6 தொகுதிகளிலும் விடுதலை சிறுத்தைகளுக்கு "செக்.." நாள் வேறு ரொம்ப கம்மி.. திருமாவளவன் பிளான் என்ன?
சென்னை: விடுதலை சிறுத்தைகள் கட்சிக்கு இந்த தேர்தலில் பானை சின்னம் ஒதுக்கப்பட்டுள்ளது. அதுவும் இன்றுதான் சின்னம் உறுதியாகியுள்ளது.
திமுக கூட்டணியில் 6 தொகுதிகளில் விடுதலை சிறுத்தைகள் கட்சி போட்டியிடுகிறது.
வானூர் (தனி), செய்யூர் (தனி), காட்டுமன்னார் கோயில் (தனி), அரக்கோணம் (தனி), நாகப்பட்டினம், திருப்போரூர் ஆகியவைதான் அந்த 6 தொகுதிகள்.

6 தொகுதிகள்
இதில் திருப்போரூர் தொகுதியில் பாமகவுடனும், பிற 5 தொகுதிகளில் அதிமுக உடனும் நேருக்கு நேராக களம் காண்கிறது விடுதலை சிறுத்தைகள். இந்த நிலையில்தான் சின்னம் ஒரு பெரிய பிரச்சினையாக உருமாறிக்கொண்டே இருக்கிறது என்று சொல்கிறார்கள் களத்தில் இருப்பவர்கள்.

திருமாவளவன் திட்டவட்டம்
திமுக கூட்டணியில் 6 தொகுதிகளிலும் நாங்கள் எங்களது தனி சின்னத்தில் தான் போட்டியிடுவோம் என்று உறுதியாக தெரிவித்து விட்டார் திருமாவளவன். திமுக கூட்டணி பேச்சுவார்த்தை குழுவினர் இது பற்றி எவ்வளவோ வலியுறுத்தி உதயசூரியன் சின்னத்தில் போட்டியிடுமாறு கேட்டுக் கொண்ட போதிலும் திருமாவளவன் அதற்கு சம்மதிக்கவில்லை.

தனிச் சின்னம்
அதற்கு அவர் கூறிய காரணம் இரண்டு. விடுதலை சிறுத்தைகள் இரட்டை இலக்கத்தில் தொகுதிகளை விரும்பியது. ஆனால் ஆறு தொகுதிகள் மட்டும்தான் திமுக ஒதுக்கியுள்ளது. பாஜக கூட்டணியை தமிழகத்தில் காலூன்ற விடாமல் தடுப்பதற்காக இந்த குறைந்த தொகுதிகளை பெற்றுக்கொள்ள சம்மதிக்கிறோம். ஆனால் எங்கள் கட்சியினரை சமாதானப்படுத்த வேண்டுமென்றால் நாங்கள் தனி சின்னத்தில் தான் போட்டியிட வேண்டும் என்று அழுத்தந்திருத்தமாக கூறிவிட்டார் திருமாவளவன். அதேபோல, எங்கள் கட்சியின் தனித்துவத்தை காப்பாற்றிக் கொள்வதற்கு தனிச் சின்னம்தான் உதவும் என்றும் திட்டவட்டமாக தெரிவித்துள்ளார்.

அதிமுகவால் கடும் போட்டி
தேர்தல் களம் மிக எளிதாக இருக்கும் என்றும் எளிதாக வெற்றி பெற்றுவிடலாம் என்பதும் விடுதலை சிறுத்தைகள் கணக்காக இருந்தது. ஆனால் காவிரி டெல்டா மாவட்டங்களை பாதுகாப்பு மண்டலமாக எடப்பாடி பழனிச்சாமி அறிவித்தது, எடப்பாடி பழனிச்சாமி ஆட்சி காலத்தில் காவிரியில் பிரச்சினையில்லாமல் தண்ணீர் வந்து கொண்டிருந்தது உள்ளிட்டவற்றால் முதல்வர் மீது பெரிய அதிருப்தி அலை அங்கு இல்லை. எனவே விடுதலை சிறுத்தைகள் போட்டியிடக்கூடிய 6 தொகுதிகளிலும் அதிமுக மற்றும் அதன் கூட்டணி, விடுதலை சிறுத்தைகளுக்கு கடும் போட்டியாக உருவெடுத்துள்ளது.

முதல்வர் சுற்றுப் பயணம்
சமீபத்தில் டெல்டா மாவட்டங்களில் சூறாவளி சுற்றுப்பயணம் மேற்கொண்டார் எடப்பாடி பழனிச்சாமி. அவர் செல்லும் இடங்களில் எல்லாம் மக்கள் மற்றும் அதிமுக தொண்டர்கள் கூட்டம் கூட்டமாக கூடியிருந்தனர். இரட்டை இலைக்கு வாக்கு அளிக்குமாறு அந்த கட்சியினர் தீவிர தேர்தல் பிரசாரத்தில் ஈடுபட்டு வருகின்றனர். ஆனால் எதிர்தரப்பில் விடுதலை சிறுத்தைகள் கட்சி இன்று மதியம் வரை எந்த சின்னமும் ஒதுக்கப்படாததன் காரணமாக மக்களிடம் எந்த சின்னத்தில் வாக்கு கேட்பது என்பதில் சுணக்கம் நிலவியது. மதியம்தான், பானை சின்னம் ஒதுக்கப்பட்டது. திமுக இதை கவலையோடு கவனித்து வந்ததாக கூறுகிறார்கள்.

இழுபறிக்கு பிறகு வெற்றி
கடந்த லோக்சபா தேர்தலில் திமுக கூட்டணியில், விடுதலைச் சிறுத்தைகள் கட்சிக்கு சிதம்பரம் மற்றும் விழுப்புரம் ஆகிய தொகுதிகள் ஒதுக்கப்பட்டன. சிதம்பரத்தில் போட்டியிட்ட திருமாவளவன் தனி சின்னத்தில் அதாவது பானை சின்னத்தில் போட்டியிட்டார். ரவிக்குமார் உதயசூரியன் சின்னத்தில் போட்டியிட்டார். ரவிகுமார் எளிதாக வென்று விட்ட நிலையில் திருமாவளவன் வெற்றி நள்ளிரவு வரை இழுபறியாக இருந்து. குறைந்த வாக்குகள் வித்தியாசத்தில் மட்டுமே, அதாவது 3120 வாக்குகள் வித்தியாசத்தில்தான் திருமாவளவன் வெல்ல முடிந்தது.

உதய சூரியன் சின்னம்
நேரடியாக திருமாவளவனே போட்டியிட்டும் இதுதான் நிலவரம். இதுதான் சின்னத்துக்கான முக்கியத்துவம். ஒருவேளை 6 தொகுதிகளிலும் உதயசூரியன் சின்னத்தில் போட்டியிட்டு இருந்தால் விடுதலை சிறுத்தைகள் இவ்வளவு தூரம் யோசிக்க தேவையிருந்திருக்காது. இன்னும் எளிதாக வெற்றி பெற வாய்ப்பு இருந்திருக்கலாம். இப்போது சின்னத்தை மக்களிடம் கொண்டு சேர்க்க தீவிரமாக உழைக்கும் நிலைக்கு தள்ளப்பட்டுள்ளனர். இன்றுதான் சின்னம் ஒதுக்கப்பட்டதால், குறைந்த கால அவகாசத்தில் அதை மக்கள் மத்தியில் கொண்டு சென்று சேர்க்க வேண்டிய பெரும் சுமை அவர்கள் முன்னால் இருக்கிறது. ஆனால் இவற்றை எல்லாம் திருமாவளவனும் அறிந்திருப்பார். தெரிந்துதான், தனிச் சின்னத்தில் போட்டியிட முடிவு செய்திருக்கிறார். எனவே அதற்கான வியூகங்களை அவர் வைத்திருப்பார் என்று அடித்துச் சொல்கிறார்கள் அந்த கட்சியினர்.
-
இதாம்லே ட்விஸ்டு.. துண்டை போட்ட உடன்பிறப்புகள்! நழுவிய தவெக நிர்வாகிகள்! விஜய் காதுக்கு போன மேட்டர்! -
அதிமுகவிற்கு ஆதரவாக வந்த திமுக.. முதல்வர் விஜய்க்கு எதிராக வியூகம்.. கவனிச்சீங்களா -
Gen Z DMK Meetup.. விஜய் ஏற்படுத்திய ‘இன்ஸ்டா’ புயல்! இளைய தலைமுறையை நெருங்கும் திமுக! கைகொடுக்குமா? -
“கொளத்தூரில் ஸ்டாலின் தோற்பார் என முன்பே தெரியும்.. திமுகவிடம் சொன்னோம்”.. காதர் மொய்தீன் தடாலடி! -
10ல் 1ல் மட்டுமே வெற்றி.. எனன் நடந்தது? தேமுதிக மா.செக்களை அழைத்து விசாரிக்கும் பிரேமலதா விஜயகாந்த் -
திமுகவை தோற்கடித்த 8 அதிர்ச்சி காரணங்கள்.. ஸ்டாலின் மேஜைக்கு போன இறுதி ரிப்போர்ட்.. உள்ளே ஷாக்! -
பிளான் A எடப்பாடி.. பிளான் B திருமா.. திமுக பிளான்.. புட்டு புட்டு வைத்த காதர் மொகிதீன் -
ஸ்டாலினே சொன்னா தான் உண்டு.. திமுக - அதிமுக கூட்டணி முயற்சி நடந்ததா? 30 நாளாய் நீடிக்கும் மர்மம்! -
குடும்பத்தினருடன் குடகு மலைக்குச் சென்ற திமுக தலைவர் ஸ்டாலின்.. கூட யார் யார்லாம் பாருங்க! -
இந்தா ஆரம்பிச்சுட்டாங்கல்ல.. திருச்சி இடை தேர்தலில் திமுகவில் சீட் யாருக்கு! ரேசில் அன்பில் - இனிகோ! -
விஜய்க்கு விஷப் பரிட்சை..திமுகவுக்கு அக்னி பரிட்சை! இடைத் தேர்தலுக்கு ரெடியான கழகங்கள்! அதிமுக அமைதி -
தேர்தல் புயலில் சேதாரமான கோட்டை.. படக்கென எழுந்த ’திமுக’ குதிரை.. படுத்தே கிடக்கும் ’அதிமுக’ யானை!












Click it and Unblock the Notifications