சென்னை அப்டேட்டுகளுக்கு
நோட்டிபிகேஷனை அனுமதி  
Just In
Oneindia App Download

எனக்கு கொரோனாவா? யார் சொன்னது... நான் தலைமறைவாகவில்லை - சூர்யாதேவி

எனக்கு கொரோனா எல்லாம் எதுவுமில்லை நான் தலைமறைவாகவில்லை என்றும் வனிதா சர்ச்சையில் சிக்கி கைதான சூர்யாதேவி கூறியுள்ளார்.

Google Oneindia Tamil News

சென்னை: வனிதா பெயர் எப்பவுமே ட்ரெண்டிங்கில் இருந்து கொண்டுதான் இருக்கிறது. கொரோனா வைரஸ் பரவலைத்தாண்டி சமூக வலைத்தளங்களில் சர்ச்சையானது வனிதாவின் திருமணம். அவரது சொந்த வாழ்க்கையில் விமர்சனம் செய்து வனிதாவிடம் பல பிரபலங்கள் வாங்கிக்கட்டிக்கொண்டனர். அதில் சூர்யாதேவி ரொம்பவே வனிதாவை வசைபாடினார். இதனையடுத்து வடபழனி அனைத்து மகளிர் காவல்நிலையத்தில் அளித்த புகாரின் பேரில் சூர்யாதேவியை கைது செய்தனர். சூர்யாதேவிக்கு கொரோனா என்று செய்தி வெளியாகவே அதனை மறுத்துள்ளார் சூர்யாதேவி.

Recommended Video

    Vanitha Tweet • Surya Devi க்கு கொரோனா உறுதி

    வனிதா விவகாரத்தில் முதலில் சிக்கியவர் சூர்யாதேவி. இவர் சாலிகிராமம் தசரதபுரம் சண்முக சுந்தரம் தெருவில் வசித்து வருகிறார். 27 வயதாகும் சூர்யதேவி, வனிதாவின் திருமணத்திற்கு எதிராக வாய்க்கு வந்தபடி திட்டிய சூர்யாதேவி அதனை யுடுயூப்பில் போட்டிருந்தார். இந்த வீடியோக்கள் எல்லாமே வைரலானது.

    இதைப்பார்த்து கடுப்பான வனிதா முதலில் போரூர் காவல்நிலையத்தில் புகார் கொடுத்தார். சூர்யாதேவி ஒரு கஞ்சா வியாபாரி என்றும் திட்டினார் வனிதா. இந்த சர்ச்சை சில நாட்கள் நீடித்தது. இதனையடுத்து வனிதா மீது வடபழனி காவல் நிலையத்தில் புகார் கொடுத்தார் சூர்யாதேவி. இந்த புகாரின்பேரில் போலீசார் சம்பவம் குறித்து விசாரணை நடத்தி வந்தனர். இருவரும் மாறி மாறி புகார் கொடுக்க
    அனைத்து புகார்களும் வடபழனி அனைத்து மகளிர் காவல் நிலைய போலீசார் விசாரணை செய்யுமாறு உத்தரவிடப்பட்டது.

    என்னா பேச்சு இது.. தஞ்சாவூர்க்காரங்க 2, 3 பொண்டாட்டிக்காரங்களா.. வனிதா மீது குவியும் புகார்கள்! என்னா பேச்சு இது.. தஞ்சாவூர்க்காரங்க 2, 3 பொண்டாட்டிக்காரங்களா.. வனிதா மீது குவியும் புகார்கள்!

     போலீஸ் நிலையத்தில் சமாதானம்

    போலீஸ் நிலையத்தில் சமாதானம்

    வடபழனி காவல்நிலையத்தில் வனிதாவையும், சூர்யாதேவியையும் அழைத்து சமாதானம் பேசப்பட்டது. ஆனாலும் யாரும் விட்டுக்கொடுப்பதாக இல்லை. உடனே கோபத்தோடு கிளம்பிப்போனார் வனிதா. அவதூறாக வீடியோ வெளியிட்டதாக வனிதா கொடுத்த புகாரின் பேரில் சூர்யாதேவியை வடபழனி மகளிர் காவல்நிலைய போலீசார் கைது செய்தனர்.

    கொரோனா பரிசோதனை

    கொரோனா பரிசோதனை

    தற்போது கைது செய்யப்படும் அனைவருமே கொரோனா பரிசோதனைக்கு உட்படுத்தப்படுகின்றனர். சூர்யா தேவியை விதிமுறை அடிப்படையில் கொரோனா பரிசோதனைக்காக ஆய்வாளர் ஜோதி அழைத்துச் சென்றுள்ளார். சூர்யா தேவிக்கு பரிசோதனை செய்யப்பட்டது மட்டுமல்லாமல், தனக்கும் ஆய்வாளர் சோதனை செய்து கொண்டுள்ளார்.

    இருவருக்கும் கொரோனா உறுதி

    இருவருக்கும் கொரோனா உறுதி

    தற்போது சோதனை முடிவில் பெண் ஆய்வாளர் ஜோதி மற்றும் சூர்யாதேவி ஆகிய இருவருக்கும் கொரோனா உறுதியாகியுள்ளது என்றும் அவர் மாயமானதாகவும் செய்தி வெளியானது. சூர்யாதேவி கைது செய்யப்பட்டபோது நடிகை வனிதா உடன் பல காவல்துறையினர் காவல் நிலையத்தில் உடன் இருந்துள்ளனர். இதனையடுத்து நடிகை வனிதா மற்றும் கைது நடவடிக்கையின் போது உடன் இருந்த மற்ற காவலர்களுக்கும் கொரோனா சோதனை செய்ய திட்டமிட்டுள்ளதாக கூறப்பட்டது.

     கொரோனாவா?நானா பார்க்கலாம்

    கொரோனாவா?நானா பார்க்கலாம்

    கொரோனா பற்றியும் தலைமறைவு பற்றியும் வந்த செய்தியை மறுத்துள்ளார் சூர்யாதேவி. இன்று அவர் வெளியிட்டுள்ள வீடியோவில் எனக்கு கொரோனா வந்தால் நான் குடும்பத்தோடு தனிமைப்படுத்திக்கொள்வேன் என்றும் கூறியுள்ளார். எனது பின்னணியில் யாரும் இல்லை என்றும் வனிதாவின் புகாரின் கீழ் என்னை கைது செய்தவர்கள், என்னுடைய புகாரின் பேர் வனிதா மீது ஏன் நடவடிக்கை எடுக்கவில்லை என்று கேட்டிருக்கிறார் சூர்யா தேவி.

     சகட்டு மேனிக்கு திட்டு

    சகட்டு மேனிக்கு திட்டு

    புதிதாக போட்டுள்ள வீடியோவிலும் வனிதாவை சகட்டு மேனிக்கு வசைபாடியுள்ள சூர்யாதேவி தமிழக காவல்துறையினரையும் திட்டியுள்ளார். கொரோனா நோய் இருப்பதாக கூறி தன்னை முடக்கப் பார்ப்பதாக கூறியுள்ள சூர்யா தேவி, கொரோனா தனக்கு வராது என்றும் வந்தாலும் தான் சமாளித்துக்கொள்வேன் என்றும் கூறியுள்ளார்.

    English summary
    Surya Devi had been arrested by the Vadapalani All Women Police Station for allegedly making death threats and slandering actress Vanitha.
     
     
     
    உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
    Enable
    x
    Notification Settings X
    Time Settings
    Done
    Clear Notification X
    Do you want to clear all the notifications from your inbox?
    Settings X