நடிகை வனிதா விஜயகுமாருக்கு எங்கிருந்துதான் பிரச்சினை வருமோ? கமிஷனர் அலுவலகம் போயிருக்காங்க!
சென்னை: நடிகை வனிதா விஜயகுமார் என்றாலே சர்ச்சைதான் என்று சொல்லும் அளவுக்கு அவருக்கு தனிப்பட்ட வாழ்க்கையிலும் சினிமா வாழ்க்கையிலும் பிரச்சினைகள் வரத்தான் செய்கின்றன.
அப்படி வந்த ஒரு பிரச்சினைக்காக வனிதா விஜயகுமார், சென்னை காவல் துறை ஆணையர் அலுவலகத்தில் போய் புகார் அளித்துள்ளார். எதற்காக என்பதை பார்க்கலாம்.

நடிகர் விஜயகுமார்- நடிகை மஞ்சுளா தம்பதியின் மகள் வனிதா. இவர் சந்திரலேகா எனும் படத்தில் விஜய்யுடன் நடித்திருந்தார். அதன் பிறகு மாணிக்கம் உள்ளிட்ட சில படங்களில் நடித்திருந்த அவருக்கு பெரியதாக வாய்ப்புகள் ஏதும் கிடைக்கவில்லை.
இந்த நிலையில்தான் அவர் ஆகாஷ் என்பவரை திருமணம் செய்து கொண்டார். அவருக்கு ஸ்ரீஹரி என்ற மகனும், ஜோவிகா என்ற மகளும் உள்ளனர். இந்த திருமண விவகாரம் தோல்வியை கொடுத்ததால் அதிலிருந்து வெளியே வந்தார் வனிதா. தனது மகளை அழைத்துக் கொண்டு வந்துவிட்டார்.
ஆகாஷுடன் ஸ்ரீஹரி வளர்ந்தார். இந்த நிலையில் வனிதா, ஆந்திராவை சேர்ந்த தொழிலதிபர் ஆனந்தராஜனை இரண்டாவது திருமணம் செய்துக் கொண்டார். அவர்களுக்கு ஜெய்னிதா என்ற மகள் உள்ளார். ஆனந்த ராஜனுடனும் வனிதாவுக்கு கருத்து வேறுபாடு ஏற்பட்டு அவரை விவாகரத்து செய்தார்.
பின்னர் நடன இயக்குநர் ராபர்ட்டை இவர் திருமணம் செய்து கொள்வார் என கிசுகிசுக்கப்பட்டது. ஆனால் அது நடக்கவில்லை. மூன்றாவதாக பீட்டர் பால் என்பவரை கடந்த 2020 ஆம் ஆண்டு வனிதா திருமணம் செய்து கொண்டார். அவருடனும் மனக்கசப்பு ஏற்பட்டு அவரை பிரிந்தார்.
இந்த நிலையில் தற்போது தனது இரு மகள்களுடன் வசித்து வருகிறார். அவர் குக் வித் கோமாளி, பிக்பாஸ் நிகழ்ச்சிகளில் கலந்து கொண்ட பிறகு திரைத்துறையில் ஒரு கம்பேக் கொடுத்தார். மேலும் சமையல் நிகழ்ச்சிகளை கொடுக்கும் யூடியூப் சேனலையும் நடத்தி வருகிறார்.
விஜய் டிவியிலும் பல்வேறு நிகழ்ச்சிகளுக்கு நடுவராக இருந்து வருகிறார். சில படங்களிலும் நடித்து வருகிறார். அவருடைய மகள் ஜோவிகாவும் இயக்குநராக முயற்சித்து வருகிறார். இந்த நிலையில் வனிதா Mrs & Mr எனும் திரைப்படத்தை இயக்கி நடித்து வருகிறார்.
அவருக்கு ஜோடியாக ராபர்ட் மாஸ்டர் நடித்து வருகிறார். இந்த படத்தை ஜோவிகா தயாரித்திருக்கிறார். படத்திலிருந்து ஒரு சிங்கிள் அண்மையில் வெளியானது. இந்த நிலையில்தான் சாட்டிலைட் உரிமைக்காக ரூ 40 கோடிக்கு வனிதா காசோலை கொடுத்து தன்னை ஏமாற்றிவிட்டதாக தன்ராஜ் என்பவர் போலீஸில் புகார் அளித்துள்ளார்.
இதையடுத்து வனிதா, தன்ராஜ் யாரென்றே எனக்கு தெரியாது. எனது கையெழுத்தை அவர் போலியாக போட்டு என் பெயரை கெடுக்கும் விதத்தில் வழக்கு தொடர்ந்திருக்கிறார் என சென்னை காவல் துறை ஆணையரிடம் புகார் அளித்துள்ளார்.
-
தமிழ்நாட்டின் புதிய டிஜிபியாக மகேஷ்குமார் அகர்வால் நியமனம்! முடிவுக்கு வரும் சட்டம் ஒழுங்கு பிரச்சனை -
தென்காசியில் ஷாக்.. கண்ணில் தென்பட்டவர்கள் அனைவருக்கும் அரிவாள் வெட்டு.. மர்ம கும்பல் வெறிச்செயல்! -
சென்னையில் சிறுவனுக்கு பாலியல் தொல்லை.. காவலரை டிஸ்மிஸ் செய்து அதிரடி உத்தரவிட்ட ஆணையர்! -
தெலுங்கு நடிகை தற்கொலை வழக்கில் ட்விஸ்ட்.. மாமியாரை தூக்கிய சிபிஐ.. விசாரணையில் திருப்பம் -
மாஸ் லுக்கில் சிங்கப்பெண் அதிரடிப்படையினர்! முற்றிலும் வேறான சீருடை.. காரணம் இதுதான்! -
காஞ்சிபுரம் படப்பையில்.. முதியவருக்கு பட்டை நாமம் போட்ட தவெக பெண் நிர்வாகி! 9 லட்சம் அபேஸ்! -
டெல்லி ரிட்டர்ன்.. விஜய் செய்யும் முதல் வேலை.. சென்னையில் நாளை சம்பவம்.. சிங்கப் பெண் அதிரடிப்படை! -
நெல்லை கவின் ஆணவக்கொலை வழக்கில் திடீர் திருப்பம்.. கைதானார் சுர்ஜித்தின் தாய் எஸ்.ஐ கிருஷ்ணகுமாரி -
பெங்களூர், ஹைதராபாத்-யிடம் தோற்றுப்போகும் சென்னை.. தலையெழுத்தை மாற்றுவாரா விஜய்! -
1700 ஏக்கர் சிப்காட் பூங்கா ஒரு சர்வதேச விமான நிலையத்திற்கு இணையான வளர்ச்சியை கொடுக்குமா?- ஒரு அலசல் -
யூ-டர்ன் அடிக்கும் விஜய்.. டெல்லி-க்கு மீண்டும் பயணம்.. சொன்னது யார் தெரியுமா? -
பெரிய திமிங்கலம் வருதே.. தவெகவில் ஐக்கியமாகும் அண்ணாமலை? மோடி அரசை விமர்சிப்பது ‘இதனால்’ தானா?












Click it and Unblock the Notifications