தலைவா! வேற லெவல்.. முதல்வன் படத்தின் பார்ட் 2 மாதிரி இருக்கு.. ஸ்டாலினை பாராட்டிய வனிதா விஜயகுமார்
சென்னை: முதல்வர் ஸ்டாலின் மிகவும் அழகானவர். நிறைய மாற்றங்களை செய்து வருகிறார் என வனிதா விஜயகுமார் தெரிவித்துள்ளார்.
இதுகுறித்து ஒன் இந்தியா பிலிம்பீட் தமிழுக்கு வனிதா விஜயகுமார் அளித்த பிரத்யேக பேட்டியில், நான் ஒரு படத்தின் கிளைமாக்ஸ் காட்சியில் வழக்கறிஞராக நடித்து வருகிறேன்.
அந்த படத்தில் ஹீரோயினுக்கு ஆதரவாக ஆஜராகும் கேரக்டரில் நடிக்கிறேன். அந்த வழக்கில் நான் வெற்றியும் காண்கிறேன். எனவே சுய பாதுகாப்பு என்பது எல்லா பெண்களுக்கு அவசியமானதாகும்.

முக்கிய ஆயுதம்
அதே சமயத்தில் சுய பாதுகாப்பு என்பது முக்கிய ஆயுதமாகும். இந்த படத்தில் ஒரு பெண்ணுக்காக நான் வாதாடி ஜெயிக்கிறேன். சமையல் குறித்த சேனலை நான் லாக்டவுனில் அதிகமாக செய்து வருகிறேன். இதற்கு காரணம் எதிர்மறை எண்ணத்தை மொத்தமாக தவிர்க்க வேண்டும் என செய்கிறேன்.

துரத்தும் சர்ச்சைகள்
ஆனால் சர்ச்சைகள் நம்மை துரத்தும் போது நம்மால் ஒன்றும் செய்ய முடியவில்லை. எனக்கு பொதுமக்கள் இந்த அளவுக்கு அன்பு கொடுப்பார்கள் என நினைக்கவில்லை. அதுவும் இந்த சூழலில், இந்த வயதில் மீண்டும் சினிமாவுக்குள் நுழைவேன் என நான் கொஞ்சமும் எதிர்பார்க்கவில்லை.

ஊக்கம்
அப்படியிருக்கும் போது நம்மால் ரசிகர்கள் ஊக்குவிக்கப்பட்டு அவர்களுக்குள் சிறிய மாற்றங்கள் ஏற்படுகிறது என்றால் நல்ல விஷயம்தானே. பணம் காசு கொடுப்பது வேறு தன்னம்பிக்கை கொடுப்பது வேறு. அதை நான் செய்ய முயற்சிக்கிறேன்.

நீங்கா இடம்
விஜய்யுடன் நடித்தது நினைவில் நீங்கா இடம் பிடித்திருக்கிறது. தளபதியாக மக்களுக்கு தெரியும். ஆனால் எனக்கு அவர் ஒரு நல்ல நண்பராக மனிதராக தெரியும். நாங்கள் இருவரும் நிறைய விஷயங்களை பேசியிருக்கிறோம். என்னை பயங்கரமாக அவர் கலாய்ப்பார். இந்த குட்டி ஸ்டோரி பாட்டில் நெகட்டிவிட்டியை இக்னோர் செய் என்பது விஜய் இப்போது சொல்லவில்லை.
20 வயதில் விஜய்
அதை அவர் 25 ஆண்டுகளுக்கு முன்பே சொல்லிவிட்டார். சந்திரலேகாவில் அவர் நடித்த போது அவருக்கு 20 வயதுதான் , அப்போது அவர் சொன்ன வார்த்தை எனக்கு ஊக்கத்தை கொடுத்தது. "உன்னை பத்தி பேசறாங்க என்றால் நீ உயிரோடு இருக்கே, உன்னை பற்றி கவலைப்படுகிறார்கள் என அர்த்தம். நீ என்று இல்லையோ அன்று உன்னை பத்தி பேசறதை நிறுத்திடுவாங்க. அன்று நீ இருக்கக் கூடாதுனு நெனச்சிக்கோ"னு சொன்னார்.

அர்த்தம் புரிகிறது
இன்று அதன் அர்த்தம் எனக்கு புரிகிறது. என்னை பற்றிய ஒரு நியூஸ் என்றால் அதை பெரிதாக்குவதை பார்த்தால் என்னை பற்றி கவலைப்பட இத்தனை பேர் இருக்கிறார்கள் என நினைக்கும் போது நான் ஆசீர்வதிக்கப்பட்டவராக உணர்கிறேன். வாழ்வில் நிறைய பேருக்கு தடுமாற்றங்கள் வரும்.

பார்ட் 2
எனக்கும் அது போன்ற தடுமாற்றங்கள் வந்தால் பிகில் படத்தில் அனிதா கேரக்டரிடம் விஜய் பேசுவதை போட்டு பார்ப்பேன். பின்னர் எனக்கு ஒரு உற்சாகம் வரும். ஸ்டாலின் முதல்வராக பதவியேற்றது முதல்வன் படம் பார்ட் 2 மாதிரி இருக்கிறது. ஸ்டாலின் எனது அப்பாவுக்கு மிகவும் நெருக்கமானவர். அவர் எப்போதும் ரொம்ப அழகுதான். தலைவா வேற லெவல்.... என்றார்.












Click it and Unblock the Notifications