சென்னை அப்டேட்டுகளுக்கு
நோட்டிபிகேஷனை அனுமதி  
Just In
Oneindia App Download

நீங்க சிங்காரவேலன் கமல் மாதிரி செய்தா.. நான் குஷ்பு மாதிரி ஓடி வரமுடியுமா.. பவருடன் வனிதா வீடியோ

Google Oneindia Tamil News

சென்னை: நீங்க சிங்கார வேலன் கமல் மாதிரி ஹாஸ்பிட்டல்ல போய் படுத்துட்டா நான் குஷ்பு மாதிரி ஓடி வர முடியுமா என பவர்ஸ்டார் சீனிவாசனிடம் கோபத்துடன் வனிதா விஜயகுமார் கேட்கும் வீடியோ வெளியாகியுள்ளது.

பிக்பாஸில் பங்கு கொண்டதன் மூலம் அனைவராலும் பேசப்பட்ட பிரபலம் என்றால் நடிகை வனிதா என்று தான் கூற வேண்டும். இவரது குடும்ப வாழ்க்கையில் பல பிரச்சனைகள் மூலம் அடிக்கடி சமூகவலைத்தளங்களில் இவருடைய பேச்சாக இருக்கும்.

எப்போது இவர் பிக்பாஸ் நிகழ்ச்சியில் கலந்து கொண்டாரோ அதில் இருந்து பல நிகழ்ச்சி, படங்கள் என கடும் பிஸியா இருக்கிறார்.

 தீபாவளி ஸ்வீட் டெண்டர்: முதல்வர் ஸ்டாலினுக்கு நன்றி சொன்ன அண்ணாமலை! அமைச்சர் ராஜகண்ணப்பன் விளக்கம்! தீபாவளி ஸ்வீட் டெண்டர்: முதல்வர் ஸ்டாலினுக்கு நன்றி சொன்ன அண்ணாமலை! அமைச்சர் ராஜகண்ணப்பன் விளக்கம்!

வீடியோ

வீடியோ

எனினும் இந்நிலையில் தனக்கென்று ஒரு Youtube சேனல் ஒன்றையும் ஆரம்பித்து மிகப்பெரிய பிரபலமாக பேசப்பட்டார் நமது சர்ச்சை நாயகி. இந்நிலையில் இவர் ஒரு வீடியோ ஒன்றை வெளியிட்டுள்ளார். அது பல்வேறு விமர்சனங்களுக்குள்ளாகி வைரலாகி வருகிறது. அதாவது வனிதா விஜயகுமாரும், பவர்ஸ்டார் சீனிவாசனும் சேர்ந்து பிக்கப் படத்தில் நடிப்பது அனைவருக்கும் தெரியும்.

மாலையும் கழுத்துமாக

மாலையும் கழுத்துமாக

அந்த படத்திற்காக அவர்கள் மாலையும், கழுத்துமாக மணக்கோலத்தில் இருந்த புகைப்படம் வெளியாகி வைரலானது கூட. இந்நிலையில் வனிதா விஜயகுமார் இன்ஸ்டாகிராமில் வீடியோ ஒன்றை வெளியிட்டுள்ளார். அந்த வீடியோவில் எப்பவுமே வாழ்க்கையில் ஒரு பிளான் இருக்கும். பிளான் ஏ , பிளான் பி என பிளான் இசட் வரை இருக்கும். ஒருத்தர் பிளானோடதான் இருக்காரு என்கிறார்.

வீடியோவில் பவர்ஸ்டார்

வீடியோவில் பவர்ஸ்டார்

அப்போது அந்த வீடியோவில் பவர்ஸ்டாரும் வருகிறார். பவரை பார்த்து "என்னாச்சு உங்களுக்கு" என்று வனிதா கேட்க, "ரொம்ப முடியலம்மா, ஓவர் பிரஷர், தலை வேற சுத்துதுமா, நீ பக்கத்துல இருந்தா கொஞ்சம் ஆறுதலா இருக்கும்மா. என் கூட கடைசி வரை இருமா, அப்பத்தான் பிரஷர் குறையும்" என்று கூறுகிறார்.

ஸ்டண்ட் போட்டீங்

ஸ்டண்ட் போட்டீங்

அதற்கு வனிதாவோ, நீங்க ஸ்டண்ட் போட்டீங்க ஓகே. அதுக்காக சிங்காரவேலன் கமல்ஹாசன் மாதிரி கட்டுப் போட்டுக்கிட்டு வந்து ஹாஸ்பிட்டலில் படுத்திருந்தீங்க. கொஞ்சம் யோசிச்சு பார்த்தீங்களா, என்கிட்ட டேட் வாங்குனீங்களா, நான் இருக்கிறேனானு தெரிஞ்சுக்கிட்டீங்களா. மேலும் நீங்க பாட்டுக்கு போய் படுத்தா, நான் குஷ்பு மாதிரி ஓடி வர முடியுமா என கோபமாக கேட்டார்.

பறந்து வருவீங்க

பறந்து வருவீங்க


அதற்கு பவரோ, நான் எங்க படுத்தாலும், நீங்க எங்க இருந்தாலும் பறந்து வருவீங்கனு நினைச்சு ஒரு ஃபீலிங்குல படுத்துட்டேன்மா என்று தெரிவித்தார். பவர் ஸ்டார் வனிதாவிடம் நக்கலாக பேசிய இந்த வீடியோ ரசிகர்களை கவர்ந்ததோடு பல்வேறு விதமாக இந்த காணொலியை பார்த்துவிட்டு பல கெமண்ட்களை அள்ளிக் குவிக்கின்றனர்.

English summary
Vanitha Vijayakumar posted a video in Instagram with PowerStar Srinivasan goes viral in Social media.
 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X