சும்மாவே எங்கம்மா தூக்கி போட்டு மிதிப்பாங்க! நான் விஜய்யை நிஜமாகவே கட்டிப்பிடித்தேன்! வனிதா கலகல
சென்னை: விஜய்யை நிஜமாகவே கட்டிப்பிடிச்சுட்டேன் என சந்திரலேகா படம் குறித்த அனுபவங்களை நடிகை வனிதா விஜயகுமார் விவரித்துள்ளார். இந்த படம் வந்து 30 ஆண்டுகள் ஆன நிலையில் அந்த படத்திற்கான டிமான்ட் இன்னமும் ரசிகர்களிடம் இருக்கிறது.
மஞ்சுளா - விஜயகுமாரின் மூத்த மகள் வனிதா விஜயகுமார், கடந்த 1995 ஆம் ஆண்டு வெளியான "சந்திரலேகா" எனும் படத்தில் விஜய்க்கு ஜோடியாக நடித்திருந்தார். இந்த படத்தில் இருவரின் கெமிஸ்டிரி ஒர்க் அவுட் ஆகி ரசிகர்களை கவர்ந்தது.

முதல் படத்திலேயே விஜய்யுடன் நடித்த போதிலும் அடுத்து "மாணிக்கம்" உள்ளிட்ட ஒரு சில படங்களில் மட்டும் நடித்திருந்தார். பின்னர் திரையுலகில் இருந்து விலகியிருந்தார். இதையடுத்து "தேவி", "நான் ராஜாவாகப் போகிறேன்", "அநீதி", "எம்ஜிஆர் சிவாஜி ரஜினி கமல்" உள்ளிட்ட படங்களில் நடித்தார்.
பவர்ஸ்டார் சீனிவாசன்
பின்னர் பவர்ஸ்டார் சீனிவாசனுடன் இணைந்து "பிக் அப் டிராப்" எனும் படத்தில் நடித்திருந்தார். இதையடுத்து அண்மையில் டான்ஸ் மாஸ்டர் ராபர்ட்டுடன் இணைந்து "மிஸஸ் அண்ட் மிஸ்டர்" எனும் திரைப்படத்தில் நடித்திருந்தார். இந்த படம் அண்மையில் வெளியானது.
இளையராஜா வழக்கு
"மைக்கேல் மதன காமராஜன்" படத்திற்கு இளையராஜா இசையமைத்த "சிவராத்திரி" என்ற பாடலை இந்த படத்திற்கு பயன்படுத்தியமைக்கு அவர் வக்கீல் நோட்டீஸ் அனுப்பியுள்ளார். இது குறித்த வழக்கு நீதிமன்றத்தில் உள்ளது.
ராபர்ட் மாஸ்டர்
இந்த நிலையில் ராபர்ட் மாஸ்டரின் தாய் இறப்பில் கலந்து கொண்ட வனிதா, அழுத காட்சி வைரலானது. வனிதாவை சண்டை செய்பவர், கோபமாக பேசுபவர் என விதவிதமாக அவரை விமர்சித்தாலும், பலருக்கு தெரியாத நல்லுள்ளம் அவரிடம் இருக்கிறது என்பதை பலர் உணர்ந்தனர்.
சந்திரலேகா குறித்து வனிதா
இந்த நிலையில் வனிதா, சினிமா எக்ஸ்பிரஸ் யூடியூப் சேனலுக்கு அளித்த பேட்டியில் கூறியிருப்பதாவது: "'சந்திரலேகா' படத்தின் படப்பிடிப்பின்போது, ஒரு காட்சியில் நான் அழ வேண்டும். ஆனால் எனக்கு அழுகை வரவில்லை. அதனால் நான் என் அம்மாவிடம் (மஞ்சுளா) போய் கேட்டேன், 'அழுகை வராவிட்டால் என்ன செய்வது?' என்று. அதற்கு அவர், 'ஏதாவது ஒரு கஷ்டமான விஷயத்தை நினைத்துக்கொள், அழுகை தானாக வரும்' என்றார்.
எப்படி அழுவது
உடனே நான் யோசிக்க ஆரம்பித்தேன். 'நானும் விஜய்யும் நிஜமாகவே காதலிப்பதாகவும், எங்கள் அம்மாவும் அப்பாவும் எங்களைப் பிரிப்பதற்காகக் இழுத்துச் செல்வதாகவும் கற்பனை செய்துகொண்டேன்'.
நான் என்ன செய்தேன்
உண்மையில் அழுகை வர வேண்டும் என்பதற்காக நான் விஜய்யை நிஜமாகவே காதலிப்பதாக நடித்துக்கொண்டிருந்தேன். அந்த உணர்வுக்காக கடைசி வரை விஜய்யின் கையைப் பிடித்துக்கொண்டேன். இதைப் பார்த்த என் அம்மா, 'இவள் ஏன் இப்படி செய்கிறாள்?' என்று நினைத்திருக்கலாம். அதனால்தான் அந்தப் படத்தில் சில காதல் காட்சிகள் தத்ரூபமாக இருந்தன."
ரஜினிகாந்த் சொன்ன வார்த்தைகள்
அதே நேர்காணலில் வனிதா, ரஜினிகாந்த் குறித்துக் கூறும்போது, "'சந்திரலேகா' மற்றும் 'முத்து' ஆகிய இரு படங்களும் ஒரே நேரத்தில் வெளியானபோது, ரஜினி அங்கிள், 'நான் என் பட ரிலீஸை தள்ளிப்போடப் போகிறேன்' என்று சொன்னார். அவர் படத்தைப் பாராட்டிச் சொன்னாரா அல்லது கேலி செய்தாரா என்பது எனக்குத் தெரியவில்லை" என்று தெரிவித்தார்.
மஞ்சுளா
மேலும், 'வால்டர் வெற்றிவேல்' எனும் படத்தில் தன் தாயார் மஞ்சுளா நடித்தபோது, ஒரு சம்பவம் நடந்தது என்றும் வனிதா நினைவுகூர்ந்தார். "வாசு சார் (பி. வாசு) இயக்கிய அந்தப் படத்தின் மூலக்கதை, அவரது மனைவி சாந்தி வாசுதேவன் எழுதியது என்று போட்டிருந்தனர். அதைப் பார்த்ததும் என் அம்மா, 'ஏ சாந்தி எந்த மூலையில் உட்கார்ந்து கதை எழுதின?' என்று கேட்டார். உடனே சாந்தி, 'மஞ்சு அக்கா, எனக்கும் இதுக்கும் சம்பந்தம் இல்லை. அவர்தான் அப்படி போட்டிருக்கிறார்' என்று சிரித்துக் கொண்டே சொன்னார்." இவ்வாறு வனிதா விஜயகுமார் தனது பேட்டியில் கலகலப்பாக சில தகவல்களை தெரிவித்தார்.
30 ஆண்டுகள்
"சந்திரலேகா" திரைப்படம் வெளியாகி 30 ஆண்டுகள் கடந்த பின்னரும் அந்த படத்தின் காதல் காட்சிகள் பலரால் ரசிக்கப்படுவதற்கு காரணம் இருவரின் கெமிஸ்ட்ரி என ரசிகர்கள் கருத்து தெரிவிக்கிறார்கள்.












Click it and Unblock the Notifications