விஜய் அரசியலுக்கு வந்தால்.. தொண்டனாக இருப்பேன்.. துணையாக நிற்பேன்.. வனிதா விஜயகுமார் பேச்சு
சென்னை: விஜய் அரசியலுக்கு வந்தால் நான் அந்த கட்சியில் இணைந்து தொண்டராவேன் என நடிகை வனிதா விஜயகுமார் தெரிவித்துள்ளார்.
நடிகை வனிதா விஜயகுமார் தனது 16 ஆவது வயதில் நடிகர் விஜய்யுடன் இணைந்து சந்திரலேகா எனும் படத்தில் நடித்திருந்தார். இரு வேறு மதங்களை சேர்ந்த நாயகனுக்கும் நாயகிக்கும் இடையேயான காதல் கதை. இதில் இவர்களது காதலுக்கு எதிர்ப்பு வருகிறது. கடைசியில் ஜோடி சேர்கிறார்களா என்பதுதான் கதை.

அப்போது விஜய்யும் வளர்ந்து வரும் நடிகராக இருந்தார். வனிதாவும் மஞ்சுளா - விஜயகுமார் தம்பதியின் மகள் என்பதை தாண்டி அறிமுக ஹீரோயினாக இருந்தார். இதனால் இருவரும் நல்ல நண்பர்களாக இருந்தனர்.
வனிதாவுக்கு அடுத்தடுத்த படங்களில் வாய்ப்பு இல்லாத நேரத்திலும் இவர்களுக்குள்ளான நட்பு இருந்தது. அந்த வகையில் வனிதாவின் மகன் ஸ்ரீஹரிக்கு விஜய்யை பிடிக்கும் என அவரிடம் வனிதா சொல்லியிருந்தாராம். இதனால் ஒரு நாள் ஸ்ரீஹரியின் பிறந்தநாள் அன்று திடீரென வனிதாவுக்கு போன் செய்து நான் உங்கள் வீட்டுக்கு வருகிறேன் என தெரிவித்தார்.
வனிதாவும் ஏதோ கலாய்க்கிறார் என நினைத்து வாங்க என அழைத்துள்ளார். பின்னர் நிஜமாகவே வனிதா வீட்டிற்கு விஜய் வந்து ஸ்ரீஹரியுடன் விளையாடினாராம். குழந்தையை அழைத்து மடியில் உட்கார வைத்து ஏதோ ஒரு பொம்மையை வாங்கி வந்து கொடுத்து சிரித்து சிரித்து விளையாடினாராம். இதை வனிதா சிறிதும் எதிர்பார்க்கவில்லையாம். அப்போது விஜய் ஓரளவுக்கு வளர்ந்த நடிகராகவே இருந்தாராம்.
அப்படியிருக்கும் போது அவரிடம் இருந்த அந்த பணிவை எண்ணி மெய்சிலிர்த்து போனாராம். இந்த நிலையில் விஜய் அரசியலுக்கு வருவார் என அவ்வப்போது சொல்லிக் கொண்டு வருகிறார்கள். அதற்கு முத்தாய்ப்பாக 234 தொகுதிகளிலும் விஜய் கவனம் செலுத்தி வருகிறார். அண்மையில் 10, 12 ஆம் வகுப்பு பொதுத் தேர்வில் சிறப்பிடம் பிடித்த மாணவர்களுக்கு ஊக்கத்தொகை கொடுத்தார்.

அப்போது நாளைய வாக்காளர்களே என அழைத்து நீங்கள் ஓட்டு போடும் போது நல்ல பல புதிய தலைவர்கள் அரசியலுக்கு வருவார்கள். அப்போது பணத்தை பார்த்து ஓட்டு போடாமல் வேட்பாளர்களை பார்த்து ஓட்டு போட வேண்டும் என அறிவுறுத்தியிருந்தார். இந்த நிலையில் நாளை பனையூர் இல்லத்தில் விஜய் மக்கள் இயக்க நிர்வாகிகளுடன் ஆலோசனை நடத்துகிறாராம்.
எனவே விஜய் முழுவீச்சில் அரசியலில் இறங்க தயாராகி வருகிறார் என்றே தெரிகிறது. இதுகுறித்து நடிகை வனிதாவிடம் ஒரு பேட்டியில் கேள்வி எழுப்பப்பட்டது. அதற்கு அவர் கூறுகையில் விஜய் ஒரு புத்திசாலி. வருங்காலத்தை யோசித்து விஷயங்களை செய்வார். விஜய் தற்போது உச்சத்தில் இருக்கிறார். அவர் அரசியலுக்கு வந்தால் நான் அவருக்கு துணையாக நிற்பேன். அவருக்கு ஒரு தொண்டராகவும் இருப்பேன் என வனிதா விஜயகுமார் தெரிவித்துள்ளார்.
-
பாஜக பருப்பு இனி வேகாது.. 6 வருஷத்துக்கு பின் அண்ணாமலைக்குத் தெரிந்த உண்மை! உடைத்த ஜோதிமணி எம்பி! -
தன்னை கேலி செய்தாலும்.. கர்நாடகா முதல்வரானதும் டிகே சிவக்குமாருக்கு வாழ்த்து கூறிய விஜய் -
“ஒரு இயக்கம்.. இன்னொரு இயக்கத்தின் சின்னத்தில் போட்டியிடக்கூடாது” - துரை வைகோ! -
Rich CM Vijay: நாட்டின் பணக்கார முதல்வர்கள் பட்டியல்! தமிழக முதல்வர் விஜய்க்கு எத்தனையாவது இடம்? -
கதை ஓவர்! அதிமுகவில் இருந்து நீக்கியதை எதிர்த்த மனுவை வாபஸ் பெற அனுமதி கேட்ட ஒபிஎஸ்.. இன்று விசாரணை -
சேலத்துல ஓட்டுக்கு பணம் கொடுத்துதான் ஜெயிச்சாங்க! பஞ்சாயத்தை கிளப்பிய தவெக வேட்பாளர்! விஜய் சொன்னது? -
தமிழ்நாட்டில் டெண்டர் மற்றும் கட்டிட அனுமதிகளில் ரூல்ஸ் அடியோடு மாறுகிறது.. அரசு அதிரடி உத்தரவு -
"இது அதுல்ல?.. ஜனநாயகத்தை சிதைப்பதில் பாஜகவும் தவெகவும் ஒண்ணு” - திமுக சரமாரி அட்டாக்! -
பாட்டிலுக்கு 10 ரூபா 'இனி இல்லை'.. விஜய் அதிரடி ஆக்ஷன்.. டாஸ்மாக் ஊழியர்கள் திடீர் சஸ்பெண்ட்! -
ஈரான் போரால் விஜய்க்கு வந்த பெரிய சவால்.. மொத்தமாக முடங்கிய பணிகள்.. எப்படி சமாளிக்க போகிறாரோ! -
அடித்து ஆடும் விஜய்! லஞ்சம் வாங்குனா காலி! சென்னை மாநகராட்சி நகரமைப்பு அதிகாரிகள் கூண்டோடு இடமாற்றம் -
விஜய் தலைமையில் நாளை முதல் அமைச்சரவை கூட்டம்.. ரெடியாகும் ஃபைல்ஸ்.. எடுக்கப்படும் முக்கிய முடிவு?










Click it and Unblock the Notifications