சென்னை அப்டேட்டுகளுக்கு
நோட்டிபிகேஷனை அனுமதி  
Oneindia App Download

நோட் பண்ணுங்க! அதிமுக பாஜக எல்லாம் ஒன்னுதான்.. வடஇந்தியர்களுக்கு வாக்குரிமை பற்றியும் திருமா பரபர

Google Oneindia Tamil News

சென்னை: இன்று விசிக தலைவர் திருமாவளவன் எம்பி பொங்கல் திருநாளைத் தனது கட்சித் தலைமை அலுவலகத்தில் தொண்டர்களுடன் கொண்டாடினார். அதன் பிறகு செய்தியாளர்களிடம் பேசிய அவர் பல்வேறு விஷயங்களைப் பகிர்ந்து கொண்டார்.

உலகெங்கும் உள்ள தமிழர்களால் தை திங்கள் முதல் நாளான இன்று பொங்கல் பண்டிகை கோலாகலமாகக் கொண்டாடப்படுகிறது. பொதுமக்கள் உற்சாகமாகப் பொங்கலைக் கொண்டாடி வருகின்றனர்.

பல்வேறு அரசியல் தலைவர்கள் பொங்கலைச் சிறப்பாகக் கொண்டாடி வருகின்றனர். அதன்படி சென்னை அசோக் நகரில் உள்ள விசிக தலைமை அலுவலகத்தில் பொங்கல் விழா கொண்டாடப்பட்டது.

அடுத்தடுத்து 'மறைமுக’ அட்டாக்.. கோபத்தில் திருமா? சைஸா என்ட்ரி கொடுக்கும் பாமக.. ரூட் மாறுதே! ஆஹா! அடுத்தடுத்து 'மறைமுக’ அட்டாக்.. கோபத்தில் திருமா? சைஸா என்ட்ரி கொடுக்கும் பாமக.. ரூட் மாறுதே! ஆஹா!

விசிக

விசிக

இதில் கட்சி தொண்டர்கள் மற்றும் நிர்வாகிகளுடன் இணைந்து விசிக தலைவர் திருமாவளவன் எம்பி பொங்கல் வைத்துச் சிறப்பாகக் கொண்டாடினார். அதன் பின் செய்தியாளர்களிடம் பேசிய அவர், "தை திருநாள் தான் தமிழர்களின் புத்தாண்டு. கருணாநிதி முதல்வராக இருந்த சமயத்தில் தை திருநாளைப் புத்தாண்டாகக் கொண்டாடச் சட்டத்தைக் கொண்டு வந்தார். இருப்பினும், ஜெயலலிதா ஆட்சிக்கு வந்தவுடன் அதை ரத்து செய்து சித்திரையைப் புத்தாண்டாக அறிவித்தார். தற்போதைய முதல்வர் ஸ்டாலின் தை முதல் நாளை தமிழர் புத்தாண்டாக அறிவிக்க வேண்டும்.

 தமிழ்நாடு- தமிழகம்

தமிழ்நாடு- தமிழகம்

அம்மா என்று சொன்னாலும் தாய் என்று சொன்னாலும் ஒன்று தான்... அம்மா என்பதை அதிகாரப்பூர்வமாகச் சொல்கிறோம். அதுபோல தான் தமிழ்நாடு என்றாலும் தமிழகம் என்றாலும் ஒன்று தான்.. இதில் வேறுபாட்டைக் கொண்டு வர முயல்வது குதற்கவாதம். இந்த இரண்டிற்கும் வித்தியாசம் உள்ளதாக ஆளுநர் இப்போது தொடங்கியுள்ளது சொல் விளையாட்டு இல்லை. அது ஒரு கருத்தியல் முரண். ஆளுநர் நடந்து கொள்வது தமிழ் இனத்திற்கு விரோதமானது.. மேலும், திராவிட கருத்தியலுக்கும் சமூக நீதி அரசியலுக்கும் எதிரான ஒன்றாகும்..

 ஆளுநர் ரவி

ஆளுநர் ரவி

அவரை ஆளுநராக நியமித்த போதே அவர் அரசியலில் குழப்பத்தையும் பதற்றத்தையும் ஏற்படுத்த முயல்வார் என எச்சரித்தேன். இப்போது அதைத்தான் அவர் செய்து வருகிறார். இதுபோன்ற பிற்போக்கு மற்றும் மதவாத சக்திகளிடம் இருந்து ஒட்டுமொத்த இந்தியாவையும் காப்பாற்ற வேண்டும். வேங்கைவயல் நீர்த்தேக்க தொட்டியில் மலம் கலந்த விவகாரத்திற்கு மனித உணர்வு உள்ள அனைவருமே வெட்கத்தில் தலை குனிய வேண்டும்.. இது ஒரு வெட்கக் கேடான விஷயம்.. இந்த விவகாரத்தில் குற்றவாளிகளை இன்னும் கூட கைது செய்யாதது அதிர்ச்சியை ஏற்படுத்துகிறது.

 வேங்கைவயல் சம்பவம்

வேங்கைவயல் சம்பவம்

இந்த வழக்கை விசாரிக்க முதலில் அமைக்கப்பட்ட சிறப்புப் புலனாய்வுக் குழு இதில் பாதிக்கப்பட்ட பட்டியலின மக்களையே அச்சுறுத்தியது. அங்குள்ள விசிக நிர்வாகியைக் குற்றத்தை ஒப்புக் கொள்ள வைக்க மிரட்டியுள்ளனர். இந்தச் சம்பவம் உயர் அதிகாரிகள் கவனத்திற்கு எடுத்துச் செல்லப்பட்ட உடன் இப்போது வழக்கு விசாரணை சிபிசிஐடி-க்கு மாற்றப்பட்டுள்ளது. இதை நாங்கள் மனப்பூர்வமாக வரவேற்கிறோம். இந்த கொடூரத்தைச் செய்த நபர்களுக்கு கடும் தண்டனை தர வேண்டும். தமிழர்களின் அவமான சின்னமான அந்த குடிநீர்த் தொட்டியை உடனடியாக இடிக்க வேண்டும்.

 இரண்டு நீர்த்தேக்க தொட்டி கூடாது

இரண்டு நீர்த்தேக்க தொட்டி கூடாது

இரட்டை குவளை முறை எப்படி தவறான ஒன்றோ.. அதேபோல இரு பிரிவினருக்கும் தனித்தனியாகக் குடிநீர்த் தொட்டியும் தவறானது. எனவே, அனைத்து தரப்பு மக்களுக்கும் பொதுவான குடிநீர்த் தொட்டியை அமைத்து.. அதில் இருந்து பட்டின மக்களுக்கும் குடிநீர் வழங்க வேண்டும். இந்த வழக்கில் சம்மந்தப்பட்ட அனைவர் மீதும் கடும் நடவடிக்கை எடுக்க வேண்டும். முதலமைச்சர் நேரடியாகத் தலையிட்டு விசாரணையின் உண்மை நிலையைத் தொடர்ந்து அறிந்து கொள்வது நல்லது.

 எஸ்பிஐ தேர்வு

எஸ்பிஐ தேர்வு

பொங்கல் திருநாளான இன்று எஸ்பிஐ வங்கி எழுத்தர் தேர்வை நடத்தியுள்ளனர். இதனால் சுமார் 13 ஆயிரம் பேர் தங்கள் குடும்பத்துடன் பொங்கலைக் கொண்டாட முடியாத ஒரு சூழல் ஏற்பட்டுள்ளது. தேர்வை மாற்றுத் தேதியில் நடத்த நான் உட்பட பலரும் உள்ளிருப்புப் போராட்டம் நடத்தியும் கூட அமைச்சர் நிர்மலா சீதாராமன் ஒப்புக்கொள்ளவில்லை. முதல்வர் ஸ்டாலின் நேரடியாகத் தொடர்பு கொண்டும் கூட அதை அவர் பொருட்டாக எடுத்துக் கொள்ளவில்லை. இதன் மூலம் அவர் அவர் தமிழர்களையும் தமிழையும் மதிப்பதில்லை என்பது தெரிகிறது. அமைச்சரை நாங்கள் கண்டிக்கிறோம்.

 வட இந்தியர்களுக்கு வாக்குரிமை

வட இந்தியர்களுக்கு வாக்குரிமை

தமிழ்நாட்டில் வேலைகளைப் பெறத் தமிழ்நாட்டுத் தேர்வாணையம் நடத்தும் தேர்வுகளில் தமிழில் கட்டாயம் தேர்ச்சி பெற வேண்டும் என அறிவித்துள்ளனர். இது வரவேற்கத்தக்க விஷயம். மேலும், தமிழ்நாட்டில் வேலை தேடி வரும் வட இந்தியர்களுக்கு வாக்குரிமை அளிக்க வேண்டும் எனச் சிலர் சொல்கிறார்கள். அப்படி அவர்களுக்கு வாக்குரிமை அளித்தால் அது தமிழக அரசியலையே புரட்டிப்போடும். அவர்கள் வேலை தேடி வருகிறார்களா இல்லை வாக்கு வங்கியை உருவக்க இங்கே வருகிறார்களா என்றே கேள்வி எழுகிறது. கேள்வி எழுகிறது. இதுபோல வேலை தேடி வருவார்களுக்கு வாக்குரிமை இல்லை என்ற முடிவைத் தமிழக அரசு எடுக்க வேண்டும்.

அதிமுக

அதிமுக

அதேபோல ஒரே நாடு ஒரே தேர்தல் என்பதையும் கொண்டு வர அவர்கள் தீவிரமாக முயன்று வருகிறார்கள். இதற்கு அதிமுகவும் ஆதரவு தெரிவித்துத் தேர்தல் ஆணையத்திற்குக் கடிதம் எழுதியுள்ளது. ஜெயலலிதா இறப்பிற்குப் பிறகு அதிமுக அதிமுகவாகவே இல்லை.. அவர்கள் பாஜகவின் துணை அமைப்பாகவே மாற்றிவிட்டனர். பாஜக எடுக்கும் எல்லா முடிவுகளுக்கும் அதிமுக கண்ணை மூடிக் கொண்டு ஆதரிக்கிறார்கள். இப்போதைய சூழலில் பாஜக, அதிமுக ஆகிய இரு கட்சிகளை வேறு வேறு கட்சியாகக் கருதத் தேவையில்லை.. இருவரும் ஒரே அமைப்பைப் போலவே இயங்கி வருகிறார்கள்" என்றார்.

English summary
Thirumavalavan says both Tamizhagam and tamilnadu are same: VCK Chief Thirumavalavan says North indians should not granded voting rights.
 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X