கட்சித் தலைவர்களின் வீட்டுப் பெண்கள் குறித்து பேசுவது ஆரோக்கிய அரசியலா? அண்ணாமலைக்கு வாசுகி கண்டனம்!
சென்னை: தமிழ்நாடு பாஜக தலைவர் அண்ணாமலை, நேற்று இரவு சென்னையில் செய்தியாளர்களைச் சந்தித்தபோது, துர்கா ஸ்டாலின் பெயரைக் குறிப்பிட்டு பேசியதற்கு, சிபிஐஎம் கட்சியின் உ.வாசுகி கண்டனம் தெரிவித்துள்ளார்.
தமிழ்நாடு பாஜக தலைவர் அண்ணாமலை இங்கிலாந்தில் சுற்றுப்பயணம் மேற்கொண்டு அங்கு பல்வேறு நிகழ்ச்சிகளில் கலந்து கொண்டார். லண்டனில் வாழும் தமிழர்களைச் சந்தித்துப் பேசினார். இங்கிலாந்து நாடாளுமன்றத்தில் உள்ள ஹவுஸ் ஆப் லார்ட்ஸ் அரங்கத்தில் பிரிட்டன் தமிழ்ச் சங்கம் சார்பில் ஏற்பாடு செய்திருந்த நிகழ்விலும் அண்ணாமலை பங்கேற்றார்.

இதையடுத்து, தமிழ்நாடு பாஜக தலைவர் அண்ணாமலை இங்கிலாந்து பயணத்தை முடித்துக் கொண்டு நேற்று இரவு தமிழ்நாட்டிற்கு திரும்பினார்.சென்னை விமான நிலையம் வந்திறங்கிய அண்ணாமலையை பாஜகவினர் வரவேற்றனர். பின்னர் அங்கு செய்தியாளர்களைச் சந்தித்தார் அண்ணாமலை.
அப்போது செய்தியாளர் ஒருவர், அமைச்சர் செந்தில் பாலாஜியின் சகோதரர் அசோக்குடன் நீங்கள் லண்டனில் ரகசிய சந்திப்பு நடத்தியதாக தகவல் வருகிறதே உண்மையா என அண்ணாமலையிடம் கேள்வி எழுப்பினார். இந்தக் கேள்வியால் டென்ஷனான அண்ணாமலை, அவரிடம் கோபமாகப் பேசினார்.
"இந்த தகவலை உங்களுக்கு யார் சொன்னது? திமுக வட்டாரத்தில் இருந்து ஸ்டாலின் சொன்னாரா? துர்கா ஸ்டாலின் அம்மையார் உங்களுக்கு போனில் அழைத்து இந்த தகவலை சொன்னாரா? உதயநிதி ஸ்டாலின் சொன்னாரா? யார் உங்களுக்கு தகவல் கொடுத்தது என யார்னு முதலில் சொல்லுங்க.. உங்களுக்கு சோர்ஸ் எங்க இருந்து வந்துச்சு?" எனக் கோபமாக கேள்வி எழுப்பினார்.
அண்ணாமலை செய்தியாளர் சந்திப்பின்போது திமுகவை விமர்சிக்க, முதல்வர் ஸ்டாலினின் மனைவி துர்கா ஸ்டாலின் பெயரைக் குறிப்பிட்டது சலசலப்பை ஏற்படுத்தியது. இந்நிலையில், சிபிஐஎம் கட்சியின் மத்திய குழு உறுப்பினரும் அகில இந்திய ஜனநாயக மாதர் சங்கத்தின் தேசிய துணைத் தலைவருமான வாசுகி அண்னாமலையின் பேச்சைக் கண்டித்துள்ளார்.
அண்ணாமலை, ஊடக சந்திப்பில் திமுக வட்டாரம் என்றால் ஸ்டாலின் சொன்னாரா அவரது மனைவி துர்கா அம்மா சொன்னார்களா என்கிறார் இப்படித்தான் ஒவ்வொரு கட்சியை பற்றியும் கேட்பாரா? கட்சித் தலைவர்கள், ஊடக உரிமையாளர்கள் பற்றி பேசுகையில் அவர்கள் வீட்டு பெண்கள் குறித்து கோர்ப்பது ஆரோக்கியமான அரசியலா?
— Vasuki Umanath (@uvasuki) June 29, 2023
"அண்ணாமலை, ஊடக சந்திப்பில் திமுக வட்டாரம் என்றால் ஸ்டாலின் சொன்னாரா அவரது மனைவி துர்கா அம்மா சொன்னார்களா என்கிறார். இப்படித்தான் ஒவ்வொரு கட்சியை பற்றியும் கேட்பாரா? கட்சித் தலைவர்கள், ஊடக உரிமையாளர்கள் பற்றி பேசுகையில் அவர்கள் வீட்டு பெண்கள் குறித்து கோர்ப்பது ஆரோக்கியமான அரசியலா?" என விமர்சித்துள்ளார்.
-
டெல்லியில் க்ளைமாக்ஸ்! நெருங்கும் மெகா பிளான்.. பிரதமர் மோடியின் மத்திய அமைச்சரவையில் அதிரடி மாற்றம் -
திரிணாமுல் எம்பிகள் மீது தொடர் தாக்குதல்.. பாஜகதான் காரணமா? வெளியான ஷாக் தகவல்! -
"2.0 அவதாரம் எடுக்கும் அண்ணாமலை!".. பாஜகவா? புதிய கட்சியா? அரசியல் களத்தை அலற விட்ட போஸ்டர்கள் -
கொஞ்சம் பொறுமையா இருங்க ஜி! தனித் தவில் வாசிக்க தயாரான அண்ணாமலை! அமைதிப்படுத்த இறங்கிய அமித் ஷா? -
விஜய்யை வளைக்கிறதா தாமரை? காங்கிரஸை ஓரங்கட்ட தவெக மெகா பிளான்! அம்பலப்படுத்திய பாஜக -
யூ-டர்ன் அடிக்கும் விஜய்.. டெல்லி-க்கு மீண்டும் பயணம்.. சொன்னது யார் தெரியுமா? -
பாஜகவில் இருந்து விலகி அண்ணாமலை தனிக்கட்சி தொடங்குகிறார்? ரஜினி ஆதரவுடன் திருச்சி கிழக்கில் போட்டி? -
ஆபாசம்.. ஆபாசம்.. யூடியூபர்கள் கிருஷ் ஐஷ்வர்யா மீது கோவை சைபர் க்ரைம் போலீஸில் புகார் -
சென்னையில் நாளை மாலை ‘GenZ DMK’ பிரம்மாண்ட நிகழ்ச்சி.. களமிறங்கும் திமுக உணர்வுள்ள இளைஞர்கள்! -
ஆள் மட்டுமில்லை.. கட்சியையே தவெகவில் இணைக்கும் புகழேந்தி.. புஸ்ஸி - செங்கோட்டையனுடன் சந்திப்பு -
அதிமுகவில் அடுத்த விக்கெட்? சி.வி.சண்முகத்துக்கு இப்படியொரு லட்டு சான்ஸ்? போட்டு தாக்குதே தவெக -
விசில் அடித்து முன்னேறும் கர்நாடகா, ஆந்திரா.. இனி தமிழ்நாடு வேடிக்கை பார்க்கணும்! விஜய் போட்ட பிரேக்












Click it and Unblock the Notifications