வனிதா விஜயகுமார் கர்ப்பமாம்.. ஜூன் மாசம் டெலிவரியாம்! ராபர்ட் மாஸ்டர் செம ஹேப்பியாமே! போட்டோ பாருங்க
சென்னை: சமூக வலைதளங்களில் எப்போதும் பேசு பொருளாக இருப்பவர் நடிகை வனிதா விஜயகுமார். தற்போது அவரது மகள் ஜோவிகா தயாரிக்க, அவரது இயக்கத்தில் ராபர்ட் மாஸ்டர் நடிக்கும் மிஸ்டர் அண்ட் மிஸஸ் படத்தின் புதிய போஸ்டர் வெளியாகியிருக்கிறது. அதில் வனிதா விஜயகுமார் கர்ப்பமாக இருப்பது போலவும், அவருக்கு ராபர்ட் மாஸ்டர் முத்தமிடுவது போலவும் போஸ்டர் வெளியிட்டு இருக்கிறார். ஜூன் மாதம் டெலிவரி எனவும் வித்தியாசமாக போஸ்டர் வெளியிட்டு இருக்கிறார் வனிதா விஜயகுமார். உங்க சேட்டைக்கு ஒரு அளவே இல்லையா என கமெண்ட் செய்து வருகின்றனர் நெட்டிசன்கள்.
மிகப்பெரிய சினிமா குடும்பத்தில் இருந்து வந்தவர் வனிதா விஜயகுமார். அவரது தந்தை விஜயகுமார் நீண்ட காலமாக திரைத் துறையில் பணியாற்றி வருகிறார். அவரது குடும்பமே மஞ்சுளா, அருண் விஜய், பிரீத்தா, இயக்குனர் ஹரி என மிகப் பெரிய கலை குடும்பம்.
இந்த நிலையில் சிறு வயதிலேயே சினிமாவுக்கு வந்த அப்போதைக்கு முன்னணியில் இருந்த ராஜ்கிரன் படத்தில் அறிமுகமானார். தொடர்ந்து ரஞ்சித், விஜய் உள்ளிட்ட முன்னணி நாயகர்களுடன் நடித்தார், தமிழ் சினிமாவில் ஒரு வெற்றிகரமான நடிகையாக வளம் வருவார் என எதிர்பார்த்து நிலையில் ஒரு சில பிரச்சனைகளால் சினிமாவில் இருந்து ஒதுங்க வேண்டி இருந்தது.

முன்னதாக் ஆகாஷ் என்பவரை முதன் முதலாக திருமணம் செய்து கொண்டார். அவருடன் விவாகரத்து ஆனதால் விஜயகுமார் குடும்பத்துக்கும் வனிதாவுக்கும் விரிசல் ஏற்பட்டது. இடையே இரண்டு பேரை திருமணம் செய்ததோடு, பிரபல நடன இயக்குனரான ராபர்ட் மாஸ்டருடன் பழக்கத்தில் இருந்ததாகவும் சொல்லப்படுகிறது. இதனால் எப்போதும் சமூக வலைதளங்களில் மிகவும் பரபரப்பாக விவாதத்திற்குரிய நபராக வனிதா விஜயகுமார் இருந்தார்.
இடையே பிக் பாஸ் நிகழ்ச்சியில் கலந்து கொள்ள அவரது செயல்பாடுகள் பேசு பொருளானது. பிக் பாஸ்க்கு பிறகு பிரசாந்துடன் அந்தகன் உள்ளிட்ட சில திரைப்படங்களில் நடித்திருக்கிறார். தற்போது இயக்குனர் அவதாரம் எடுத்திருக்கும் வனிதா விஜயகுமார், ராபர்ட் மாஸ்டர் நாயகனாக நடிக்க மிஸஸ் அண்ட் மிஸ்டர் படத்தை இயக்கி வருகிறார். இந்த படத்தை வனிதாவின் மகள் ஜோவிகா விஜயகுமார் தயாரிக்கிறார்.
கடந்த சில மாதங்களுக்கு முன்னதாக படத்தின் ஃபர்ஸ்ட் லுக் போஸ்டர் வெளியான போது ராபர்ட் மாஸ்டருடன் திருமணம் நடைபெறுவது போல போஸ்டரை வெளியிட்டு பரபரப்பை கிளப்பினார். இந்த நிலையில் தற்போது மீண்டும் பரபரப்பை ஏற்படுத்தி இருக்கிறார் வனிதா.

மிஸஸ் அண்ட் மிஸ்டர் திரைப்படம் ஜூன் மாதம் ரிலீஸ் ஆக இருக்கிறது. படத்தின் ஆடியோ வெளியீட்டு விழா இன்று நடைபெறும் நிலையில், படம் குறித்த போஸ்டர் ஒன்றை வெளியிட்டு இருக்கிறார் வனிதா. அதில் நிறைமாத கர்ப்பிணியாக வனிதா விஜயகுமார் இருப்பது போலவும், அவருக்கு ராபர்ட் மாஸ்டர் முத்தம் கொடுத்தபடி இருப்பது போன்ற போஸ்டர் வெளியாகி இருக்கிறது. மேலும் ஜூன் மாதத்தில் டெலிவரி எனவும் அந்த போஸ்டரில் குறிப்பிடப்பட்டுள்ளது. மிகவும் வித்தியாசமாக வடிவமைக்கப்பட்டிருக்கும் இந்த போஸ்டர் ரசிகர்களிடம் நல்ல வரவேற்பை பெற்றிருக்கிறது. வனிதா விஜயகுமார் இயக்கி நடிக்கும் இந்த படத்துக்கு ஸ்ரீகாந்த் தேவா இசை அமைக்கிறார்.
-
விஜய்க்கு எதிராக வெளியான வீடியோ.. அதிர்ந்து போன நடிகை அம்பிகா! ஆதங்கத்துடன் பதிலடி -
2020ல் ஒரு கோடிக்கு 'இதை' வாங்கியிருந்தால் இன்று 75 கோடி லாபம்.. எஸ்பிஐயில் 6 கோடி.. தங்கம் 4 கோடி -
எடப்பாடி பழனிசாமி மீது அதிருப்தி! திமுகவில் இணைந்த முன்னாள் எம்எல்ஏ இளையக்கண்ணு! -
தமிழ்நாட்டின் ஹிட்லர்.. மனைவி, மகளை விரட்டிவிட்டு மகளிர் தின விழாவா! விஜய்யை சாடிய இயக்குநர் அமீர் -
ஸ்டாலின் காதுக்கு எட்டிய பெயர்.. உளவுத்துறைக்கு உடனே உத்தரவு.. சென்னை சுவரில் தோன்றிய நாடார் சங்கம் -
NDA கூட்டணியில் தவெக? துணை முதல்வராகிறாரா விஜய்? சாணக்கியத்தனத்தை சொல்லி கொடுத்த பிரபல நடிகர் -
வீட்டுப் பெண்களை நினைக்காமல் அவதூறு பரப்பி.. தவெக நிகழ்ச்சியில் பேசிய பெண்! ஒரு நொடி முகம் மாறிய விஜய் -
இந்தியாவுக்கு ஆப்பு வைக்கும் ரஷ்யா.. கச்சா எண்ணெய் விலையில் இனி சலுகை இல்லை? நேரம் பார்த்து அடிக்கும் புதின் -
Sani Peyarchi: விருச்சிக ராசிக்கு அடிக்கும் ஜாக்பாட்.. இனி பொற்காலம் ஆரம்பம் -
விஜய்க்கு தான் பிரச்சனை! அடுத்த அடி, அதிரடி காட்டும் மகன் ஜேசன் சஞ்சீவ்! இதுதான் கெத்து.. குவியும் பாராட்டு -
“OPS சிரிப்பே அவருக்கு பிரச்சனை”.. ஸ்டாலின் பேச பேச.. மேடையிலேயே குலுங்கி குலுங்கி சிரித்த ஓபிஎஸ்! -
போரில் ‘என்ட்ரி'யான ரஷ்யா.. அரபு நாடுகளை ஈரான் தாக்கியது எப்படி? டிரம்பை கதறவிடும் புதின்!












Click it and Unblock the Notifications