பாரதிதாசன் என்னுடைய தம்பி.. அவருக்கு 2 நாட்களில் கல்வி நிதி வழங்கப்படும்.. அமைச்சர் வன்னி அரசு உறுதி

Subscribe to Oneindia Tamil

சென்னை: மாணவர் பாரதிதாசன் ஆராய்சிக்கு தேவையான தொகை 2 நாட்களில் வழங்கப்படும் என்று அமைச்சர் வன்னி அரசு உறுதி தெரிவித்துள்ளார். தம்பி பாரதிதாசன் மட்டுமல்லாமல் அனைத்து மாணவர்களின் கல்விக்கு தமிழக அரசு உதவி செய்யும் என்று கூறியுள்ள வன்னி அரசு, கல்வி உதவித் தொகை விவகாரத்தில் எந்த அரசியலும் இல்லை என்றும் தெரிவித்துள்ளார்.

திமுக ஆட்சியின் போது அம்பேத்கர் அயலக கல்வி உதவித்தொகை திட்டம் கொண்டு வரப்பட்டது. இந்த திட்டத்தின் கீழ் தலித் மாணவர்கள் வெளிநாடுகளில் சென்று படிக்கும் செலவுகளை தமிழக அரசே ஏற்கும். அந்த வகையில் மலேசியாவில் ஆராய்ச்சி படிப்பு படித்து வருபவர் மாணவர் பாரதிதாசன். இவர் கடந்த மாதமே கல்வி உதவித்தொகை தனக்கு வழங்கப்படவில்லை என்று வீடியோ வெளியிட்டிருந்தார்.

Vanni Arasu

இதன்பின்னரும் கூட கல்வி உதவித்தொகை விடுவிக்கப்படவில்லை. இதனால் பாரதிதாசன் கண்ணீர் மல்க ஒரு வீடியோவை வெளியிட்டுள்ளார். அதில் பாரதிதாசன், கல்லூரியில் இருந்து வெளியேற்றும் நிலை உருவாகி உள்ளது என்று வேதனையை பகிர்ந்தார். அதற்கு தமிழக அரசு தரப்பில், பாரதிதாசன் வெளியிட்டுள்ள வீடியோ உண்மைக்கு புறம்பானது. ஏற்கனவே அவரின் படிப்புக்கு ரூ.48 லட்சம் வழங்கப்பட்டுள்ளது.

மேலும் ரூ.19.50 லட்சம் செலவின கோரிக்கை தொடர்பாக சம்மந்தப்பட்ட பல்கலைக்கழகத்திற்கு மின்னஞ்சல் அனுப்பப்பட்டுள்ளது. பல்கலைக்கழகத்திடம் இருந்து பதில் கிடைத்தவுடன் கல்வி உதவித்தொகை விடுவிக்கப்படும் என்று தெரிவிக்கப்பட்டது. இதற்கு உரிய விளக்கத்தையும், ரசீதினையும் கொடுத்துவிட்டதாக பாரதிதாசன் மீண்டும் வீடியோவில் கூறி இருந்தார்.

இதனால் தமிழக அரசியல் வட்டாரம் கொந்தளித்தது. திமுக தலைவர் ஸ்டாலின், நேரடியாக தமிழக அரசால் உதவி செய்ய முடியாது என்று சொல்லிவிடுங்கள்.. பாரதிதாசனுக்கான கல்வி உதவித்தொகையை திமுகவும், தமிழக மக்களும் பார்த்து கொள்வார்கள் என்று அறிவித்தார். இதனைத் தொடர்ந்து திமுகவினர் பலரும் அவருக்கு ஆதரவாக பேசத் தொடங்கினர்.

இந்த நிலையில் அமைச்சர் வன்னி அரசு அவசரமாக செய்தியாளர்களை சந்தித்து, மாணவர் பாரதிதாசன் கல்விக்கு அரசு அனைத்து வகையிலும் உதவி செய்யும். பாரதிதாசன் மட்டுமின்றி அனைத்து மாணவர்களுக்கும் அரசு உதவும். தவெக அரசு அமைந்த உடன் கல்வி உதவித் தொகை உயர்த்தப்பட்டுள்ளது. இந்த திட்டத்திற்கான பயனாளிகள் எண்ணிக்கை உயர்த்தப்பட்டுள்ளன.

பாரதிதாசன் என்னுடைய தம்பி.. அவரின் ஆராய்ச்சி படிப்புக்கான உதவித் தொகை 2 நாட்களில் வழங்கப்படும். அவரின் கல்வி உதவித்தொகை விவகாரத்தில் எந்த அரசியலும் இல்லை என்று தெரிவித்துள்ளார்.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+