சிஎஸ்கே வெற்றி பெற பிரார்த்தனை.. வேண்டுதலை நிறைவேற்ற தயாராகும் நடிகை வரலட்சுமி! இன்று முதல்!
சென்னை: ஐபிஎல் இறுதி போட்டியில் சென்னை சூப்பர் கிங்ஸ் அணி வெற்றி பெற்ற நிலையில் நடிகை வரலட்சுமி சரத்குமார் வேண்டுதலை நிறைவேற்ற தயார் நிலையில் உள்ளார்.
உலகின் மிகவும் பிரபலமான கிரிக்கெட் தொடரில் ஒன்று ஐபிஎல் தொடரின் 16 ஆவது சீசன் கடந்த சில தினங்களாக நடைபெற்று வந்தது. இந்த போட்டிகளுக்கு வீரர்களை ஏலம் எடுக்கும் போதே சூடுபிடிக்கும். ரசிகர்களும் இந்த போட்டியை காண ஆவலுடன் காத்திருப்பர்.

எத்தனை அணிகள் இருந்தாலும் தோனி தலைமைலியான சென்னை சூப்பர் கிங்ஸ் அணிக்கே பெரும்பாலான ரசிகர்கள் இருப்பார்கள். இந்தியாவுக்கு எங்கு மேட்ச் நடந்தாலும் ரசிகர்கள் சென்றுவிடுவார்கள். அந்த வகையில் சென்னை சூப்பர் கிங்ஸ் மற்றும் ஹர்திக் பாண்டியா தலைமையிலான குஜராத் டைட்டன்ஸ் அணி இறுதி போட்டியை விளையாடியது.
இந்த போட்டி கடந்த மே 28ஆம் தேதி தொடங்கியது. அகமதாபாத்தில் தொடங்கிய இந்த போட்டி 30ஆம் தேதி அதிகாலை 2 மணிக்குத்தான் முடிவடைந்தது. மழை காரணமாக அவ்வப்போது ஒத்தி வைக்கப்பட்டு கடைசியாக ஓவர்கள் குறைக்கப்பட்டு இந்த போட்டி நடந்தது.
இந்த போட்டியில் குஜராத் அணி 214 ரன்களை எடுத்தது. இதையடுத்து மழையால் 15 ஓவர்களில் 171 ரன்கள் சென்னை அணிக்கு இலக்காக நிர்ணயிக்கப்பட்டது. இந்த போட்டியை காண நடிகை வரலட்சுமி, ரஜினி மகள் ஐஸ்வர்யா, நடிகர் சதீஷ், தயா அழகிரி உள்ளிட்டோர் சென்றிருந்தனர். இதில் கடைசியாக சிஎஸ்கே வெற்றி பெற 10 ரன்கள் தேவைப்பட்டது.
அதாவது 2 பால்களில் 10 ரன்கள் தேவைப்பட்டது. அப்போது அந்த ஸ்டேடியத்தில் ஒரே அமைதி, சிஎஸ்கே ரசிகர்கள் அனைவரும் கடவுளிடம் பிரார்த்தனை செய்கிறார்கள். அது போல் வீட்டில் இருந்தபடியே பார்த்த நிறைய பேரும் சமயபுரத்து ஆத்தா.. பாத்து செய்மா என்றெல்லாம் சாமியாடினர்.
குழந்தைகள் முதல் பெரியவர்கள் வரை முகத்தில் அத்தனை பீதி! அப்போது ஜடேஜா 2 பாலில் ஒரு பவுண்டரியையும் சிக்ஸையும் போட்டு தாக்கினார். உடனே அரங்கமே அதிர்ந்தது. ரசிகர்கள் விண்ணுக்கும் மண்ணுக்கும் துள்ளி குதித்தனர். ஸ்டேடியம் முழுக்க மஞ்சள் படையின் ஆர்ப்பரிப்பு இருந்தது. 5ஆவது முறையாக ஐபிஎல் சாம்பியன் பட்டத்தை சென்னை அணி வென்றது.
அகமதாபாத்தில் நடந்த இந்த போட்டியை காண ஏராளமான பிரபலங்கள் சென்றிருந்த நிலையில் சிஎஸ்கே வெல்ல வரலட்சுமி சரத்குமார் பிரார்த்தனை செய்துள்ளார். அதாவது 2 பாலில் 10 ரன்களை அடித்து சென்னை அணி கோப்பையை வென்றால் தான் அடுத்த ஒரு மாதத்திற்கு சைவமாக மாறிவிடுவதாக வேண்டியிருந்தாராம். அதன்படி ஒரு மாதத்திற்கு அசைவ உணவை தவிர்த்துவிட்டு சைவ உணவை சாப்பிட போகிறார்.
இதுகுறித்து அவர் தனது ட்விட்டர் பக்கத்தில் கூறியிருப்பதாவது: ஹாஹாஹா இனி நான் ஒரு மாதத்திற்கு சைவ உணவையே உட்கொள்வேன். பரவாயில்லை. எல்லாமே சிஎஸ்கேவுக்காகத்தானே என குறிப்பிட்டுள்ளார். இதை பார்க்கும் ரசிகர்கள் சிஎஸ்கேவின் வெறித்தனமான ரசிகையா இருப்பாரோ வரு! என கேட்டு வருகிறார்கள்.
-
இப்போ முடியாது.. தேர்தல் முடிந்ததும் செட்டில் பண்றேன்.. கறாராக பேசிய லீமா ரோஸ்.. விக்கித்த எடப்பாடி -
ஹார்முஸில் இறங்கும் இந்திய கடற்படை.. நடுக்கடலில் சிக்கியுள்ள இந்திய கப்பல்களை மீட்க அதிரடி ஆபரேஷன் -
நாய்க்கு கூட நன்றி இருக்கும்.. எடப்பாடி பழனிசாமி குறித்து சசிகலா விமர்சனம் -
கடைசி சான்ஸ்.. மிஸ் பண்ணிடாதீங்க.. பிறப்புச் சான்றிதழில் வருது மேஜர் முடிவு.. ஆவணங்களை ரெடி பண்ணுங்க -
அஜிதா ஆடிய மைண்ட் கேம்.. தவெக-வை தவிக்கவிட்டு திமுக பக்கம் தாவ இதுதான் காரணமா? தூத்துக்குடி மாஸ் -
பேசி முடித்ததுமே சரிந்த பாமக நிறுவனர் ராமதாஸ்.. கேள்விப்பட்டதும் உடனே போன் போட்ட முதல்வர் ஸ்டாலின்! -
”5 கேப்டன் இருந்தும் என் பக்கத்துல இருக்கான் மச்சா” மும்பை அணியை செய்யும் சிஎஸ்கே! தெறிக்கும் மீம்ஸ் -
LIK vs TN 2026 box office: மூன்று நாள் முடிவில் பிரதீப் ரங்கநாதன் Vs நட்டி யாருக்கு வெற்றி? வசூல் நிலவரம் -
யாருங்க இந்த ஐடியாலாம் தருவது? தவெக விஜய் கொடுத்த வாக்குறுதியில்.. இருக்கும் பெரிய ஓட்டை! -
'ஜனநாயகன்' பட லீக்கில் என்ன நடந்தது.. தமிழக காவல்துறை முழு விளக்கம் -
சாத்தூரில் நயினார் வாங்கிய காத்து.. பாஜக தேசிய தலைவரையே கூட்டி வந்தும் கூட்டம் இல்லை -
ஆட்டம் ஆரம்பம்.. முதல் அடி தங்கம், வெள்ளி விலை.. இந்தியாவில் விடியும் முன்பே ஷாக்!












Click it and Unblock the Notifications