விசிக மாநாட்டு மேடையில் ஏறி முண்டியடித்த தொண்டர்கள்.. பாதியிலேயே பேச்சை முடித்துக்கொண்ட திருமாவளவன்

Subscribe to Oneindia Tamil

கள்ளக்குறிச்சி: உளுந்தூர்பேட்டையில் இன்று நடைபெற்ற விசிக மாநாட்டில், திருமாவளவன் பேசும்போது, முண்டியடித்துக்கொண்டு ஏராளமான தொண்டர்கள் மேடையில் ஏறியதால் கடும் நெரிசல் ஏற்பட்டது. தள்ளுமுள்ளு காரணமாக தனது பேச்சை பாதியில் முடித்துக்கொண்டார் திருமாவளவன்.

கள்ளக்குறிச்சி மாவட்டம் உளுந்தூர்பேட்டையில் விடுதலை சிறுத்தைகள் கட்சி சார்பில், அக்கட்சியின் தலைவர் தொல். திருமாவளவன் தலைமையில் "தமிழ் தேசிய எழுச்சி மாநாடு" இன்று பிரம்மாண்டமாக நடைபெற்றது.

thirumavalavan

தமிழ் தேசிய உரிமைகளை மீட்டெடுத்தல், மக்களிடையே விழிப்புணர்வை ஏற்படுத்துதல், சமூகநீதி மற்றும் சமத்துவக் கருத்துகளை வலியுறுத்துதல் மற்றும் மதவாத சக்திகளுக்கு எதிராக வலுவான குரல் எழுப்புதல் ஆகிய முக்கிய நோக்கங்களை முன்வைத்து இந்த மாநாடு ஒருங்கிணைக்கப்பட்டது.

தமிழகத்தின் பல்வேறு மாவட்டங்களிலிருந்தும் ஆயிரக்கணக்கான விசிக தொண்டர்களும் நிர்வாகிகளும் இன்று காலையில் இருந்தே மாநாட்டுத் திடலில் குவியத் தொடங்கினர். கடுமையான கோடை வெயிலையும் பொருட்படுத்தாமல், தொண்டர்கள் மாநாட்டுத் திடலில் குவிந்தனர்.

இந்த மாநாட்டில், விசிக தலைவர் தொல்.திருமாவளவன் தீபம் ஏந்தி ரேம்ப் வாக் செய்தார். அப்போது, விசிக தொண்டர்கள் பலரும் ரேம்ப் மீது ஏறியதால் பரபரப்பு ஏற்பட்டது. அதனை தொடர்ந்து திருமாவளவன் உரையாற்றத் தொடங்கினார்.

மாநாட்டு மேடையிலும் தொண்டர்கள் குவிந்ததால், மேடையில் இருந்த திருமாவளவன் கோபமடைந்து, தொண்டர்களை அங்கிருந்து கீழே அனுப்பி வைத்தார். விசிக மாநாட்டில் கட்டுக்கடங்காத வகையில் தொண்டர்கள் மேடையில் ஏறியதால் திருமாவளவன் தனது உரையை பாதிலேயே முடித்துக் கொண்டார்.

திருமாவளவன் பேசிக் கொண்டிருந்தபோது மேடையில் தொண்டர்கள் குவிந்ததால் ஏற்பாட்டாளர்கள் கூட்டத்தைக் கட்டுப்படுத்த முடியாமல் திணறினர். இதனால், மாநாடு விரைந்து முடிக்கப்பட்டது. தேசிய கீதம் பாடப்பட்டு விசிக மாநாடு திட்டமிட்டதைவிட முன்கூட்டியே நிறைவடைந்தது.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+