கொரோனா பாதிப்பு.. வசந்தகுமார் எம்பிக்கு வெண்டிலேட்டர் உதவியுடன் தீவிர சிகிச்சை.. கேஎஸ் அழகிரி
சென்னை: கொரோனாவால் பாதிக்கப்பட்டுள்ள எம் பி வசந்தகுமாருக்கு வெண்டிலேட்டர் உதவியுடன் தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருவதாக தமிழ்நாடு காங்கிரஸ் கமிட்டி தலைவர் கே எஸ் அழகிரி தெரிவித்துள்ளார்.
கன்னியாகுமரி தொகுதி எம்பி வசந்தகுமார் வயது 70, கொரோனா வைரஸ் தொற்றால் பாதிக்கப்பட்டுள்ளார். அவரது மனைவி தமிழ்செல்விக்கும் பாதிப்பு உறுதி செய்யப்பட்டுள்ளது. இருவரும் சென்னையில் உள்ள அப்பல்லோ மருத்துவமனையில் சிகிச்சைக்காக சேர்க்கப்பட்டு சிகிச்சை பெற்று வருகிறார்கள்.

இந்நிலையில் கடந்த ஒரு வாரத்திற்கு மேலாக மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வரும் வசந்தகுமார் எம்பிக்கு வென்டிலேட்டர் உதவியுடன் சிகிச்சை அளிக்கப்பட்டு வருவதாக தமிழ்நாடு காங்கிரஸ் கமிட்டி தலைவர் கேஎஸ் அழகிரி கூறி உள்ளார்.
சென்னையில் செய்தியாளர்களை சந்தித்த போது இந்த தகவலை அவர் தெரிவித்தார். வசந்தகுமார் எம்பி மீண்டும் பூரண குணம் அடைந்து திரும்ப வேண்டும் என்றும் கேஎஸ் அழகிரி கூறினார்.












Click it and Unblock the Notifications