Get Updates
Get notified of breaking news, exclusive insights, and must-see stories!

பிராமணர்களுக்கே எல்லாம்.. ஓபிசி, எஸ்சி, எஸ்டி இடஒதுக்கீடு பறிபோகுது! யுஜிசிக்கு வன்னியரசு கண்டனம்

Subscribe to Oneindia Tamil

சென்னை: இதர பிற்படுத்தப்பட்டோர், பட்டியல் மற்றும் பழங்குடியினத்தவர்களுக்கான உயர்கல்வி இடஒதுக்கீட்டை பிராமணர்களுக்கு வழங்கும் வகையில் பல்கலைக்கழக மானியக் குழு புதிய வரைவை கொண்டு வருவதாக விடுதலை சிறுத்தைகள் கட்சி துணை பொதுச் செயலாளர் வன்னியரசு குற்றம்சாட்டியுள்ளார்.

இதுகுறித்து அவர் தெரிவித்து உள்ளதாவது, “எச்சரிக்கை! உயர் கல்வி நிறுவனங்களில் இடஒதுக்கீட்டை அமல்படுத்துவதற்கு புதிய வரைவு வழிகாட்டு நெறிமுறைகளை ஒன்றிய அரசு கடந்த திசம்பர் 27ஆம் தேதி வெளியிட்டு உள்ளது. இந்த வரைவு மீது பொதுமக்களின் கருத்துகளை சனவரி 28 ஆம் தேதியான இன்று வரை காலக்கெடு விதித்து உள்ளது. இதுவரை OBC, SC & ST பிரிவினருக்கு ஒதுக்கப்பட்டு உள்ள இடங்களில் பொதுப் பிரிவினர் சேர முடியாது. ஆனால் அந்த இடங்களை பொதுப் பிரிவினருக்கு அதாவது, பிராமணர்களுக்கு குறிப்பிட்ட வழிமுறைகளை பின்பற்றி ஒதுக்கலாம் என்று ஒன்றிய பாஜக அரசு வெளியிட்ட வரைவு விவரிக்கிறது.

Vanniarasu condemn UGC draft to give Brahmins higher education reservation of OBC, SC, ST


அதன்படி Group A பிரிவில் OBC, SC & ST பிரிவினருக்கு நேரடி நியமனங்களுக்கு ஒதுக்கப்பட்ட இடங்கள் நிரப்பப்படாமல் இருக்கும் பட்சத்தில், பொது நலன் கருதி அந்த இடங்களை பிராமணர்களுக்கு ஒதுக்கும்படி அந்தந்த உயர் கல்வி நிலையங்கள் ஒன்றிய கல்வி அமைச்சகத்துக்கு கோரிக்கை வைக்கலாம். ஒன்றிய அரசு அனுமதித்ததும் OBC, SC & ST பிரிவினருக்கான இடங்களில் பிராமணர்கள் அமர்த்தப்படுவார்கள். இந்த நடைமுறை Group A & B இடங்களுக்கு பொருந்தும்.

Group C & D இடங்களுக்கு அந்தந்த பல்கலைக்கழக நிர்வாக குழுவே பிராமணர்களுக்கு நமது இடங்களை எடுத்து கொடுக்கும். மேலும் OBC, SC & ST பிரிவினருக்கான இடங்களில் பதவி உயர்வு வழங்குவதற்கு 'தகுதியான நபர்கள்' இல்லாத போது, அந்த இடங்களையும் பிராமணர்களுக்கு ஒதுக்க பல்கலைக்கழகங்கள் முடிவெடுக்கலாம். இதற்கும் பல்கலைக்கழக மானிய குழு அல்லது ஒன்றிய கல்வி அமைச்சகம் அனுமதி அளிக்கிறது.

இந்து என்கிற பெயரில் சூத்திரர் இந்துக்களுக்கு ராமர் கோவில்! பிராமண இந்துக்களுக்கு உயர்கல்வி நிறுவனங்கள்! இது தான் RSS இயக்கத்தின் செயல் திட்டம். இதை அம்பலப்படுத்தும் விதமாகவே, RSS என்பது BSS தான். அதாவது Brahmin Seva Sangh என்று தலைவர் எழுச்சித்தமிழர் திருமாவளவன் அவர்கள் வெல்லும் சனநாயகம் மாநாட்டு உரையில் குறிப்பிட்டார். இட ஒதுக்கீட்டை பாதுகாக்க ஓபிசி இந்துக்கள் என்ன செய்யப் போகிறார்கள்?” என்று குறிப்பிட்டு உள்ளார்.

More From
Prev
Next
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+