இப்போ தானே கல்யாணம் ஆச்சு.. நடிகை வரலட்சுமியின் வீடியோவால் ஷாக் ஆன ரசிகர்கள்.. என்ன தான் நடந்தது?
சென்னை: நடிகர் சரத்குமாரின் மகளும் நடிகையுமான வரலட்சுமி கடந்த சில மாதங்களுக்கு முன்பு திருமணம் செய்த நிலையில் தற்போது சினிமாக்களில் பிஸியாக நடித்து வருகிறார். இந்த நிலையில் அவர் வெளியிட்டுள்ள வீடியோவால் அதிர்ச்சி அடைந்துள்ள ரசிகர்கள், அவர் மீண்டு வர வேண்டுமென வாழ்த்து கூறி வருகின்றனர்.
நடிகர் அரசியல்வாதி என பல பரிமாணங்கள் கொண்டவர் சரத்குமார். இத்தனை வயதிலும் அவரது பிட்னஸ் பலரையும் ஆச்சரியப்பட வைக்கும் அளவுக்கு இருக்கிறது .கிட்டத்தட்ட சினிமாவில் 40 ஆண்டுகளை கடந்திருக்கிறார் சரத்குமார்.

அவரது மகள் வரலட்சுமி, மனைவி ராதிகாவும் சினிமா துறையில் தான் இருக்கின்றனர். போடா போடி படத்தில் சிம்புவுக்கு ஜோடியாக நடித்து சினிமாவில் அறிமுகமானவர் வரலட்சுமி. அதற்கு பிறகு தமிழ், தெலுங்கு, கன்னடம் என பல மொழிகளில் நடித்து வருகிறார்.
தற்போது டிவி ரியாலிட்டி ஷோக்களிலும் பங்கேற்று வருகிறார். சர்க்கார் படம் அவருக்கு மிகப்பெரிய திருப்புமுனையை ஏற்படுத்திய நிலையில், பல ஆண்டுகளாக பெட்டியில் முடங்கி கிடந்த மத கஜா ராஜா படம் 12 ஆண்டுகள் கழித்து பொங்கல் ரிலீஸ் ஆக வெளியான நிலையில் படம் சூப்பர் ஹிட் ஆனது. இதை அடுத்து வரலட்சுமி தமிழ் சினிமாவில் மீண்டும் ஒரு ரவுண்டு வந்து கொண்டிருக்கிறார்.
தற்போதைக்கு அவர் கைவசம் பல்வேறு மொழிகளில் 5 திரைப்படங்கள் இருக்கிறது. இந்த நிலையில் கடந்த ஆண்டு மும்பையைச் சேர்ந்த தொழிலதிபர் நிக்கோலாய் சச்தேவ் என்பவரை வரலட்சுமி திருமணம் செய்து கொண்டார். தொடர்ந்து கோலாகலமாக திருமணம் நடைபெற்ற நிலையில் கணவருடன் தற்போது ஹைதராபாத்தில் வசித்து வருகிறார்.
திருமணத்திற்கு பிறகும் சினிமாவில் கவனம் செலுத்தி வரும் நிலையில் தற்போது தெலுங்கில் சிவாங்கி லயனவ், விஜயின் ஜனநாயகன் படங்களிலும் முக்கிய பாத்திரத்தில் வரலட்சுமி நடித்த வருகிறார். இந்த நிலையில் வரலட்சுமி தனது சமூக வலைதள பக்கத்தில் வீடியோ ஒன்றை வெளியிட்டு இருக்கிறார்.
அதில் கட்டை விரலில் காயத்துடன் இருக்கும் நிலையில் சினிமா படப்பிடிப்பு ஒன்றில் கலந்து கொண்ட போது ஆக்சன் காட்சியில் நடித்த போது கட்டைவிரலில் காயம் ஏற்பட்டுள்ளதாகவும், சிறிய எலும்பு முறிவு ஏற்பட்டுள்ளதாகவும் விரைவில் ஷூட்டிங்கில் கலந்து கொள்வேன் என வீடியோ போட்டு இருந்தார். இதனால் அதிர்ச்சி அடைந்துள்ள அவரது ரசிகர்கள் விரைவில் காயம் குணமாகி படப்பிடிப்புக்கு திரும்ப வேண்டும் என வாழ்த்து கூறி வருகின்றனர்.












Click it and Unblock the Notifications