விஜய் கட்சியில் இணைந்த ‘வாழை’ பட நடிகர்.. இங்க பாருங்க.. தவெகவில் உறுப்பினர் சேர்க்கை தீவிரம்!
சென்னை: 'வாழை' படத்தில் சிவனணைந்தானாக நடித்த பொன்வேல் விஜய்யின் தமிழக வெற்றிக் கழகத்தில் இணைந்துள்ளார். விஜய்யின் தவெக வரும் 2026 சட்டசபை தேர்தலில் களமிறங்கும் நிலையில், அக்கட்சியில் இணைந்துள்ளார் நடிகர் பொன்வேல்.
இயக்குநர் மாரி செல்வராஜ் இயக்கத்தில் வெளியாகி பெரும் வரவேற்பை பெற்ற திரைப்படம் 'வாழை'. இந்தப் படத்தில், நிகிலா விமல், கலையரசன், திவ்யா துரைசாமி உள்ளிட்ட பலர் நடித்திருந்தனர். இந்தப் படத்தின் மூலம் தமிழ் சினிமாவிற்கு அறிமுகமாகி இருந்தார் பொன்வேல்.

சிவனணைந்தான் எனும் கதாபாத்திரத்தில் நடித்த பொன்வேல் தனது சிறப்பான நடிப்பை வெளிப்படுத்தி இருந்தார். 'சிவனணைந்தான்' கேரக்டர் தான் வாழை படத்தின் மையப் பாத்திரம். இந்த கேரக்டரில் இயக்குநர் மாரி செல்வராஜின் உறவினரான பொன்வேல் நடித்து கவனம் ஈர்த்திருந்தார்.
இந்நிலையில், பொன்வேல் விஜய்யின் தமிழக வெற்றிக் கழகத்தில் இணைந்துள்ளார். தூத்துக்குடி மாவட்ட தவெக நிர்வாகிகள் முன்னிலையில், அவர் கட்சியில் இணைந்துள்ளார். அவருக்கு கட்சிக் கொடி அணிவித்து தவெகவினர் வரவேற்றனர். தவெகவில் இணைந்த நடிகர் பொன்வேலை, அக்கட்சித் தொண்டர்கள் வரவேற்று சமூக வலைதளங்களில் பதிவிட்டு வருகின்றனர்.
விஜய் தனது கட்சியின் முதல் மாநில மாநாட்டை கடந்த அக்டோபர் 27 ஆம் தேதி விக்கிரவாண்டியில் நடத்தினார். அப்போது கட்சியின் கொள்கை, கோட்பாடுகளை அறிவித்தார் விஜய். தமிழக வெற்றிக் கழக மாநாட்டில் விஜய்யின் பேச்சுகள் அரசியல் அரங்கில் பெரியளவில் விவாதத்தைக் கிளப்பின.
மக்கள் விரோத ஆட்சியை 'திராவிட மாடல்' ஆட்சி என்று கூறி ஏமாற்றுகிறார்கள். பிளவுவாத அரசியல் செய்பவர்கள் த.வெ.க-வின் கொள்கை எதிரி. திராவிடம், பெரியார், அண்ணா பெயரை வைத்துக் கொண்டு, தமிழ்நாட்டைச் சுரண்டும் குடும்ப சுயநலக் கூட்டம் நமது அரசியல் எதிரி என தவெக மாநாட்டில் தெரிவித்தார் விஜய். இதனால் அரசியல் களத்தில் பரபரப்பு தொற்றிக்கொண்டது.
அதைத்தொடர்ந்து 26 தீர்மானங்களையும் தமிழக வெற்றிக் கழகம் நிறைவேற்றி இருந்தது. தொடர்ந்து கட்சி தொடர்பாக அடுத்தடுத்த திட்டங்களை நடிகர் விஜய் மேற்கொண்டு வருவதால், தவெக தொண்டர்கள் உற்சாகமடைந்து பணிகளை தீவிரப்படுத்தி வருகின்றனர். இந்நிலையில் தற்போது கட்சியில் உறுப்பினர் சேர்க்கை மற்றும் நிர்வாகிகள் நியமனம் ஆகிய பணிகள் தீவிரமாக நடைபெற்று வருகின்றன.
இந்தச் சூழலில் தான் தூத்துக்குடி மாவட்டத்தில் தவெக கட்சியினர், பலரை, கட்சியில் இணைத்து வருகின்றனர். அந்தவகையில், 'வாழை' படத்தில் சிவனணைந்தானாக நடித்த பொன்வேலை தவெகவில் இணைத்து உள்ளனர்.












Click it and Unblock the Notifications