ராஜ்பவனில் சந்திப்புக்கு பிறகு.. ஓ! ஆளுநர் சொன்ன வேலையைதான் ரஜினிகாந்த் செய்கிறாரா? வன்னியரசு நறுக்
சென்னை: பாஜகவுக்கு ஆள் பிடிக்கும் வேலையை ரஜினிகாந்த் செய்கிறாரா என விடுதலைச் சிறுத்தைகள் கட்சியின் துணை பொதுச் செயலாளர் வன்னியரசு கேள்வி எழுப்பியுள்ளார்.
ரஜினியின் பெயரிடப்படாத கட்சியில் இணைவதற்காக பாஜகவின் தமிழக அறிவுசார் பிரிவின் தலைவராக இருந்த அர்ஜுனமூர்த்தி தனது பதவியை ராஜினாமா செய்தார். இதையடுத்து ரஜினிகாந்த் அரசியல் கட்சி தொடங்குவதற்கு முன்பே அவர் ஒருங்கிணைப்பாளராக அறிவிக்கப்பட்டார்.
இந்த நிலையில் கொரோனா மற்றும் உடல்நல பாதிப்பால் அரசியலுக்கு வர போவதில்லை என ரஜினிகாந்த் அறிவித்தார். இதையடுத்து அர்ஜுனமூர்த்தி இந்திய மக்கள் முன்னேற்ற கட்சி என்ற அமைப்பை தொடங்கினார். கடந்த 2021 ஆம் ஆண்டு தமிழக சட்டசபை தேர்தலில் போட்டியிடுவதாக அறிவித்து பின்னர் பின்வாங்கினார்.

அர்ஜுனமூர்த்தி
இந்த நிலையில் அர்ஜுனமூர்த்தி நேற்றைய தினம் பாஜக தலைவர் அண்ணாமலையை நேரில் சந்தித்து மீண்டும் பாஜகவில் இணைந்தார். இதையடுத்து செய்தியாளர்களை சந்தித்த அர்ஜுனமூர்த்தி கூறுகையில் தமிழகத்தில் பாஜக சிறப்பான அந்தஸ்தை பெற உழைப்பேன். பதவி, அந்தஸ்துக்காக பாஜகவில் சேரவில்லை.

ஆன்மீக அரசியல்
ஆன்மீக அரசியல் தொடர்பான ரஜினியுடன் ஒரு மித்த அரசியல் கருத்து இருந்ததால் நான் இணைந்திருந்தேன். இப்போது ரஜினியின் ஆசிர்வாதத்துடன் பாஜகவில் மீண்டும் இணைந்துள்ளேன் என அர்ஜுனமூர்த்தி தெரிவித்திருந்தார். இதுகுறித்து விடுதலைச் சிறுத்தைகள் கட்சியின் துணை பொதுச் செயலாளர் வன்னியரசு தனது ட்விட்டர் பக்கத்தில் ஒரு கருத்தை முன்வைத்துள்ளார்.

பாஜகவுக்கு ஆள்
அவர் தனது பதிவில் கூறுகையில், பாஜகவுக்கு ஆள் பிடிக்கும் வேலையை செய்கிறாரா நடிகர் ரஜினிகாந்த்?
ஆளுநரை சந்தித்த பின் இந்த முன்னெடுப்பு நடந்துள்ளது. ஆளுநர் சொன்ன வேலையை தான் ரஜினி செய்கிறாரா? என வன்னியரசு கேள்வி எழுப்பியுள்ளார். தனது பேட்டியில் ரஜினியின் ஆசியுடன் பாஜகவில் இணைந்தேன் என அர்ஜுனமூர்த்தி கூறியிருந்ததையும் வன்னியரசு சுட்டிக் காட்டியுள்ளார்.

ஆளுநருடன் சந்திப்பு
கடந்த சில தினங்களுக்கு முன்னர் ஆளுநர் மாளிகையில் ஆளுநர் ஆர்.என்.ரவியை திடீரென சந்தித்த ரஜினிகாந்த், அவருடன் அரசியல் பேசியதாக தெரிவித்திருந்தது பல்வேறு விமர்சனங்களுக்குள்ளானது குறிப்பிடத்தக்கது. மேலும் தமிழகத்தில் பாஜக இரண்டாவது பெரிய கட்சியாக யாருடைய தயவும் இன்றி வளர்ச்சி பெற ரஜினியை வைத்து வரும் நாடாளுமன்றத் தேர்தலை சந்திக்க பாஜக திட்டம் தீட்டியிருப்பதாகவும் கூறப்பட்டது.
-
தனியார் பள்ளிகள் லஞ்சம் தரவேண்டாம்.. அதற்கு பதிலாக.. ராஜ்மோகன் உத்தரவால் வரப்போகும் மாற்றம் -
ராஜ்மோகன் மெகா அறிவிப்பு.. அரசு பள்ளி மாணவர்களுக்கு சிறப்பு திட்டம்.. 5000 அரசுப் பள்ளிகளுக்கு ஜாக்பாட்! -
"மேயர் பதவி கொடுத்தா தான் வருவேன்!" அழகிரி மகள் நிபந்தனை.. சிடிஆர் நிர்மல்குமார் வைத்த செக்! -
"நீட் வேண்டாம்.. +2 மார்க் அடிப்படையில் மருத்துவ சேர்க்கை.." பிரதமர் மோடியிடம் விஜய் வைத்த கோரிக்கை! -
தாய்லாந்திலிருந்து காஸ்ட்லி கஞ்சா கடத்திய கேரள அழகி கைது! ரூ 11 கோடி மதிப்பில் போதை பொருள் பறிமுதல் -
பிராய்லர் சிக்கன் சாப்பிட்டால் சிறுமிகள் சீக்கிரம் பருவமடைகிறார்களா? 65 சாப்பிடலாமா? FSSAI விளக்கம்? -
கங்கை அமரன் போட்ட போடு! பாரதிராஜாவின் 500 கோடி சொத்தில் வெடித்த சர்ச்சை! நீலாங்கரை பங்களா யாருக்கு -
யாரோட பிடிலையும் திருவண்ணாமலை கிடையாது.. செய்யாறில் ஆதவ் அர்ஜுனா பேசியது என்ன? -
தமிழக சட்டமன்ற வரலாற்றில் தவறான முன்னுதாரணம்.. சபாநாயகர் முடிவுக்கு விகே சசிகலா எதிர்ப்பு -
டாஸ்மாக்கில் பாட்டிலுக்கு 10 ரூபாய் பிரச்சனைக்கு தீர்வு.. இயந்திரங்களை நிறுவ அரசு திட்டம்.. சாத்தியமா? -
அரசியலுக்கு வருகிறேன்! முடிவை அறிவித்தார் லாரன்ஸ்! விஜய்யின் தவெகவா? அண்ணாமலை இயக்கமா? -
இந்துக்களின் கயிறு உறுத்துகிறா? முதல்வர் விஜய் அதிகாரத்தை இழக்க நேரிடும்.. வானதி சீனிவாசன் வார்னிங்












Click it and Unblock the Notifications