ராணிப்பேட்டையில் எழுச்சிகரமான ஆர்ப்பாட்டம்.. ஐயாயிரம் சிறுத்தைகள் பங்கேற்பு.. திருமாவளவன் ட்வீட்
சென்னை:அரக்கோணம் படுகொலையைக் கண்டித்து ராணிப்பேட்டையில் நடைபெற்ற ஆர்ப்பாட்டத்தில் ஐயாயிரத்துக்கும் மேற்பட்டவர்கள் கலந்துகொண்டதாக விடுதலை சிறுத்தைகள் கட்சித் தலைவர் திருமாவளவன் ட்வீட் செய்துள்ளார்.
ராணிப்பேட்டை மாவட்டம் அரக்கோணம் அருகே உள்ள சோகனூர் கிராமத்தில் அர்ஜுனன், சூரியா ஆகிய இளைஞர்கள் படுகொலை செய்யப்பட்டனர்.
மேலும், இதில் மூன்று பேர் காயமடைந்தனர். அரசியல் முன்விரோதம் காரணமாக இந்த படுகொலை நடந்திருப்பதாகக் கூறப்படுகிறது.

கண்டன ஆர்ப்பாட்டம்
இந்தச் சம்பவம் தமிழகம் எங்கும் பெரும் அதிர்வலைகளை ஏற்படுத்தியுள்ளது. இந்த சம்பவத்திற்கு பல்வேறு அரசியல் தலைவர்களும் தங்கள் கண்டனத்தைத் தெரிவித்திருந்தனர். மேலும், விடுதலை சிறுத்தைகள் கட்சி சார்பில் நேற்று ராணிப்பேட்டையில் மாபெரும் கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. இந்தப் போராட்டத்தில் ஆயிரக் கணக்கானோர் கலந்துகொண்டனர்.

திருமாவளவன் ட்வீட்
இந்நிலையில், ராணிப்பேட்டை போராட்டம் குறித்து விசிக தலைவரும் சிதம்பரம் தொகுதி எம்பியுமான திருமாவளவன் தனது ட்விட்டர் பக்கத்தில், அரக்கோணம் படுகொலையைக் கண்டித்து ராணிப்பேட்டையில் நடந்த ஆர்ப்பாட்டத்தில் பங்கேற்றேன். மிகுந்த எழுச்சிகரமாக நடந்தேறிய அந்த ஆர்ப்பாட்டத்தில் ஐயாயிரத்துக்கும் மேற்பட்ட சிறுத்தைகள் கலந்துகொண்டனர் என்று அவர் பதிவிட்டுள்ளார். மேலும் போராட்டம் தொடர்பாகப் புகைப்படங்களையும் அவர் பதிவிட்டுள்ளார்

திருமா பேச்சு
முன்னதாக போராட்டத்தில் பேசி திருமாவளவன், சாதி வெறுப்பு என்பதுதான். ஒருவர் எஸ்சி-ன்னு தெரிந்தாலே, அவனை அவமானப்படுத்துவது, தாக்குவது நடக்கிறது. தமிழ்நாட்டில் மட்டுமில்லை இந்தியா முழுக்க குடிசைகளுக்கு தீ வைக்கப்படுவது தலித்துகளின் குடியிருப்பதாகத்தான் இருக்கிறது.. அதிமுக - பாமக - பாஜகவினர் திட்டமிட்டு நடத்திய பச்சை படுகொலை இது. அவர்கள் தலித் இளைஞர்கள் என்பதாலேயே நிகழ்த்தப்பட்ட படுகொலை.

கட்சி முக்கியமில்லை
அரக்கோணத்தில் நடந்த இந்த இரட்டை படுகொலை என்பது குடிபோதையில் நிகழ்ந்த ஒரு சம்பவம் என்று சொல்வதைப் போல, ஒரு அயோக்கியத்தனம் இருக்க முடியாது. வேண்டாத ஊடகங்கள் அதை அப்படி திசை திருப்புகின்றன. அந்த 2 இளைஞர்களுமே போதைப் பழக்கம் இல்லாதவர்கள், குடிப்பழக்கம் இல்லாதவர்கள். எந்த கட்சிக்காரர்கள் என்பது முக்கியமில்லை.. எந்த சமூக பின்னணியைச் சேர்ந்தவர்கள் என்பதுதான் முக்கியம்.. தன் கட்சிக்காரர்கள் என்பதால் மட்டும், போராட வேண்டும் என்று நினைப்பது போல அறியாமை வேறு இல்லை என்று அவர் பேசியிருந்தார்.
-
"திமுக இல்லாதது கவலையளிக்கிறது.." ரொம்பவே வருத்தப்பட்டு பேசிய திருமாவளவன்.. என்ன மேட்டர்? -
அண்ணாமலைக்கும் அடைக்கலம் தரும் திருமா.. வாழ்த்து சொன்ன கையோடு அடுத்து சொன்ன மேட்டரை பாருங்க -
சமூக நீதி முற்போக்குக் கூட்டணி.. கொளுத்தி போட்ட காங்.! விசிக நிலைபாடு என்ன? திருமாவளவன் விளக்கம் -
நீ பாவம் பண்ணியிருக்க சேகர்பாபு... மேடையிலேயே நேருக்கு நேராக ஆ ராசா பேச்சு -
உள்ளே யாரு, அவனை வெளியே வர சொல்லு! வசமா பிடிபட்ட மனைவி.. தப்பிய கணவனை சுற்றி வளைத்த தஞ்சாவூர் போலீஸ் -
மாமூல் தொல்லையில் இருந்து முதல்வர் விஜய் எங்களை காப்பாற்றிவிட்டார்.. டாஸ்மாக் பணியாளர் சங்கம் -
ரூட்டை மாற்றிய இந்திய ஐடி நிறுவனங்கள்.. இனியும் சும்மா இருந்தா வேலைக்கு ஆகாது! -
மேகதாதுவில் அணை கட்ட தமிழகத்தின் அனுமதி தேவையில்லை.. கர்நாடக முதல்வரானதும் டிகே சிவக்குமார் பேச்சு -
விஜய்யின் ஆலோசகர் + 2 அமைச்சர்களால் நேர்ந்த அவமானம்.. சட்டசபை செயலாளர் சீனிவாசன் பதவி விலகியது ஏன்? -
தமிழகம் முழுவதும் டாஸ்மாக் கடைகள், பார்களை தனியாரிடம் ஒப்படைக்க திட்டம்? விஜய் எடுக்க போகும் முடிவு? -
75 பவுன்ஸ் ஆன செக்குகள்.. நடிகர் கரண் வாழ்க்கையை கெடுத்தது அந்த பெண்ணா? உண்மையை உடைத்த பிரபலம் -
எலக்ட்ரீஷியன் நள்ளிரவில் வாஷ்பேசினில் பண்ண காரியம்! உறைந்து போன 4 பிஞ்சு குழந்தைகள்! பதைபதைத்த கேரளா












Click it and Unblock the Notifications