான பேக்கிங்கில் கொடுக்கப்படுகிறது என்று புகார் கூறி உள்ளார்.
புகார் மேல் புகார்: சில நாட்களுக்கு முன் கேரளாவில் முதல் வந்தே பாரத் ரயிலை பிரதமர் நரேந்திர மோடி கொடியசைத்து தொடங்கி வைத்தார். இந்த ரயில் திருவனந்தபுரத்திலிருந்து காசர்கோடு வரை இயக்கப்படும்.
ஆனால் இந்த ரயில் திருவனந்தபுரத்தில் இருந்து காசர்கோடு செல்ல 8 மணி நேரம் 5 நிமிடங்கள் ஆகும். முதல் நாள் பயணத்தில் இது சரியாக 8 மணி நேரம் 5 நிமிடங்கள் வரை எடுத்துக்கொண்டது. கிட்டத்தட்ட 68 கிமீ வேகத்தில்தான் இந்த ரயில் பயணம் செய்தது.
இந்த ரயிலில் சென்றால் விரைவாக சென்றுவிட முடியும் என்று நினைத்த பயணிகள் பலரும் பயண நேரத்தால் அதிர்ச்சி அடைந்து உள்ளனர். கூடுதல் அதிர்ச்சியாக கேரளாவில் தொடங்கி வைக்கப்பட்ட முதல் வந்தே பாரத் ரயிலில் நேற்று முதல்நாள் மழையில் நீர் ஒழுகிய சம்பவம் பெரிய அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது. கேரளாவில் தற்போது கனமழை பெய்து வருகிறது.
இந்த நிலையில் ரயிலின் மேல் பாகத்தில் இருந்து இப்படி நீர் ஒழுகி உள்ளது. மழை காரணமாக உள்ளே நீர் வந்து உள்ளது. ரயிலின் executive கோச்சில் இந்த சம்பவம் நடந்துள்ளது. ரயில் கண்ணூர் வந்ததும் அதன் சீலிங்கில் இருக்கும் விரிசல் சரி செய்யப்பட்டு உடனே மாற்றப்பட்டது.

இந்த பாதிப்பால் ரயில் சேவை பாதிக்கப்படவில்லை. அதே சமயம் ரயிலில் நீர் ஒழுகிய சம்பவம் சமூக வலைத்தளங்களில் வீடியோவாக வெளியாகி வைரலாகி வருகிறது.
தொடர் சம்பவங்கள்: மும்பை-அகமதாபாத் வந்தே பாரத் ரயிலில் சில நாட்களுக்கு முன்பு திடீரென மேற்பகுதியில் கசிவு ஏற்பட்டது. இதையடுத்து தற்போது தயாரிக்கப்பட்டு வரும் வந்தே பாரத் ரயில்களின் பெட்டிகளில் கசிவு ஏற்படுவதைத் தடுக்க ஒருங்கிணைந்த பெட்டித் தொழிற்சாலை (ICF) வடிவமைப்பு வந்தே பாரத் ரயிலில் சிறிய மாற்றங்களைச் செய்ய முடிவு செய்துள்ளது.
தொழிற்சாலையின் பொது மேலாளர் உட்பட அதிகாரிகள் குழு மும்பைக்கு சென்று ரயிலில் சோதனை செய்து உள்ளனர். சரி செய்ய வேண்டிய குறைபாடுகளைக் கண்டறிந்து உள்ளனர். இதையடுத்து ரயிலில் தண்ணீர் சேகரிக்கப்படும் பகுதிகளில் மாற்றங்களை செய்ய முடிவு செய்துள்ளனர். மாற்றங்கள் செய்யப்பட்ட பின் வந்தே பாரத் ரயிலில் கசிவு இருக்காது என்று கூறப்படுகிறது.












Click it and Unblock the Notifications