ரவுடிகளின் கூடாரம் பாஜக.. அந்த கும்பல் தலைவன் அண்ணாமலை - காயத்ரி லிஸ்டை பகிர்ந்து வன்னியரசு விளாசல்
சென்னை: ரவுடிகளின் கூடாரம் பாஜக என்றும் அந்த கும்பலின் தலைவன் அண்ணாமலை எனவும் விடுதலை சிறுத்தைகள் கட்சியின் துணை பொதுச்செயலாளார் வன்னியரசு விமர்சித்து உள்ளார்.
தமிழ்நாடு பாஜக தலைவர் அண்ணாமலை நேற்று எக்ஸ் தளத்தில் திமுகவை விமர்சித்து ஒரு பதிவை வெளியிட்டு இருந்தார். அதில், "திமுக ஆட்சியில் தமிழகம் ரவுடிகளின் கூடாரமாக மாறியிருக்கிறது. மாவட்ட ஆட்சியருக்குக் கூட இந்த ரவுடி கும்பல் கட்டுப்படவில்லை என்றால், சாதாரண பொதுமக்களின் நிலைமையை எண்ணிப் பார்க்கவே முடியவில்லை. ரவுடிகளை வைத்து ஆட்சி நடத்துவது நீண்ட காலம் நிலைக்காது. பொதுமக்கள் திருப்பி அடித்தால், திமுக ரவுடி கும்பல் முழுவதுமாகக் காணாமல் போக நேரிடும் என்பதை முதலமைச்சர் ஸ்டாலின் உணர்ந்திருக்க வேண்டும்." என குறிப்பிட்டு இருந்தார்.

இது குறித்து எக்ஸ் தளத்தில் தெரிவித்து இருந்த காயத்ரி ரகுராம், "அண்ணாமலை பதவி ஏற்ற பின் பாஜகவில் இணைந்த ரவுடிகள் பட்டியல்..
1. புளியந்தோப்பு பெண் தாதா அஞ்சலை - கொலை உள்ளிட்ட 10 குற்ற வழக்குகள்.
2.கல்வெட்டு ரவி - 6 முறை குண்டர் சட்டம், 8 கொலை வழக்கு உள்ளிட்ட 30 வழக்குகள்.
3. புதுவை எழிலரசி - புதுவை முன்னாள் சபாநாயகர் சிவக்குமார் கொலை வழக்கில் சிறைக்கு சென்றவர்.
4. சீர்காழி சத்தியா - மணல்கொள்ளையை தடுப்பவர்களை கொலை செய்யும் கூலிப்படை.
5. சேலம் முரளி
6. நெற்குன்றம் சூர்யா
7. புதுவை சோழன்
8. புதுவை விக்கி
9. மயிலாப்பூர் டோக்கன் ராஜா
10. பாம் வேலு
11. குரங்கு ஆனந்த்
12. குடவாசல் அருண்
13. சீர்காழி ஆனந்த்.
14. சென்னை பாலாஜி
15. குடந்தை அரசன்
16. தஞ்சை பாம் பாலாஜி
17. ஸ்பீடு பாலாஜி
18. அரியமங்கலம் ஜாகீர்
19. தஞ்சை பாக்கெட் ராஜா
20. குடவாசல் சீனு
21. மயிலாடுதுறை அகோரம்
22. நெடுங்குன்றம் சூர்யா ( சேர்ந்த உடன் பட்டியலின் மாநில செயலாளர் பதவி)
23. விஜயலட்சுமி (கஞ்சா விற்பனை கைது, பாஜகவில் சேர்ந்த உடன் செங்கல்பட்டு மகளிர் அணி செயலாளர்)
24. படப்பை குணா (மிகப்பெரிய ரவுடி.கட்சியில் சேர்ந்த அன்றே மாநில ஓபிசி அணி செயலாளர் பொறுப்பு)
இது போக 100 க்கும் மேற்பட்ட பொடி ரவுடிகள் சேர்ந்துள்ளனர். ஸ்ட்ரிக்ட் போலீஸ் ஐபிஸ் என உருட்டிக்கொள்ளும் டுபாக்கூர்." என்று குறிப்பிட்டு உள்ளார். காயத்ரி ரகுராமின் இந்த பதிவு அதிகளவில் பகிரப்பட்டு வரும் நிலையில் விடுதலை சிறுத்தைகள் கட்சியின் துணை பொதுச்செயலாளார் வன்னியரசு எக்ஸ் தளத்தில் அதனை ரீட்வீட் செய்து, "ரவுடிகளின் கூடாரம் பாஜக. அந்த கும்பல் தலைவன் அண்ணாமலை." என்று சாடி இருக்கிறார்.
-
ராஜ்யசபா சீட் கொடுத்த பாஜக தலைமை.. திட்டவட்டமாக மறுத்த அண்ணாமலை.. அடுத்த 6 மாதத்திற்கு மெகா பிளான் -
பாஜக போல் வேண்டாம்.. அண்ணாமலையின் பிளான் என்ன? கிறிஸ்தவர் + இஸ்லாமியர்களையும் அரவணைத்து தனிக்கட்சி -
ரஜினியின் ஆசி கிடைக்குமா! சிஸ்டத்தை மாற்றும் ‘ஆன்மீக அரசியல்’ முழக்கத்தை கையில் எடுக்கும் அண்ணாமலை? -
ஆடி மாதம் முடிந்ததும் அதிரடி! செப்டம்பரில் புதிய கட்சி தொடங்கும் அண்ணாமலை? கசியும் ரகசிய பிளான் -
ஜூன் 15ஆம் தேதி புதிய கட்சி? பெருந்துறையில் அண்ணாமலை போட்டி? என்ன செய்ய போகிறது பாஜக? -
ரொம்ப அவசரப்படாதீங்க அண்ணாமலை.. அமித் ஷா போட்ட அன்புக் கட்டளை! இன்னும் தமிழ்நாடு திரும்பாதது ஏன்? -
டெல்லி கொடுத்த ஸ்வீட் பாக்ஸ்.. அப்படியே அமுக்கிய தலைகள்! அடுக்கிய அண்ணாமலை! காங்கிரஸில் கலகம்! -
ஓரங்கட்டப்பட்ட அண்ணாமலை.. நீண்ட நாள் ரகசிய ஆயுதத்தை கையில் எடுக்க முடிவு! அதிரடி திட்டம் -
Annamalai New Party LIVE:தனிக் கட்சி தொடங்குகிறார் அண்ணாமலை? பிறந்தநாளன்று வெளியாகும் அப்டேட்? -
நம்ப வச்சு கழுத்தறுத்து.. டெல்லிக்கே சென்று சாதித்த நயினார்! அண்ணாமலை ஆங்கிரிக்கு இது தான் காரணம்! -
அண்ணாமலை தொடங்கும் புது இயக்கம்.. பெரிய பிளானில் மாஜி ஐபிஎஸ்.. அப்போ கட்சி எப்போது? கசிந்த தகவல் -
தமிழகத்தில் விரைவில் மேலும் ஒரு கட்சி? புதிர் வைத்த கார்த்தி சிதம்பரம்! யாரா இருக்கும்?












Click it and Unblock the Notifications