ஒரு எம்பி பதவிக்காக.. 2 பக்கமும் பேரம் பேசிய கட்சி தேமுதிக! பிரேமலதாவுக்கு வன்னியரசு காட்டம்

Subscribe to Oneindia Tamil

சென்னை: ஒரு எம்பி பதவிக்காக திமுக கூட்டணியில் சேர்ந்ததுதான் தேமுதிக என்றும் ஒரே நேரத்தில் இரு பக்கமும் பேரம் பேசியது என்றும் அமைச்சர் வன்னியரசு கடுமையாக விமர்சித்துள்ளார்.

இதுகுறித்து அவர் செய்தியாளர்கள் சந்திப்பில் கூறியிருப்பதாவது: ஒரு எம்பி பதவிக்காக திமுக கூட்டணியில் சேர்ந்ததுதான் தேமுதிக. திருமாவளவனின் கருத்தை உள்வாங்காமல் பிரேமலதா பேசுகிறார். இரு பக்கமும் பேரம் பேசியது தேமுதிக.

vanniarasu thirumavalavan vck

தருமபுரியில் நடந்த ஒரு விழாவில் திமுகவுடன் இத்தனை ஆண்டுகாலமாக கூட்டணியில் இருந்தும் கூட்டணி கட்சிகளை திமுக மதிக்கவில்லை, அவர்களுக்கான உரிய இடங்களை தரவில்லை, கூட்டணி கட்சிகளை திமுக நடத்திய விதம் தவறு என்ற கோணத்தில்தான் அவர் பேசியிருந்தாரே தவிர, தேமுதிக மீது எந்த காழ்ப்புணர்ச்சியிலும் திருமாவளவன் பேசவில்லை என்றார்.

மேலும் மார்க்சிஸ்ட், கம்யூனிஸ்ட் கட்சி போட்டியிடும் என தெரிந்திருந்தால் நாதக வேட்பாளர்களை அறிவித்திருக்கவே மாட்டேன் என கூறும் சீமான், இப்போதும் கெட்டு போகவில்லை, இன்று வாபஸ் பெற்றுக் கொள்ளட்டுமே! அப்படி செய்தால் அவர் சொன்னது உண்மை என்று அர்த்தம் என வன்னியரசு தெரிவித்திருந்தார்.

தருமபுரியில் நடந்த விசிக நிர்வாகி வீட்டு திருமண விழாவில் திருமாவளவன் பேசுகையில், திமுக கூட்டணியில் இருந்து விசிக வெளியேறதற்கு திமுகதான் முழு பொறுப்பு. கூட்டணிக் கட்சிகளை நடத்திய விதம், திமுகவின் அணுகுமுறை குறித்து விவாதிக்க வேண்டும்.

தவெகவை குறைத்து மதிப்பிட்டது திமுகவின் கணிக்க தவறிய அணுகுமுறைதான் திமுக கூட்டணி தோல்விக்கு காரணம். கூட்டணி கட்சிகளை ஏன் தனிச் சின்னத்தில் போட்டியிட திமுக அனுமதிக்கவில்லை? திமுக கூட்டணி உடைந்து விடக் கூடாது என போராடினோம். ஆனால் கூட்டணியை காப்பாற்றிக் கொள்ள திமுக முயற்சி எடுக்கவில்லை.

திடீரென தேமுதிகவை திமுக கூட்டணிக்குள் கொண்டு வந்ததால் பிற கட்சிகளுக்கு வருத்தம் ஏற்பட்டது. திமுக- காங்கிரஸ் கூட்டணியில் நல்லிணக்கம் இல்லை, மதிமுகவை திமுக சின்னத்தில் நிற்க வைத்தார்கள். அவர்களுக்கு வருத்தம் ஏற்பட்டிருக்காதா?

கமலின் மக்கள் நீதி மய்யம் கட்சிக்கு கூடுதல் தொகுதிகளை ஏன் வழங்கவில்லை? புதிதாக ஒரு கட்சியை கொண்டு வந்து கூடுதலாக சீட் கொடுத்ததால் பிரச்சினை ஏற்பட்டது. கூடவே இருந்த கட்சிகளை விட்டுவிட்டு புதிதாக வந்த கட்சிக்கு இத்தனை சீட்டுகளை அள்ளிக் கொடுத்தால் யாருக்குத்தான் வருத்தம் இருக்காது என திருமாவளவன் கேள்வி எழுப்பியிருந்தார்.

இதற்கு பிரேமலதா பதிலடி கொடுத்திருந்தார். அதில் அவர் கூறியிருப்பதாவது: அன்று விஜயகாந்தை முதல்வர் வேட்பாளராக ஏற்ற திருமாவளவன் இன்று தேமுதிகவை எதிர்ப்பது ஏன், அமைச்சர் பதவி கிடைத்ததால் நிலைப்பாடு மாறியதா? இது தேமுதிக மீதான பயமா. எங்களுக்கு 10 சீட் கொடுத்தால் விசிகவுக்கு ஏன் உறுத்துகிறது? வன்னியரசுக்கு அமைச்சர் பதவி கொடுத்ததால் கூட்டணியை மாற்றிக் கொண்டவர்தானே திருமாவளவன் என விமர்சித்திருந்தார். இதற்கு வன்னியரசு பதிலடி கொடுத்திருந்தார்.

கடந்த சட்டசபை தேர்தலில் தேமுதிக அதிமுகவுடன் கூட்டணி அமைக்குமா, இல்லை திமுகவுடன் கூட்டணி அமைக்குமா என்ற எதிர்பார்ப்பு எழுந்தது. அதிலும் தவெகவுடன் கூட்டணி அமைக்க முயற்சிக்கிறது என்றெல்லாம் சொல்லப்பட்டது. ஆனால் கடந்த முறை தேமுதிகவுக்கு ராஜ்யசபா பதவி தருவதாக சொல்லி அதிமுக கொடுக்கவில்லை என பிரேமலதா விமர்சித்திருந்தார். இதையடுத்து திமுகவில் இணைந்த தேமுதிகவுக்கு ராஜ்யசபா எம்பி பதவியை திமுக கொடுத்தது, எல்.கே.சுதீஷ் மாநிலங்களவை எம்பியாகிவிட்டார்.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+