Get Updates
Get notified of breaking news, exclusive insights, and must-see stories!

40 கல்யாணம் பண்ணுவேன்.. ஏன்யா என்ன அசிங்கப்படுத்துறீங்க? கல்யாணம் குறித்து ஓபனாக பேசிய நடிகை வனிதா!

Subscribe to Oneindia Tamil

சென்னை: 40 கல்யாணம் தான் என் பெஞ்ச் மார்க்.. ஏன்யா என்னை அசிங்க படுத்துறீங்க.. இன்னும் நாலு கூட தாண்டல என பேசி அதிர வைத்திருக்கிறார் நடிகர் விஜயகுமாரின் மகளும் நடிகையுமான வனிதா. பட நிகழ்ச்சி ஒன்றில் பேசிய அவருடைய பேச்சு சமூக வலைதளங்களில் வேகமாக பரவி வரும் நிலையில் நெட்டிசன்கள் பலரும் தங்கள் கருத்துக்களை பகிர்ந்து வருகின்றனர்.

எம்ஜிஆர் சிவாஜி காலத்தில் இருந்தே தமிழ் சினிமாவில் நடித்து வருபவர் நடிகர் விஜயகுமார். அவருக்கு இரு மனைவிகள். இரண்டாவது மனைவியான நடிகை மஞ்சுளா. அவரும் பிரபல நடிகை என்பது குறிப்பிடத்தக்கது. மொத்தத்தில் விஜயகுமாரின் குடும்பத்தில் அனைவருமே சினிமாவில் தான் இருக்கிறார்கள்.

மகன் அருண் விஜய், மகள் வனிதா, மருமகன் ஹரி, பிரீத்தா என அனைவருக்கும் தெரிந்த சினிமா குடும்பம் தான் விஜயக்குமாரின் குடும்பம். அப்பாவைப் போல சிறுவயதிலேயே சினிமாவுக்கு வந்தவர் வனிதா. முதல் ஹீரோ ராஜ்கிரண்.

Vanitha Vijayakumar cinema chennai

அதற்குப் பிறகு விஜய் உள்ளிட்ட முன்னணி நடிகருடன் நடித்த அவர் இடையில் காணாமல் போனார். தொடர்ந்து சினிமாவிலும் தொலைக்காட்சிகளிலும் தோன்றி வந்த அவர் முதன்முதலாக ஆகாஷ் என்பவரை திருமணம் செய்து கொண்டார். அவரை பிரிந்ததனால் விஜயகுமார் குடும்பத்துக்கும் வனிதாவுக்கும் பிரச்சனை ஏற்பட்டது. இடை இடையே தொழிலதிபர் ஒருவரையும், பீட்டர் என்பவரையும் திருமணம் செய்து கொண்டார். பிரபல நடன இயக்குனரான ராபர்ட் மாஸ்டருடனும் அவர் பழகியதாக கூறப்படுகிறது.

இதனால் சமூக வலைதளங்களில் அவருக்கு எதிராக கண்டனங்கள் எழுந்தது. ஆனால் திருமணம் என்பது மனம் சார்ந்தது என அவருக்கு ஆதரவும் இருந்தது. தொடர்ந்து பிக் பாஸ் நிகழ்ச்சியில் கலந்து கொண்டு மேலும் பிரபலமானார். அங்கு அவரது நடவடிக்கைகள் அதிரடியாகவே இருந்தது. அதற்கு பிறகு அநீதி, அந்தகன் உள்ளிட்ட திரைப்படங்களில் நடித்த அவர் இப்போது இயக்குனர் அவதாரத்தை எடுத்துள்ளார்.

தற்போது ராபர்ட் மாஸ்டர் நாயகனாக நடிக்க மிஸஸ் அண்ட் மிஸ்டர் படத்தை இயக்கி வருகிறார் வனிதா. அந்த படத்தின் தயாரிப்பாளர் வனிதாவின் மகள் ஜோவிகா என்பது குறிப்பிடத்தக்கது. அந்தப் படத்தின் போஸ்டர்களை வைத்து ராபர்ட்டுக்கும் வனிதாவுக்கும் திருமணம் நடைபெற்று விட்டது என இடையில் வதந்தி கிளம்பியது வேறு கதை. இந்த நிலையில் தற்போது அலர்ட் என்ற படத்தில் வனிதா நடித்து வருகிறார்.

அந்த படத்தின் டெக்னீசியன்கள் இன்று செய்தியாளர்களை சந்தித்து பேசினார். அப்போது பேசிய வனிதா," பெண்கள் தவறு செய்தாலும் தண்டனை இருக்கிறது. அதே நேரத்தில் பெண்கள் என்பதால் சில அட்வான்டேஜ் இருக்கிறது. சில பெண்கள் அதை தவறாக பயன்படுத்துகிறார்கள் என்பதில் சந்தேகம் இல்லை. எந்த பெண்ணுமே தவறே செய்யவில்லை எனக் கூற முடியாது. பெண்கள் உயர்த்தி காட்டப்படும் இந்த சினிமாவில் அவர்கள் தவறு செய்தாலும் சுட்டிக்காட்ட வேண்டும் என பேசினார்.

அப்போது செய்தியாளர் ஒருவர் குறுக்கே கேள்வி எழுப்ப," நான் நாற்பது திருமணம் கூட செய்வேன். அதுதான் எனது பெஞ்ச் மார்க். இப்போதைக்கு நான்கு திருமணம் கூட முடியவில்லை. ஏன் என்னை அசிங்கப்படுத்துறீங்க. நான் எத்தனை திருமணம் செய்தாலும் மற்றவர்களுக்கு என்ன பிரச்சனை என தெரியவில்லை" எனப் பேசினார். தற்போது இந்த பேட்டி சமூக வலைதளங்களில் அதிகமாக பகிரப்பட்டு வருகிறது.

More From
Prev
Next
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+