புலிப் பாய்ச்சலில் வசந்தகுமார்... கன்னியாகுமரி இவர் "கை"வசமாக் கூடுமாம்.. பரபரக்கும் தேர்தல் களம்
வசந்தகுமார், பொன்.ராதாகிருஷ்ணன் - ஸ்டார் தொகுதியான கன்னியாகுமரியை வெல்வது யார்?
Recommended Video

சென்னை: கன்னியாகுமரியில் இவர்தான் வெற்றி பெறக்கூடும் என்ற ஒரு கருத்து கணிப்பு மேலோட்டமாக எழுந்துள்ளதாம்!
கன்னியாகுமரியை பொறுத்தவரை பாஜகவின் கோட்டை.. பாஜகவின் மண்.. இது எல்லாவற்றையும்விட மத்திய இணை அமைச்சர் பொன்.ராதாகிருஷ்ணன்தான் இதே தொகுதிதான்.
அதேபோல போட்டி வேட்பாளராக நிற்பதோ காங்கிரசின் வசந்தகுமார்தான். அதனால்தான் ஸ்டார் அந்தஸ்தை இந்த தொகுதி பெறுகிறது.

நாடார்கள்
தொகுதியை பொறுத்தவரை பெரும்பாலும் ஆர்.சி. கிறிஸ்தவ மக்கள்தான் உள்ளனர். ஆனால் வேட்பாளர்கள் இருவருமே இந்துக்கள்.. இருவருமே நாடார்கள்! இருவருமே இந்த தொகுதியில் வேட்பாளர்களாக நிறுத்தப்படுவார்கள் என்று எதிர்பார்க்கப்பட்டவர்கள்தான்!

பிரச்சனை இல்லை
காங்கிரசை வைத்து மத்த வேட்பாளருக்குதான் பலம் என்றால், வசந்தகுமார் இருப்பதாலேயே காங்கிரசுக்கு பலம் என்ற பெயர் இருக்கிறது. பசை உள்ள நபர்.. ஒட்டுமொத்தமாக தேர்தல் நடந்து முடியும்வரை ஒரு பிரச்சனையும் இருக்காது.

ஜேசிபி இயந்திரம்
இவர் மீது தொகுதி மக்கள் தனிப்பட்ட முறையில் மதிப்பு வைத்துள்ளார்கள். இதற்கு காரணம், நாங்குநேரி சட்டமன்ற தொகுதிக்கு உட்பட்ட கண்மாய்களை சொந்த காசிலேயே தூர்வாரி இருக்கிறார். இதற்காகவே ஒரு ஜேசிபி இயந்திரத்தை வாங்கி உள்ளாராம்! ஒரு எம்எல்ஏவாக இருந்து கொண்டே இவ்வளவு நன்மைகளையும் செய்பவர், எம்பி ஆனால் நிச்சயம் தொகுதிக்கு நிறைய வசதிகளை செய்து தருவார் என்று நம்பப்படுகிறது. இதுபோக பாஜகமேல் மக்களுக்கு உள்ள அதிருப்தி ஓட்டுக்களும் இவருக்கு சாதகமாகும் என்றே தெரிகிறது.

பின்னடைவு
அதேபோல பொன் ராதாகிருஷ்ணனை பொறுத்தவரையில் மக்களுக்கு நேரடி கோபம் உள்ளது. குளச்சல் துறைமுகம் சமாச்சாரம் அப்படியே கிடப்பில் உள்ளதே அதற்கு காரம். அதிமுகவுடன் கூட்டணி என்பது மற்றொரு மைனசாக தொகுதி மக்கள் தரப்பில் பார்க்கப்படுகிறது. இதெல்லாம் சேர்ந்து பொன்.ராதாவுக்கு பின்னடைவை தரும் என்று சொல்லப்படுகிறது.

சிறுபான்மை ஓட்டுக்கள்
அதனால் கூட்டி கழித்து பார்த்தால், பொன்.ராதாகிருஷ்ணனைவிட வசந்தகுமாருக்கு வாய்ப்பு பிரகாசமாக இருப்பதாக ஒரு கருத்து எழுந்து வருகிறது. இருந்தாலும், வேட்பாளர்கள் இருவருக்குமே நாடார் சமூக ஓட்டுக்கள் விழுந்தாலும், சிறுபான்மை ஓட்டுகள் யாருக்கு அதிகம் விழுகிறதோ அதை வைத்தே வெற்றி தோல்வி நிர்ணயிக்கப்பட வாய்ப்பு உள்ளது என்பதே கள நிலவரம்!
-
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்! -
இந்தா ஆரம்பிச்சுட்டாங்கல்ல.. திருச்சி இடை தேர்தலில் திமுகவில் சீட் யாருக்கு! ரேசில் அன்பில் - இனிகோ! -
Indoor Plants: வீட்டின் காற்றைச் சுத்திகரித்து ஆக்ஸிஜன் அளவை அதிகரிக்கும் இன்டோர் செடிகள்! -
தேசிய அளவில் பலவீனமடையும் பாஜக எதிர்ப்பு.. காங்கிரஸ் செயலால் திட்டத்தை மாற்றும் திமுக! -
திருச்சி கிழக்கு இடைத்தேர்தல்.. தவெக வேட்பாளராக சிரஞ்சீவி? மேடையில் முதல்வர் விஜய் தந்த செம ஹிண்ட் -
"விஜய்" பெயரை யாரும் சொல்லக் கூடாது.. வார்த்தையைவிட்ட துணை சபாநாயகர்.. பத்திரிகையாளர் சொன்ன பதில்! -
திமுகவை தோற்கடித்த 8 அதிர்ச்சி காரணங்கள்.. ஸ்டாலின் மேஜைக்கு போன இறுதி ரிப்போர்ட்.. உள்ளே ஷாக்! -
தவெகவின் முதல் ராஜ்யசபா எம்.பி யார்? 4 பேரில் ஒருவர் பெயரை 'டிக்' அடிக்க ரெடியாகும் விஜய்! -
ஒரு 'நாளுக்கு' ரூ.22.63 லட்சம் சம்பளம் வாங்கும் இன்போசிஸ் ஊழியர்.. யாருப்பா அது! -
நன்றி மறக்காத விஜய்.. தவெகவின் முதல் ராஜ்யசபா எம்பி யார்? ரேசில் முன்னணியில் ’லெஃப்ட் - ரைட்’ ஹேண்ட் -
“தவெகவுக்கு ஓட்டு போடாத தென்காசி மக்களும் பாதிக்கப்படுகிறோம்”.. நள்ளிரவில் எழுந்த திடீர் போராட்டம்! -
“விஜய் இன்னொரு கருணாநிதி என நிரூபித்து வருகிறார்”.. அட்டாக் மோடில் வானதி சீனிவாசன்












Click it and Unblock the Notifications