வாசன் ஐ-கேர் குழுமத் தலைவர் அருண் மறைவு... ப.சிதம்பரத்திற்கு ஆல் இன் ஆலாக திகழ்ந்த நபர்..!
சென்னை: இந்தியா முழுவதும் 170 கிளைகளுடன் இயங்கி வரும் வாசன் ஐ கேர் குழுமத்தின் தலைவர் அருண் இன்று காலமானார்.
Recommended Video
40 வயதில் வாசன் ஐ கேர் என்ற பெயரில் திருச்சியில் கண் மருத்துவமனையை தொடங்கிய அருண், அடுத்த 10 ஆண்டுகளில் இந்தியா முழுவதும் தனது கிளைகளை ஆலமர விழுதாக பரவச்செய்தார்.
முன்னாள் மத்திய அமைச்சர் ப.சிதம்பரத்தின் வலதுகரமாக திகழ்ந்த அருணுக்கு கடந்த சில ஆண்டுகளாக நிதி நெருக்கடி ஏற்பட்டதாக கூறப்படுகிறது.

வாசன் மெடிக்கல்
கரூர் தொகுதியில் காங்கிரஸ் சார்பில் எம்.பி.யாக இருந்த முருகையா என்பவரின் மகன் தான் இந்த அருண். வாசன் குரூப் என்ற பெயரில் திருச்சியில் முருகையா குடும்பத்தினருக்கு சொந்தமாக ஏராளமான சொத்துக்கள் உள்ளன. திருச்சி கரூர் சாலையில் ஏபிசி ஹாஸ்பிடல் என்ற மல்ட்டி ஸ்பெஷாலிட்டி மருத்துவமனையை நிறுவிய அருண், கண் மருத்துவத்திற்கென பிரத்யேகமாக வாசன் ஐ கேர் என்ற மருத்துவமனையை 2008-ம் ஆண்டு தொடங்கினார்.

இந்தியா முழுவதும்
ப.சிதம்பரத்திற்கு ஆல் இன் ஆலாக விளங்கிய அருணின் வளர்ச்சி அடுத்த சில ஆண்டுகளில் விஸ்வரூபம் எடுத்தது. ஒரு கட்டத்தில் கண் மருத்துவமனையை திறந்து வைக்க பிரதமர் மன்மோகன் சிங்கை அழைத்து வரும் அளவுக்கு அருணின் செல்வாக்கு உயர்ந்தது. இந்தியா முழுவதும் 170 கிளைகளில் வாசன் ஐ கேர் செயல்பட்டு வரும் நிலையில் மாதம் ஒன்றுக்கு பல ஆயிரம் கோடி ரூபாய் வரவு செலவு நடந்து வருகிறது.

வெளிநாடு
இப்படிப்பட்ட சூழலில் அருணுக்கு ஏற்பட்ட மாரடைப்பு காரணமாக அவர் காலமாகிவிட்டார். சென்னை ஆழ்வார்பேட்டையில் உள்ள அவரது இல்லத்தில் இன்று காலை 8 மணியளவில் அருணுக்கு மாரடைப்பு ஏற்பட்டதாக தெரிகிறது. இதையடுத்து காவேரி மருத்துவமனைக்கு அழைத்துச்செல்லப்படும் வழியிலேயே அவர் உயிர் பிரிந்திருக்கிறது. அருண் நிதி நெருக்கடியில் தவித்து வந்ததாகவும் இதன் காரணமாக சில மாதங்கள் அவர் வெளிநாடுகளில் தங்கியிருந்ததாகவும் கூறப்படுகிறது.

பென்ஸ் கார்
ப.சிதம்பரம் மத்திய அமைச்சராக இருந்தபோது திருச்சி வந்தால் அவருக்கு அருண் வீட்டில் இருந்து தான் பென்ஸ் கார் அனுப்பி வைக்கப்படும். ப.சிதம்பரத்தின் சொத்து விவரங்கள் பற்றி அருண் ஓரளவு நன்கு அறிந்து வைத்திருப்பவர். கார்த்தி சிதம்பரத்தின் பிறந்தநாளான இன்று அருண் மறைந்திருப்பது ப.சிதம்பரம் தரப்பிற்கு மிகுந்த சோகத்தை அளித்திருக்கிறது.
-
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்! -
இந்தா ஆரம்பிச்சுட்டாங்கல்ல.. திருச்சி இடை தேர்தலில் திமுகவில் சீட் யாருக்கு! ரேசில் அன்பில் - இனிகோ! -
Indoor Plants: வீட்டின் காற்றைச் சுத்திகரித்து ஆக்ஸிஜன் அளவை அதிகரிக்கும் இன்டோர் செடிகள்! -
தேசிய அளவில் பலவீனமடையும் பாஜக எதிர்ப்பு.. காங்கிரஸ் செயலால் திட்டத்தை மாற்றும் திமுக! -
திருச்சி கிழக்கு இடைத்தேர்தல்.. தவெக வேட்பாளராக சிரஞ்சீவி? மேடையில் முதல்வர் விஜய் தந்த செம ஹிண்ட் -
"விஜய்" பெயரை யாரும் சொல்லக் கூடாது.. வார்த்தையைவிட்ட துணை சபாநாயகர்.. பத்திரிகையாளர் சொன்ன பதில்! -
திமுகவை தோற்கடித்த 8 அதிர்ச்சி காரணங்கள்.. ஸ்டாலின் மேஜைக்கு போன இறுதி ரிப்போர்ட்.. உள்ளே ஷாக்! -
தவெகவின் முதல் ராஜ்யசபா எம்.பி யார்? 4 பேரில் ஒருவர் பெயரை 'டிக்' அடிக்க ரெடியாகும் விஜய்! -
ஒரு 'நாளுக்கு' ரூ.22.63 லட்சம் சம்பளம் வாங்கும் இன்போசிஸ் ஊழியர்.. யாருப்பா அது! -
நன்றி மறக்காத விஜய்.. தவெகவின் முதல் ராஜ்யசபா எம்பி யார்? ரேசில் முன்னணியில் ’லெஃப்ட் - ரைட்’ ஹேண்ட் -
“தவெகவுக்கு ஓட்டு போடாத தென்காசி மக்களும் பாதிக்கப்படுகிறோம்”.. நள்ளிரவில் எழுந்த திடீர் போராட்டம்! -
“விஜய் இன்னொரு கருணாநிதி என நிரூபித்து வருகிறார்”.. அட்டாக் மோடில் வானதி சீனிவாசன்












Click it and Unblock the Notifications