A பார்ம், B பார்ம்.. அப்படினா என்னனு தவெக நிர்வாகிகளுக்கு தெரியுமா.. விஜயை விளாசிய திருமாவளவன்!
சென்னை: தமிழக வெற்றிக் கழகத்தைச் சேர்ந்த நிர்வாகிகளுக்கு A ஃபார்ம், B ஃபார்ம் என்றால் என்ன என்று தெரியுமா என்று விசிக தலைவர் திருமாவளவன் கேள்வி எழுப்பியுள்ளார். திமுக மற்றும் அதிமுகவில் 68 ஆயிரம் பூத்களில் அரசியல் பணியாற்றிய அனுபவம் கொண்ட நபர்கள் இருக்கிறார்கள் என்று கூறிய திருமாவளவன், தவெகவின் கட்டமைப்பு குறித்தும் கேள்வியை எழுப்பி இருக்கிறார்.
தமிழ்நாட்டில் சட்டமன்றத் தேர்தல் பணிகளை அனைத்து கட்சிகளும் தொடங்கிவிட்டன. திமுக தரப்பில் ஓரணியில் தமிழ்நாடு என்ற பிரச்சாரம் முன்னெடுக்கப்பட்டு வரும் நிலையில், அதிமுக தரப்பில் எடப்பாடி பழனிசாமி தொகுதி வாரியாக சுற்றுப்பயணமும் மேற்கொண்டு வருகிறார். அந்த வகையில் தவெக தரப்பில் விஜய் செப்டம்பர் முதல் சுற்றுப்பயணம் மேற்கொள்ள உள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.

திருமாவளவன் பேட்டி
அதற்கு முன்பாக தவெக தரப்பில் மாநாடு நடத்தப்பட உள்ளது. இதனிடையே தவெகவுக்கு பல்வேறு கட்சிகளின் தொண்டர்களும் ஆதரவு அளித்து வருவதாக ஆதவ் அர்ஜுனா உள்ளிட்டோர் கூறி வருகின்றனர். குறிப்பாக விசிகவில் இருந்து தவெகவிக்கு ஏராளமான தொண்டர்கள் ஆதரவாளர்களாக மாறிவிட்டதாக கூறி இருக்கிறார்.
சினிமா கவர்ச்சி
இதுகுறித்து திருமாவளவன் பேசுகையில், தலித் மக்கள் மட்டும் சினிமாக்காரர்களை பார்த்து போய்விடுவார்கள் என்று கூறுகின்றனர். அப்படி கிடையாது. விஜயகாந்த் வந்த போது என்னுடன் இருந்த யாரும் போகவில்லை. என் அரசியலை புரிந்து கொண்ட ஒருவர் கூட அப்போது போகவில்லை. அரசியல்படுத்தப்படாதவர்கள் போவார்கள். அதற்கு எதுவும் செய்ய முடியாது.
திமுக ஏன் அரசியல் எதிரி?
அம்பேத்கர் அரசியலை ஏற்றுக் கொண்ட யாரும் சினிமா புகழை பார்த்து இரையாக மாட்டார்கள். நாங்கள் பேசுவதை விஜய் பேசினால், அவர் எங்களிடமே இருந்துவிடலாமே.. திமுகவை விஜய் எதற்காக எதிர்க்கிறார்? எந்த அடிப்படையில் திமுக அரசியல் எதிரி? திமுகவை விட அதிமுக அவரின் பார்வையில் சிறப்பாக படுகிறதா? இரு கட்சிகளும் வேறு கொள்கைகளை கொண்டிருக்கிறார்களா?
எதிர்ப்பு வாக்குகள்
தமிழ்நாட்டில் திமுக மற்றும் அதிமுக எதிர்ப்பு வாக்குகள் எப்போதும் இருக்கிறது. இதனை சொல்லி பாமக வளர்ந்தார்கள். வைகோ மாற்று சக்தி என்று களமிறங்கினார்கள். இவர்கள் இருவருமே 8 சதவிகிதம் வரை சென்றார்கள். விஜயகாந்த் 10 சதவிகிதம் வரை சென்றார். பின் அவரும் அதிமுகவுடன் சென்றுவிட்டார். அதே எதிர்ப்பு வாக்குகளை சீமான் பெற்றார். அதனை பங்கு கொள்ள விஜய் வந்துள்ளார்.
68 ஆயிரம் பூத் கமிட்டி
திமுக மற்றும் அதிமுகவும் தமிழ்நாட்டில் உள்ள 68 ஆயிரம் பூத்களிலும் பூத் கமிட்டி போட முடியும். அவர்கள் அனைவருக்கும் பூத்தில் பணியாற்றிய அனுபவம் 50 ஆண்டுகளுக்கும் மேலாக உள்ளது. சுமார் 80 சதவிகித நிர்வாகிகள் அரசியல் பணியாற்றிய அனுபவம் கொண்டவர்கள். விஜயிடம் ரசிகர்கள் பட்டாளம் மட்டுமே இருக்கிறது. அவர்களும் இனிதான் அரசியல்படுத்தப்பட வேண்டும்.
ஏ ஃபார்ம், பி ஃபார்ம்
அவர்களுக்கு ஒரு ஃபார்மை வாங்கி சரியாக பூர்த்தி செய்ய தெரியுமா? ஏ ஃபார்ம், பி ஃபார்ம் என்றால் என்ன என்று தெரியுமா? அரசியலில் கள அனுபவம் முக்கியம். நாங்களே இப்போதுதான் கற்றுக் கொண்டுள்ளோம். ரசிகர்களின் ஆதரவை ஒருங்கிணைத்து அதனை வாக்குகளாக கொண்டு வருவதற்கு அடிப்படை கட்டமைப்பு மிகவும் முக்கியம. எந்த கட்சியும் அதிர்ஷ்டத்தில் ஆட்சிக்கு வர முடியாது என்று தெரிவித்துள்ளார்.
-
யாரு ஹீரோ? விஜய் Vs உதய்! பட்ஜெட் கூட்டத்தில் பட்டைய கிளப்புவது யார்? பரபரப்பாய் ரெடியாகும் லிஸ்ட்! -
விஜய் அதிரடி உத்தரவு! டெல்லி பயணம் முடித்த பின்பு முக்கியமான சேஞ்ச்! -
அமைச்சரவையில் இடம்.. இதனால்தான் விஜய்யை ஆதரித்தோமா? ஐயுஎம்எல் காதர் மொய்தீன் விளக்கம்! -
என் சொந்த பணத்தையே பயன்படுத்துங்க.. விஜய்யின் டெல்லி பயணம்.. தனியார் ஜெட்டுக்கு சொந்த காசில் செலவு? -
விஜய்யின் கனவு திட்டம்.. கூவம், அடையாறு ஆறுகளை மாற்றப்போகும் மாஸ்டர்பிளான்.. கைகோர்க்கும் டெல்லி -
பெரிய பிரச்சனை.. முதல்வர் அலுவலகத்துக்கே வரும் ’ஜான்’.! விஜய் டேபிளுக்கே போகாத உளவுத்துறை தகவல்! -
"முதுகு குத்து வரலாறுல அஜித் குமாருக்கு டஃப் கொடுப்போம் போலயே" புலம்பும் திமுகவினரின் மீம்ஸ்! -
எம்ஜிஆர் பாணியில் விஜய்.. கொல்லூர் மூகாம்பிகை கோவிலுக்கு வெள்ளி வாள் வழங்கி தரிசனம் -
காத்திருந்து காத்திருந்து..பனையூரில் பாழாய்ப் போன கனவுகள்! பதவி இல்லாமல் பரிதவிக்கும் ’தாவல்’ தலைகள்! -
நேர்மையாக செயல்படுங்கள்.. இல்லைன்னா தொலைச்சிடுவேன்! நகராட்சி அதிகாரிகளுக்கு விஜய் எச்சரிக்கை -
டெல்லி தமிழ்நாடு இல்ல கேண்டீனில் தீ விபத்து.. முதல்வர் விஜய் புறப்பட்ட சிறிது நேரத்தில் பரபரப்பு -
சோனியா காந்தியை நேரில் சென்று சந்தித்த முதல்வர் விஜய்.. இந்தியா கூட்டணியின் முக்கிய அங்கமாகும் தவெக!












Click it and Unblock the Notifications