என்னது பீஃப் ஆ? இன்ஸ்டாவில் வனிதா வெளியிட்ட பரபர வீடியோ.. கொதித்த நெட்டிசன்ஸ்.. கூல் பதிலடி!
சென்னை; பிக்பாஸ் பிரபலம் நடிகை வனிதா தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் வெளியிட்ட வீடியோ ஒன்று சர்ச்சையாகி உள்ளது.
இந்தியாவில் பல மாநிலங்களில் பீஃப் உணவுகள் பிரதானமாக உட்கொள்ளப்படுகிறது. கேரளாவில் அதிக அளவில் மக்கள் பீஃப் உணவு உட்கொள்கிறார்கள். அதே போல் தமிழ்நாட்டிலும் பீஃப் உணவு பயன்பாடு நாளுக்கு நாள் அதிகரித்து வருகின்றன. சமீபத்திய டிரெண்டுகள் காரணமாக மக்கள் பீஃப் உணவுகளை விரும்பி சாப்பிட தொடங்கி உள்னனர்.
இருப்பினும் பல பாஜக ஆளும் மாநிலங்களில் பீஃப் உணவுகள் தடை செய்யப்பட்டுள்ளது. மேலும் பீஃப் உணவுகளை விற்பனை செய்வதற்கு பல மாநிலங்களில் மக்கள் எதிர்ப்பும் தெரிவித்து வருகிறார்கள்.

வனிதா
இந்த நிலையில்தான் பிக்பாஸ் பிரபலம் நடிகை வனிதா தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் பீஃப் பிரியாணி செய்யும் வீடியோ வெளியிட்டு இருந்தார். மலபார் பீஃப் பிரியாணி செய்வது எப்படி என்று வீடியோ தயாரித்து அதன் யூ டியூப் பக்கத்தில் வனிதா வெளியிட்டு இருந்தார். இந்த வீடியோதான் தற்போது இன்ஸ்டாவில் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

என்ன நடந்தது?
இந்த வீடியோ பார்த்த பலர் மலபார் பீஃப் பிரியாணி நன்றாக இருக்கும். அதை செய்வதும் எளிது. உங்களின் ரெசிபி நன்றாக இருக்கிறது. எளிதாக இருக்கிறது என்று பலர் கமெண்ட் செய்துள்ளனர். ஆனால் இந்த வீடியோவிற்கு பலர் எதிர்ப்பு தெரிவித்துள்ளனர்.

எதிர்ப்பு
அதன்படி இப்படி பீஃப் சமைத்து அதை வீடியோவாக போடலாமா? நீங்கள் எல்லாம் இந்துவா? அதை பார்க்கவே கோபமாக வருகிறது. வனிதா நீங்கள் வெளியிட்ட மோசமான வீடியோ இதுதான் என்று சிலர் கமெண்ட் செய்துள்ளனர். வனிதாவை கடுமையாக விமர்சனம் செய்தும் சிலர் கமெண்ட் செய்து இருக்கிறார்.

வைரல்
தொடர்ந்து பலர் நெகட்டிவ் கமெண்ட் செய்து வருவதால் இந்த வீடியோவும் தற்போது வைரலாகி உள்ளது. இந்த நிலையில் வனிதா இந்த சர்ச்சைக்கு கூலாக பதிலடி கொடுத்துள்ளார். அதில், மக்களே சில். என்ன ஆச்சு உங்களுக்கு. என்னுடைய நண்பர்கள் வட்டத்தில் நிறைய மலையாளிகள், இஸ்லாமியர்கள், கிறிஸ்துவர்கள் உள்ளனர். இது வெறும் ரெசிபிதான்.

7 வயது
நான் 7 வயதில் இருந்து அமெரிக்காவில் வளர்ந்தவள். இதனால் எனக்கு பல நாட்டு உணவுகள் அறிமுகம். சிறிய வயதில் இருந்து பல வகை உணவுகளை சாப்பிட்டு இருக்கிறேன். நம்பிக்கை என்பது தனிப்பட்ட விஷயம். அதை பிறர் மீது திணிக்க கூடாது. உங்களுக்கு பிடிக்கவில்லை என்றால் வீடியோவில் என் மகள் சொன்னது போல உங்களுக்கு பிடித்த விஷயத்தை வைத்து இதே பிரியாணியை சமைத்துக்கொள்ளலாம் என்று வனிதா குறிப்பிட்டுள்ளார்.
-
ஸ்டாலின் மீதிருந்த கோபம்.. தவெகவிற்கு தாவுகிறார் திமுகவின் இளம் நம்பிக்கை? பெரிய டீமும் போகுது -
கட்டப்பா கூட ஒரு டைம்தான் குத்துனாரு.. இப்படி தினம் தினம் பண்ணுறீங்களே! கோபத்தின் உச்சியில் ஸ்டாலின் -
MDMK: எம்எல்ஏக்கள் ராஜினாமா இல்லை.. புது வியூகம் எடுக்கும் மதிமுக? திமுகவுக்கு கல்தா கன்பார்ம்? -
தமிழக அமைச்சரவையில் சீனியாரிட்டி லிஸ்ட்.. பின் தள்ளப்பட்ட செங்கோட்டையன்.. வன்னி அரசுக்கு எந்த இடம் -
முதல்வர் விஜய்யே நினைத்தாலும் பரந்தூர் விமான நிலையத்தை ரத்து செய்வது மிக கடினம்.. ஏன் தெரியுமா? -
வளைகுடாவில் இந்தியாவிற்கு கிடைத்தது மாற்றுப்பாதை.. ஓமனால் பெரிய குட்நியூஸ் -
திடீரென டெல்லியில் டிஜிபி சந்தீப் ராய் ரத்தோர்.. அமித்ஷா – உள்துறை செயலாளருடன் சந்திப்பு.. பின்னணி -
DMART முதலாளிக்கு இப்படியொரு பிஸ்னஸ் இருக்கா.. ஒரு வீட்டுக்கு ரூ.27.5 லட்சம் .. ஆடிப்போன மும்பை மக்கள்! -
உதயசூரியனில் போட்டியிட்ட 2 மதிமுக எம்எல்ஏக்கள் ராஜினாமா செய்ய முடிவு? திமுகவுக்கு பெருத்த ஷாக்! -
விவசாயக் கடன் தள்ளுபடி.. பொய் சொல்லி ஏமாற்ற மாட்டேன்! விவசாயிகளே கவலைப்படாதீங்க.. விஜய் உத்தரவாதம் -
அண்ணாமலை ஒரு பிராண்டு.. விட்றாதீங்க! லெட்டரைப் பார்த்ததும் பதறிப் போன டெல்லி! குவியும் ஆஃபர்கள்! -
இன்பதுரை வெற்றி செல்லாது என்ற தீர்ப்பால் அடுத்து என்ன நடக்கும்? முன்னாள் சபாநாயகர் அப்பாவு விளக்கம்












Click it and Unblock the Notifications