நான் கழுகு.. சூர்யா காக்கா.. “போகாத ஜெயில் இல்ல.. என்னை சீண்டவேண்டாம்” : வரிச்சியூர் செல்வம் ஆவேசம்!
திருச்சி சூர்யா என்னை ரவுடி எனக் கூறியது மனதிற்கு மிகவும் கஷ்டமாக இருக்கிறது என வரிச்சியூர் செல்வம் தெரிவித்துள்ளார்.
சென்னை : "ஒரு மனிதனை இழிவுபடுத்தக் கூடாது. திருந்தி விட்டால் அவருக்கு உறுதுணையாகத்தான் இருக்க வேண்டும். நான் உயர பறக்கும் கழுகு. ஆனால் சூர்யா ஒரு காகம். நான் கடலில் நீந்துகிறவன், ஆனால் சூர்யா கிணற்றில் நீந்துகிறவர்" எனக் கூறியுள்ளார் வரிச்சியூர் செல்வம்.
வரிச்சியூர் செல்வத்தை காயத்ரி ரகுராம் சந்தித்தது தொடர்பாக பாஜக முன்னாள் நிர்வாகி திருச்சி சூர்யாவுக்கும் வரிச்சியூர் செல்வத்திற்கும் இடையே இடையே கருத்து மோதல் ஏற்பட்டது.
இந்நிலையில், இருவரும் மாறி மாறி செய்தியாளர்களைச் சந்தித்து வருகின்றனர். இன்று செய்தியாளர்களைச் சந்தித்த வரிச்சியூர் செல்வம், திருந்தி வாழும் தன்னை சீண்ட வேண்டாம் என திருச்சி சிவாவுக்கு அறிவுறுத்தியுள்ளார்.

வரிச்சியூர் செல்வம்- சூர்யா சிவா
வரிச்சியூர் செல்வம் சமீபத்தில் செய்தியாளர்களைச் சந்தித்தபோது, காயத்ரி ரகுராமுடன் நான் இருக்கும் புகைப்படத்தை திருச்சி சூர்யா வெளியிட்டிருந்தார். அதில் எந்த தவறும் இல்லை, இப்படியெல்லாம் போட்டோவை வெளியிடலாமா எனக் கேட்டேன். உடனே திருச்சி சூர்யாவும் என்னிடம் மன்னிப்பு கேட்டு அதை எடுத்துவிட்டார் எனக் கூறியிருந்தார். இந்த நிலையில் தான் வரிச்சியூர் செல்வத்திடம் மன்னிப்பு கேட்கவில்லை என்றும் அவர்தான் என்னிடம் மன்னிப்பு கேட்டார் என்றும் வரிச்சியூர் செல்வம் தனக்கு அனுப்பிய ஆடியோ மெசேஜை செய்தியாளர்கள் சந்திப்பில் வெளியிட்டார் திருச்சி சூர்யா.

நான் போகாத ஜெயில் இல்லை
இந்நிலையில், இன்று சென்னையில் செய்தியாளர்களைச் சந்தித்துப் பேசிய வரிச்சியூர் செல்வம், "திருச்சி சூர்யா என்னிடம் மன்னிப்புக் கேட்டார் என்று நான் பேச்சுவாக்கில் சொன்னேன். திருச்சி சூர்யாவும் தனது பிரஸ் மீட்டில் வரிச்சியூர் செல்வம் என்னிடம் மன்னிப்பு கேட்டார் என்று சொன்னாலும் பரவாயில்லை நான் வருத்தப்பட்டு இருக்கமாட்டேன். என்னை ரவுடி என திருச்சி சூர்யா சொன்னது தான் மிகவும் கஷ்டமாக இருக்கிறது. நான் தமிழ்நாட்டில் போகாத ஜெயில்களே இல்லை, இந்தியாவில் 4 மாநில ஜெயில்களில் இருந்துள்ளேன். கடைசியாக திருச்சி ஜெயிலில் இருந்து வெளியே வரும்போது தேங்காய் உடைத்து இனிமேல் ஜெயில் பக்கமே போகமாட்டேன் என சபதம் எடுத்தேன்.

ரவுடி என சொல்ல நீ யாரு
என் மீது தற்போது எந்த வழக்கும் கிடையாது. என்னால் என் குடும்பத்தினர் பாதிக்கக்கூடாது. அனைத்தையும் தூக்கி எறிந்துவிட்டு எனது பேரன் பேத்திகளுக்காக வாழ்ந்து வருகிறேன். என்னை ரவுடி என சொல்வதற்கு திருச்சி சூர்யா யார்? ஒரு மனிதனின் தன்மானத்தை நோண்டக்கூடாது. நான் இனிமேல் எந்த தவறும் செய்யமாட்டேன் என போலீசாரிடம் எழுதிக் கொடுத்துள்ளேன். நான் பாட்டுக்கு ஜாலியாக போய்க்கொண்டிருக்கிறேன். என்னை விட்டுவிடுங்கள். ரவுடி என்பது போலீசாரால் கொடுக்கப்பட்ட பட்டம். இன்னும் 2 ஆண்டுகளில் போலீசாரே அதை எடுத்துவிடுவார்கள்.

நான் கழுகு.. சூர்யா காகம்
எனக்கு சூர்யாவை யார் என்றே தெரியாது. மதுரையில் பெல் ஹோட்டலில் சாப்பிடச் சென்றபோது மாஸ்டர் கணேஷ் மற்றும் காயத்ரி ரகுராம் ஆகியோரிடம் போட்டோ எடுத்தேன். இதனை திருச்சி சூர்யா சமூக வலை தளத்தில் "ரவுடியுடன் உனக்கு என்ன வேலை" என்று கேட்டு பதிவிட்டார். டெய்சி என்ற பெண்ணுடன் திருச்சி சூர்யா சண்டை போட்டுள்ளார். திருச்சி சூர்யா எனக்கு ஒரு ஆளே கிடையாது. சமீபத்தில் ஒரு பஸ்ஸை திருடிச் சென்று விட்டதாக கேள்விப்பட்டேன். நான் உயர பறக்கும் கழுகு. ஆனால் சூர்யா ஒரு காக்கா. நான் கடலில் நீந்துகிறவன், ஆனால் சூர்யா கிணற்றில் நீந்தக்கூடிய ஆள்.

அரசியலில்
சூர்யா பெண்களுடன் சண்டை போடுவதையே வாடிக்கையாக கொண்டவர். தற்போது என்னை வம்பிழுத்து இருக்கிறார். நான் செத்துப்போன ரவுடி. திருந்தி நல்ல மனிதனாக வாழ்ந்து கொண்டிருக்கிறேன். என் அப்பா திமுகவின் பயங்கர விசுவாசி. 1978-இல் அதிமுகவினர் எனது தந்தையை வெட்டினார்கள். செல்லூரில் நடந்த நிகழ்ச்சியில் அவருக்கு கொடுத்த தங்கத்தை எனது அப்பாவுக்கு கருணாநிதி கொடுத்தார். அப்படிப்பட்ட கட்சியில் நான் சேர்ந்து பேரை கெடுத்துவிடக்கூடாது. இந்த தோரணையில் கட்சியில் போய் சேரவும் முடியாது. இப்படியே போய் கட்சியில் சேர்ந்தால் நல்லா இருக்குமா? வெள்ளை வேட்டி சட்டை போடுவது எனக்குப் பிடிக்காது.
-
பாஜக கூட்டணிக்கு விஜய் வருவாரா? டெல்லி தலைமை முடிவு செய்யும்.. நயினார் நாகேந்திரன் சூசக பதில்! -
பாஜகவின் "பெரிய அசைன்மெண்ட்".. தடையாய் நிற்கும் சைலண்ட் கில்லாடி? விஜய்யின் இமேஜ் மேக்ஓவர் சிதையுமா? -
ஜான் ஆரோக்கியசாமி போட்ட மெகா ஸ்கெட்ச்.. மிரண்டு போன பாஜக மேலிடம்.. B டீம் முத்திரையை உடைப்பாரா விஜய் -
50-ல் தொடங்கி 25-ல் மல்லுக்கட்டும் அதிமுக, பாஜக.. எடப்பாடி பழனிசாமி கறார் முடிவால் கூட்டணி விரிசல்? -
புதுச்சேரியில் 16 தொகுதிகளில் என்.ஆர்.காங்கிரஸ் போட்டி.. பாஜக + அதிமுக + லஜகவுக்கு 14 சீட்! -
விஜய் ஆசைக்கு ‘வேட்டு’ வைத்த ரங்கசாமி.. புதுச்சேரியில் தவெக உடன் கூட்டணி கிடையாது.. அதிரடி முடிவு! -
அமெரிக்கா இனி பிக்பாஸ் இல்லை.. நீங்க நம்பலைனாலும் அதான் நெசம்.. ஐக்கிய அரபு சகாப்தமும் வீழ்ந்தது! -
கள்ளக்குறிச்சியில் சினிமாவை மிஞ்சும் சம்பவம்.. காதல் கணவனுக்கு உயிருடன் கொள்ளி வைத்த அம்மு -
எங்களை எப்படியாவது காப்பாத்துங்க.. அமெரிக்கா - இந்தியாவிடம் கெஞ்சும் வங்கதேசம்.. ரஷ்யா உதவுமா? -
பாஜகவுடன் கூட்டணி அமைக்கலாமா? 98 தவெக மாவட்டச் செயலாளர்கள் ஆதரவு.. விஜய் எடுக்கப்போகும் முடிவு! -
சீனா அரண்டு நிற்குது.. மொத்த டிராகனுக்கும் சவால் விடும் தமிழ்நாட்டின் குட்டி சிட்டி.. ரியல் இன்ஜின்! -
வந்தாச்சு நீண்ட காலம் காத்திருந்த நல்ல செய்தி.. H-1b விசா கட்டுப்பாடுகள் நீக்கம்? புதிய மசோதா தாக்கல்












Click it and Unblock the Notifications