விஏஓக்கள் விடுங்க.. கிராமப்புற உள்ளாட்சிகளில் மாற்றம்! சிறு, குறு தொழில் நிறுவனங்களுக்கு தனி கட்டணம்
சென்னை: கிராம ஊராட்சிகளில் அனுமதியின்றி கட்டப்படும் கட்டிடங்களுக்கு சீல் வைக்கும் அதிகாரத்தை ஊராட்சி நிர்வாக அலுவலர்களுக்கு வழங்கி, சில நாட்களுக்கு முன்பு அரசாணை வெளியிடப்பட்டிருந்த நிலையில், தற்போது மீண்டும் ஒரு அரசாணை வெளியாகியிருக்கிறது. நகர்ப்புற உள்ளாட்சிகளை போன்று கிராமப்புற உள்ளாட்சிகளில் விதிகளை உருவாக்கி தமிழ்நாடு அரசு இந்த அரசாணையை வெளியிட்டிருக்கிறது.. அதில் உள்ள சிறப்பு அம்சங்கள் என்னென்ன தெரியுமா?
தமிழகத்திலுள்ள கிராம ஊராட்சிகளில், கட்டிட திட்ட அனுமதி மற்றும் மனைப் பிரிவுகளுக்கு அனுமதி வழங்கிட தற்போது நடைமுறையில் உள்ள பல வகையான கட்டணங்கள் ஒருங்கிணைக்கப்பட்டுள்ளன.

ஒருங்கிணைந்த கட்டணங்கள்
இந்த ஒருங்கிணைந்த கட்டணத்தையும் ஆன்லைன் மூலமாகவே செலுத்தி, ஒற்றை சாளர முறையில் அனுமதி பெறும் வகையில், தமிழகத்தில் உள்ள கிராமங்களை அதன் வளர்ச்சியின் அடிப்படையில், A,B,C,&,D என வகைப்படுத்தி கட்டடத் திட்ட அனுமதி மற்றும் மனை பிரிவுகளுக்கான அனுமதியும் வழங்கப்பட்டு, அரசாணை எண். 180/2024 ஆக வெளியிட்டு நடைமுறைப்படுத்தியிருக்கிறது.
அதேபோல, தமிழகத்திலுள்ள கிராம ஊரக உள்ளாட்சிகளில் கட்டப்படும் 2,500 சதுரடி மனையில் 3500 சதுரடி வரை கட்டப்படும் கட்டிடங்களுக்கு சுயசான்றின் அடிப்படையில் உடனடியாக அனுமதி வழங்கும் வகையிலும், 2500 சதுரடிக்கு மேற்பட்ட நிலப்பரப்பளவில் 3500 சதுரடிக்கு மேலும் கட்டப்படும் கட்டிடங்களுக்கும் ஒருங்கிணைந்த கட்டணங்களை நிர்ணயித்து நடைமுறைப்படுத்தியிருக்கிறது.
கிராம ஊராட்சிகள்
அந்தவகையில், மாநிலம் முழுவதும் உள்ள கிராமங்களை A,B,C,D என வகைப்படுத்தப்பட்டு, நடைமுறையிலும் உள்ளது.
அதேபோல, கிராம ஊராட்சிகளில், முறைகேடாக, அனுமதியின்றி கட்டப்படும் கட்டிடங்களுக்கு சீல் வைக்க, ஊராட்சிகளின் நிர்வாக அலுவலர்களுக்கு அதிகாரம் அளித்து அனைத்து மாவட்ட கலெக்டர்களுக்கு தமிழக அரசின் ஊரக வளர்ச்சி மற்றும் ஊராட்சித்துறையானது, கடந்த 10 நாட்களுக்கு முன்பு உத்தரவு பிறப்பித்திருந்தது.. மேலும், முத்திரை இடும் அதிகாரம் ஊராட்சிகளின் நிர்வாக அலுவலருக்கு இருப்பதாகவும் தெளிவுபடுத்தியிருந்தது.
விஏஓக்களுக்கு எதற்கு அதிகாரம்
எனினும், கிராம நிர்வாக அலுவலர்களுக்கு இத்தகைய அதிகாரத்தை அளிப்பது தவறானது என்றும், இது கீழ் நிலையிலேயே ஊழலுக்கும், அதிகார துஷ்பிரயோகத்துக்கும் வழிவகுக்கும் என்பதால், குறைந்தபட்சம் மாவட்ட நிர்வாகம் அல்லது மாவட்ட அளவிலான அதிகாரம் கொண்டவர்களிடம் இந்தப் பொறுப்பு அளிக்கப்பட வேண்டும் என்று எஸ்டிபிஐ அஸ்கர் அலி அரசுக்கு கோரிக்கை விடுத்திருந்தது நினைவிருக்கலாம்.
கிராமப்புற உள்ளாட்சிகள்
இதுஒருபுறமிருக்க, தொழில் உரிமம் வழங்குவது தொடர்பாக கட்டணம் நிர்ணயம் செய்து தமிழக அரசு அரசாணை ஒன்றினை தற்போது பிறப்பித்துள்ளது.. அதுமட்டுல்ல, நகர்ப்புற உள்ளாட்சிகளை போன்று கிராமப்புற உள்ளாட்சிகளில் விதிகளை உருவாக்கி, இந்த அரசாணை வெளியிடப்பட்டுள்ளது.
அதில், "நகர்ப்புற உள்ளாட்சிகளை போன்று கிராமப்புற உள்ளாட்சிகளில் விதிகளை உருவாக்கி தமிழ்நாடு அரசு அரசாணை வெளியிட்டுள்ளது. சிறு, குறு, நடுத்தர தொழில் நிறுவனங்கள் உள்ளிட்டவற்றுக்கு தனித் தனியாக கட்டணம் நிர்ணயம் செய்துள்ளது.
ஊரக உள்ளாட்சிகளில் தொழில் உரிமம் வழங்குவது தொடர்பாக, தமிழ்நாடு ஊராட்சிகள் சட்டம் 1994 மற்றும் அதனுடன் தொடர்புடைய விதிகள் உள்ளன. கிராம ஊராட்சிகளில், தொழில் உரிமங்களை வழங்குவது கிராம ஊராட்சித் தலைவர் ஆவார்.
தொழில் நிறுவனங்கள்
அதே நேரத்தில், ஊராட்சி ஒன்றிய எல்லைக்குள் தொழில் நிறுவனங்கள் தொடங்கப்பட வேண்டுமென்றால், ஊராட்சி ஒன்றியக் குழுவின் அனுமதி மற்றும் ஊராட்சி ஒன்றிய ஆணையரின் அனுமதி பெற வேண்டும். உரிமக் கட்டணம் அந்தந்த ஊராட்சியில் செலுத்தப்பட வேண்டும்.
உரிமக் கட்டணம் - அரசாணை
ஒரு கிராம ஊராட்சி எல்லைக்குள் தொழில் தொடங்க விரும்பினால், கிராம ஊராட்சித் தலைவர் உரிமம் வழங்க அதிகாரம் பெற்றுள்ளார். ஊராட்சி ஒன்றிய எல்லைக்குள் தொழில் தொடங்க விரும்பினால், ஊராட்சி ஒன்றியக் குழுவின் அனுமதி மற்றும் ஊராட்சி ஒன்றிய ஆணையரின் அனுமதி பெற வேண்டும். உரிமக் கட்டணம் அந்தந்த ஊராட்சியில் செலுத்தப்பட வேண்டும். தமிழ்நாடு அரசு அவ்வப்போது அரசாணைகள் பிறப்பித்து, தொழில் உரிமம் வழங்குவது தொடர்பான விதிகளை தெளிவுபடுத்துகிறது.
உரிய படிவத்தில் விண்ணப்பம் சமர்ப்பிக்க வேண்டும். சம்பந்தப்பட்ட கிராம ஊராட்சி அல்லது ஊராட்சி ஒன்றியத்தில் விண்ணப்பத்தை சமர்ப்பிக்க வேண்டும். தேவையான ஆவணங்களை சமர்ப்பிக்க வேண்டும். உரிமக் கட்டணம் செலுத்த வேண்டும். சம்பந்தப்பட்ட அதிகாரிகள் விண்ணப்பத்தை பரிசீலித்து உரிமம் வழங்குவார்கள்" என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.


Click it and Unblock the Notifications
