மாஸ்டர், பிகிலை தொடர்ந்து இப்போ Beast.. தமிழ் படங்களுக்கு ஆங்கில பெயர்களா?.. விஜய்க்கு விசிக கேள்வி
சென்னை: நடிகர் விஜய் நடிக்கும் தமிழ் படங்களுக்கு ஆங்கில பெயர்களையே வைப்பதன் மர்மம் என்னவோ என விடுதலைச் சிறுத்தைகள் கட்சியின் நிர்வாகி வன்னியரசு கேள்வி எழுப்பியுள்ளார்.
நடிகர் விஜய் நடிக்கும் 65 ஆவது படத்தை சன் பிக்சர்ஸ் தயாரிக்கிறது. இந்த படத்தை நெல்சன் இயக்குகிறார். விஜயின் பிறந்தநாளையொட்டி நேற்று மாலை இந்த படத்தின் பெயரை சன் பிக்சர்ஸ் வெளியிட்டது.
படத்திற்கு பெயர் பீஸ்ட் என வைக்கப்பட்டிருந்தது. படத்தின் பெயருடன் விஜயின் பர்ஸ்ட் லுக் போஸ்டரும் வெளியானது.

பெரிய துப்பாக்கி
அதில் விஜய் கையில் பெரிய துப்பாக்கி ஏந்தியபடி செம ஸ்டைலாக நின்றிருந்தார். இந்த நிலையில் நள்ளிரவு 12 மணிக்கு அவருக்கு பிறந்தநாள் வாழ்த்துகளுடன் சன் பிக்சர்ஸ் நிறுவனம் அந்த படத்தின் இரண்டாவது லுக்கையும் வெளியிட்டது.

ரசிகர்கள்
அதில் சிறிய கைத் துப்பாக்கியை வைத்து கொண்டு வாயில் சிகரெட்டுடன் கடும் கோபத்துடன் இருக்கும் விஜயின் புகைப்படம் வெளியானது. இதை ரசிகர்கள் கொண்டாடி வருகிறார்கள். இந்த நிலையில் படத்திற்கு பீஸ்ட் என பெயரிடப்பட்டுள்ளது சர்ச்சையை கிளப்பியுள்ளது.

ட்விட்டர்
விஜயின் திரைப்படங்களுக்கு அண்மைக்காலமாக ஆங்கில பெயர்களே வைக்கப்பட்டு வருவதாக சிலர் எதிர்ப்பு தெரிவித்துள்ளார்கள். அந்த வகையில் இதுகுறித்து விடுதலை சிறுத்தைகள் கட்சியின் நிர்வாகி வன்னியரசும் தனது ட்விட்டர் பக்கத்தில் கண்டனம் தெரிவித்துள்ளார்.

பீஸ்ட் படம்
அவர் பீஸ்ட் படத்தின் செகண்ட் லுக் போஸ்டரை பதிவு செய்து ட்விட்டரில் கூறுகையில் நடிகர் விஜய் நடிக்கும் படங்கள் தமிழில் தான் எடுக்கப்படுகின்றன.ஆனால் தமது தாய்மொழியான #தமிழ் மொழியை மதிக்காமல் தொடர்ந்து ஆங்கிலப்பெயர்களையே வைப்பதன் மர்மம் என்னவோ?Master, Bigil,படங்களை தொடர்ந்து
#Beast என பெயர் சூட்டி தாய்மொழியை புறக்கணித்து அவமானப்படுத்துவது சரியா? @actorvijay என கேட்டு விஜய்க்கும் டேக் செய்துள்ளார்.
-
விஜய்யின் 'நவீன் பட்நாயக் மாடல்' ஆட்சி.. அதிகாரிகளுக்கு தரப்பட்ட ஃப்ரீ ஹேண்ட்.. இதுதான் இனி ஸ்டைல்! -
தமிழ்நாட்டின் முதல் சட்டமன்ற பெண் செயலாளராக சாந்தி நியமனம்.. யார் இவர்? இவருடைய பவர் என்ன? -
விஜய் அமைச்சரவை கூட்டத்தின் Exclusive Footage.. திமுக ஐடி விங் பதிவிட்ட வீடியோ! -
முதல்வர் விஜய் குறித்து அம்மா ஷோபா சொன்ன ஒரு வரி... நடிகர் விவேக் குறித்தும் உருக்கம்.. விஷயம் இதுதானாம்! -
ஒவ்வொரு அமைச்சருக்கும் டார்கெட் நிர்ணயித்த முதல்வர் விஜய்.. கேபினட் மீட்டிங் பற்றி நிர்மல் விளக்கம்! -
நீ பாவம் பண்ணியிருக்க சேகர்பாபு... மேடையிலேயே நேருக்கு நேராக ஆ ராசா பேச்சு -
Ration Card: முடிவுக்கு வருகிறதா தாயுமானவர் திட்டம்..? ஜூலை முதல் ரேஷன் பொருட்கள் வீடு வீடாக வராது! -
2029க்கு டார்கெட் செய்யும் விஜய்.. எப்படியாவது உள்ளே நுழைய வேண்டும்.. திமுக கொடுத்த கேப்.. ராகுல் முடிவு என்ன? -
எதிர்க்கட்சிகள் தீர்ந்து போன சக்தி சரி.. அப்போ நீங்க? விஜய்யை லெப்ட் அண்ட் ரைட் வாங்கிய வேல்முருகன் -
நேற்று பெய்த மழையில் இன்று முளைத்த விஷக்காளான் நீங்க! விஜய் குறித்து திமுக ஐடி விங்க் விமர்சனம் -
கண்ணா ரெண்டு லட்டு திண்ண ஆசையா? விஜய்யை சூப்பராய் பயன்படுத்தும் ராகுல்! 5 மாசத்துல 2 எம்பி! பிரமாதம் -
சூடம் ஏற்றி.. தீபாராதனை காட்டி.. விஜய்-க்கு சிலை வைத்து கும்பிடும் திருச்சி தொண்டரின் குடும்பம் - வீடியோ












Click it and Unblock the Notifications