திருப்போரூர் பொது தொகுதியில் பாமகவை வீழ்த்தியது விசிக..1,609 வாக்குகள் வித்தியாசத்தில் பாலாஜி வெற்றி
சென்னை: செங்கல்பட்டு மாவட்டம் திருப்போரூர் தொகுதியில் பாமகவின் ஆறுமுகத்தை பானை சின்னத்தில் போட்டியிட்ட விசிக வேட்பாளர் பாலாஜி 1,609 வாக்குகள் வித்தியாசத்தில் வீழ்த்தி வென்றார். பொதுத்தொகுதியில் போட்டியிட்ட விசிக வெற்றி பெற்று சாதனை படைத்துள்ளது.
திமுக கூட்டணியில் இடம் பெற்றுள்ள விடுதலை சிறுத்தைகள் கட்சிக்கு எதிராக அதிமுக பாமக, பாஜக கூட்டணி கடுமையான பிரச்சாரங்களை முன்வைத்தன. இருந்த போதிலும் இந்த தேர்தலில் விசிக 4 இடங்களில் முன்னிலை வகிக்கிறது.
தமிழக சட்டசபை தேர்தல் முடிவுகள் வெளியாகிக் கொண்டு இருக்கின்றன. 234 தொகுதிகளுக்குமான வாக்குகள் காலை 8 மணியில் இருந்து எண்ணப்பட்டு வருகிறது.

அதிக இடங்கள்
இதுவரை வெளியாகி உள்ள முன்னணி நிலவரங்களின்படி திமுக கூட்டணி 155க்கும் மேற்பட்ட இடங்களில் முன்னிலை வகிக்கிறது. அதிமுக கூட்டணி சுமார் 78 இடங்களில் முன்னிலை வகிக்கிறது. மநீம ஒரு இடத்தில் முன்னிலை வகிக்கிறது.

2 பொது தொகுதி
திமுக கூட்டணியில் இடம்பெற்றுள்ள விடுதலை சிறுத்தைகள் கட்சி மிக சிறப்பாக செயலாற்றி உள்ளது. திமுகவின் கூட்டணியில் 6 தொகுதிகளில் போட்டியிட்டு ஒரு இடத்தில் வெற்றி உள்பட மொத்தம் 4 தொகுதிகளில் முன்னிலை வகிக்கிறது.

ஆளூர் ஷா நவாஸ்
திருப்போரூர் - எஸ்.எஸ்.பாலாஜி, நாகப்பட்டினம் - ஆளூர் ஷா நவாஸ், காட்டுமன்னார் கோயில் (தனி) - சிந்தனை செல்வன், செய்யூர் (தனி) - பனையூர் பாபு ஆகிய தொகுதிகளில் விசிக முன்னிலை வகிக்கிறது. இதில் திருப்போரூர் மற்றும் நாகப்பட்டினம் தொகுதி பொதுத்தொகுதியாகும். இதில் திருப்போரூரில் வெற்றி பாமகவின் ஆறுமுகத்தை பானை சின்னத்தில் போட்டியிட்ட விசிக வேட்பாளர் பாலாஜி 1,609 வாக்குகள் வித்தியாசத்தில் வீழ்த்தி வென்றார்.

உடைத்த விசிக
விசிக முன்னிலை வகிக்கும் 4 தொகுதிகளில் 2 தனி தொகுதிகள் 2 பொது தொகுதிகள் ஆகும். பொதுவாக தலித் மக்கள் வாக்குகளே விசிகவிற்கு கிடைக்கும் என்ற பிம்பம் கட்டமைக்கப்பட்டிருந்து. அதை விசிக உடைத்துள்ளது. ஜாதி கடந்த வெற்றியை விசிக பெற்றுள்ளது.
-
இனி 18 வயதுக்கு மேற்பட்டோருக்கு ஆதார் கார்டு கிடையாது.. அறிவித்த ஒடிசா அரசு.. காரணம் இதுதான் -
“மக்களை தெருநாய்களாக சித்தரித்த உங்களுக்கும் ஓட்டு போடுவாங்க”.. ராகவா லாரன்ஸுக்கு சேரன் பதில்! -
அரசியல் என்ட்ரி.. அதிகாரப்பூர்வமான அறிவிப்பை வெளியிட்ட திரிஷா.. சக நடிகை கமெண்ட் ஹைலைட் -
தவெகவில் சேர்ந்த 10 நாட்களிலேயே அரசியலில் இருந்தே விலகிய முன்னாள் MLA கோவிந்தசாமி.. பின்னணி என்ன? -
Vijay Sangeetha Divorce: சிஎம்-ஆவே இருந்தாலும் நேரில் தான் வரனும்.. வீடியோ கான்ஃப்ரன்ஸ் கோரிக்கையை நிராகரித்த நீதிமன்றம் -
மூட்டை முடிச்சை கட்டிக்கிட்டு பெங்களூர், ஹைதராபாத் போக வேண்டியதுதான்.. பின்னோக்கி செல்லும் சென்னை! -
தவெக அமைச்சரவையில் இருந்து எந்நேரத்திலும் வெளியேறுவோம்.. திருமாவளவன் கருத்துக்கு வன்னி அரசு விளக்கம் -
“செல்போனால் ஒரு மாநிலமே போய்விட்டது” - நீதிபதி ஜி.ஆர்.சுவாமிநாதனின் பேச்சால் சலசலப்பு! -
மனைவி சங்கீதாவுடன் மீண்டும் சேர்ந்து வாழும் விஜய்? விவாகரத்தை கைவிட இருவரும் முடிவா? வெளியான மேட்டர் -
தவெகவின் வெற்றி தொலைக்காட்சி ஆரம்பம்.. அதிகாரப்பூர்வ அறிவிப்பு.. நாஞ்சில் சம்பத் வாழ்த்து -
அனுபவத்தை விட அதிகாரமே மேலானது.. இதில் தான் திமுக தோற்றது.. குமுறும் திமுக நிர்வாகி -
"சாக்கடையில் இருக்க வேண்டியது.." கரப்பான் பூச்சி கட்சி குறித்து பவன் கல்யாண் சொன்ன கருத்து












Click it and Unblock the Notifications