ஆஹா மருந்து மாத்திரை இல்லாமல் உடல் எடையை குறைக்க வனிதா விஜயகுமார் என்ன செய்கிறார் பாருங்க
சென்னை: ஆரோக்கியமாக உடல் எடையை குறைக்க வனிதா விஜயகுமார் என்ன செய்கிறார் தெரியுமா?
வனிதா விஜயகுமார் சர்ச்சைகளின் நாயகி, அதிரடி பெண், 2 பெண் குழந்தைகளின் தாய் எல்லாவற்றையும் தாண்டி மிகவும் தைரியமான பெண். தனது திருமண வாழ்வில் தோல்வி அடைந்த போதிலும் அவர் தைரியமாக எல்லா பிரச்சினைகளிலிருந்தும் மீண்டு வருகிறார்.

என்னதான் அவர் மீது ஆபாசமாக விமர்சனங்களை முன் வைத்தாலும் அடித்து துவம்சம் செய்துவிட்டு அவர் பாட்டுக்கு அவர் வேலையை பார்ப்பார். யாரையும் அனாவசியமாக விமர்சிக்க மாட்டார். இவர் மஞ்சுளா- விஜயகுமார் தம்பதியின் மகளாக திரையுலகிற்கு வந்தார்.
ஆனால் இவரால் சில படங்களை தவிர மற்ற படங்களில் சோபிக்க முடியவில்லை. அதன் பிறகு திருமணம், விவாகரத்து, சொத்து பிரச்சினை என இருந்த அவர், குக் வித் கோமாளியில் கலந்து கொண்டு டைட்டில் வின்னரானார். அதன்பிறகு பிக்பாஸ் நிகழ்ச்சியில் கலந்து கொள்ளும் வாய்ப்பு கிடைத்தது. பின்னர் பிக்பாஸ் ஜோடி நிகழ்ச்சியில் கலந்து கொண்டார்.
இதைத் தொடர்ந்து அவருக்கு விஜய் டிவியில் நிறைய நிகழ்ச்சிகளில் நடுவராக கலந்து கொண்டார். பின்னர் சினிமா வாய்ப்புகள் அவரது வீட்டுக் கதவை தட்டத் தொடங்கின. இதைத் தொடர்ந்து அவர் அண்மையில் பெல்லி மல்லி எனும் தெலுங்கு படத்தில் கூட நடித்திருந்தார்.
சமையலில் புகுந்து விளையாடும் வனிதா யூடியூப் சேனலை நடத்தி வருகிறார். அது போல் பொட்டிக் கடையையும் வைத்துள்ளார். இவர் உடல் எடையை குறைக்க முடிவு செய்து வெள்ளை உணவுகளான அரிசி, சர்க்கரை, பால், தயிர் உள்ளிட்ட உணவுகளை சுத்தமாக நிறுத்திவிட்டார். வெறும் வயிற்றில் பாகற்காய் ஜூஸ் குடித்தால் உடல் எடையை குறைக்க உதவும் என கூறியுள்ளார்.
உடலில் இருக்கும் கொழுப்பு, தொப்பையை குறைக்க வெந்நீரில் தேன், எலுமிச்சை சாறு சேர்த்து குடித்து வருகிறார். 3 வேளை சாப்பாட்டை 6 வேளைகளாக பிரித்து சாப்பிடுகிறார். தானிய வகைகளான பிரவுன் ரைஸ், கம்பு, குதிரைவாலி, ராகி போன்ற உணவுகளை இரவில் எடுத்துக் கொள்கிறார்.
-
எடப்பாடி அனுப்பிய மெசேஜ்.. சி.வி. சண்முகம் வீட்டில் உறுதிபடுத்திய கே.சி வீரமணி.. இணைகிறது அதிமுக -
நாளுக்கு நாள் மோசமாகும் இந்தியா.. குட்டி குட்டி நாடெல்லாம் நம்மை முந்திக்கொண்டு செல்கிறது! -
விஜய் நியமித்த 2 நாளில்.. IPS அருணை கோர்ட்டிலேயே காத்திருக்க சொன்ன நீதிபதி சுவாமிநாதன்.. ஏன்? -
420 யூனிட் ஓடியிருக்கிறது.. ஆனால் 200 யூனிட் கழிக்காமல் 100 யூனிட் கழித்தது ஏன்? விளக்கம் -
'நீங்க உம் மட்டும் கொட்டுங்க தெய்வமே.. மற்றதை நான் பார்த்துக்கிறேன்' தெறிக்கும் ஆதவ் அர்ஜுனா மீம்ஸ்! -
அவரை முதல்ல தூக்கணும்.. பிளான் போட்டு வேலை பார்த்த மூவர் அணி.. விஜய்க்கு எகிறிய பிரஷர்.. என்னாச்சு? -
கடைகளை மூடிய பணியாளர்கள்.. ஸ்தம்பித்த டாஸ்மாக்.. இரவோடு இரவாக அமைச்சர் விக்னேஷ் வெளியிட்ட அறிவிப்பு -
கோவை மக்களே 5 ஆண்டுகளுக்கு பின் வந்த குட்நியூஸ்.. விஜய் கொடுத்த கிரீன் சிக்னல் - டூயல் கான்செப்ட் பஸ் ஸ்டாண்ட்! -
அப்பறம் வச்சிக்கிறேன்.. கடுப்பான விஜய்.. கோபத்தின் உச்சிக்கே போயிட்டாராமே.. அப்படி என்ன நடந்தது? -
இடைத்தேர்தலில் பொது வேட்பாளர்களை நிறுத்தி வெற்றி பெறச் செய்வோம்.. விஜய்க்கு அன்புமணி எச்சரிக்கை -
தமிழ்த்தாய் வாழ்த்து விவகாரத்தை கையில் எடுத்த விஜய்.. உள்துறை அமைச்சகத்திடம் சொல்லுங்க.. விஜய் வைத்த கோரிக்கை! -
எடப்பாடி வீட்டிற்கு வந்த எஸ்பி வேலுமணி.. சிவி சண்முகம் மட்டும் மிஸ்ஸிங்.. தனித்துவிடப்படுகிறாரா?












Click it and Unblock the Notifications