கேரளா ஸ்டோரி இயக்குநர் மோடியா இருப்பாரோ? போலீஸ் பாதுகாப்பு “ஷாக்கா” இருக்கு - தடைகோரும் திருமாவளவன்

Subscribe to Oneindia Tamil

சென்னை: கேரளா ஸ்டோரி திரைப்படம் இஸ்லாமியருக்கு எதிரான வெறுப்பு அரசியலை விதைப்பதால் அதற்கு தடை விதிக்க வேண்டும் என விடுதலை சிறுத்தைகள் கட்சித் தலைவர் திருமாவளவன் கோரிக்கை விடுத்து உள்ளார்.

சுதிப்தோ சென் என்பவர் இயக்கத்தில் அடா சர்மா, சித்தி இத்னானி, பிரணவ் மிஸ்ரா உள்ளிட்ட பலர் நடிப்பில் தி கேரளா ஸ்டோரி என்ற திரைப்படம் வெளியாகி இருக்கிறது. பிற மதங்களை சேர்ந்த 32 ஆயிரம் கேரள பெண்கள் இஸ்லாமியர்களாக மதம் மாற்றப்பட்டு ஐஎஸ்ஐஎஸ் பயங்கரவாத அமைப்புகளில் சேர்க்கப்படுவதாக அடிப்படை ஆதாரங்கள் இன்றி இந்த படம் எடுக்கப்பட்டதாக பல்வேறு குற்றச்சாட்டுகள் எழுந்தன.

 VCK Chief Thirumavalavan demand the ban of The Kerala Story movie

இந்த திரைப்படத்துக்கு கேரள முதலமைச்சர் பினராய் விஜயன் தொடங்கி பல்வேறு தரப்பினர் கடும் எதிர்ப்புகளை தெரிவித்தனர். இந்த திரைப்படத்தில் தடைகோரிய வழக்குகளை மீறி நேற்று தமிழ்நாடு, கேரளா உள்ளிட்ட பல்வேறு மாநிலங்களில் இப்படம் போலீஸ் பாதுகாப்புடன் வெளியானது. இதனை கண்டித்து எஸ்டிபிஐ, மனிதநேய மக்கள் கட்சி, நாம் தமிழர் உள்ளிட்ட கட்சிகள் பல்வேறு இடங்களில் போராட்டத்தில் ஈடுபட்டன,

இந்த திரைப்படத்தின் டிரைலர் வெளியானதில் இருந்து இதற்கு எதிரான குரல்களும் ஒலிக்கத் தொடங்கின. பல்வேறு அமைப்புகள், தனிநபர்கள் தரப்பில் இந்த திரைப்படத்துக்கு தடை விதிக்க வலியுறுத்தி கேரளா உயர்நீதிமன்றம், சென்னை உயர்நீதிமன்றம், உச்சநீதிமன்றம் வரை வழக்குகள் தொடரப்பட்டு தள்ளுபடி செய்யப்பட்டன.

பல்வேறு போராட்டங்களுக்கு பிறகு வெளியான இந்த திரைப்படத்திற்கு மிக மோசமான விமர்சனங்களே வந்துகொண்டு இருக்கின்றன. கதை, திரைக்கதை, வசனம், இயக்கம், காட்சி அமைப்பு, இசை, உருவாக்கம் என அனைத்துமே மோசமாகவும் நம்பத்தகுந்த வகையிலும் இல்லை என்றே திரைப்படத்தை பார்த்துவிட்டு வந்த பெரும்பாலான ரசிகர்கள் தெரிவித்து வருகிறார்கள்.

 VCK Chief Thirumavalavan demand the ban of The Kerala Story movie

கேரள மாநிலம் காசர்கோட்டில் உள்ள நர்சிங் கல்லூரியின் விடுதி ஒன்றில் 3 இந்து மாணவிகள் மற்றும் ஒரு கிறிஸ்தவ மாணவி, முஸ்லிம் மாணவியும் ஒரே அறையில் தங்குவதாகவும், அப்போது முஸ்லிம் மாணவி பிற மத மாணவிகளை மூளைச் சலவை செய்து இஸ்லாம் மதத்துக்கு மாற்றுவதாக திரைப்படத்தின் கதை இருக்கிறது. மதம் மாறிய மாணவிகளை காதல் வளையில் இஸ்லாமிய ஆண்கள் வீழ்த்தி ஐஎஸ் பயங்கரவாத அமைப்பில் சேர்ப்பதாக கதையை அமைத்து உள்ளார்கள்.

முழுக்க முழுக்க அடிப்படை ஆதாரங்கள் இன்றி, இஸ்லாமிய வெறுப்புணர்வை விதைக்க வேண்டும் என்ற ஒற்றை நோக்கத்தில் இந்த திரைப்படம் தயாரிக்கப்பட்டு இருப்பதாகவே பல்வேறு ஊடகங்கள் வெளியிட்டு இருக்கும் விமர்சனங்களின் மூலம் தெரிகிறது. இந்த நிலையில் இந்த படத்திற்கு தடை விதிக்க வேண்டும் என்ற குரல்களும் வலுத்து வருகின்றன.

 VCK Chief Thirumavalavan demand the ban of The Kerala Story movie

அதே நேரம் பிரதமர் நரேந்திர மோடியோ, கர்நாடக மாநிலத்தில் தேர்தல் பிரச்சாரத்தின்போது கேரளா ஸ்டோரி திரைப்படத்தை ஆதரித்து பேசி இருப்பதன் மூலம் அரசியல் ரீதியாகவும் இந்த படம் சூடுபிடித்து உள்ளது. இந்த நிலையில் கேரளா ஸ்டோரி திரைப்படம் இஸ்லாமியருக்கு எதிரான வெறுப்பு அரசியலை விதைப்பதால் அதற்கு தடை விதிக்க வேண்டும் என விடுதலை சிறுத்தைகள் கட்சித் தலைவர் திருமாவளவன் கோரிக்கை விடுத்து உள்ளார்.

இதுகுறித்து ட்விட்டரில் பதிவிட்டு இருக்கும் அவர், "தி கேரளா ஸ்டோரி எனும் திரைப்படம் இஸ்லாமியருக்கு எதிரான வெறுப்பு அரசியலை விதைக்கிறது. இதனை பிரதமர் நரேந்திர மோடி அவர்கள் ஆதரிப்பது, அவர் அப்படத்தின் தயாரிப்பாளரோ அல்லது இயக்குநரோ என்று எண்ண வைக்கிறது. இப்படத்தைத் திரையிடுவதற்கு தமிழ்நாட்டில் காவல் துறையினர் பாதுகாப்பு அளித்துனர் என்பது அதிர்ச்சியளிக்கிறது. உடனே இதற்கு தடை விதிக்க வேண்டுமாறு தமிழ்நாடு அரசை வலியுறுத்துகிறோம்." என்று குறிப்பிட்டு உள்ளார்.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+