இப்படியா போவாங்க? 60 கிமீ வேகத்தில் சென்றபோதும் டோரை பிடித்தபடி திருமாவளவனிடம் பேசிய விசிக நிர்வாகி

Subscribe to Oneindia Tamil

சென்னை: விசிக தலைவர் தொல் திருமாவளவனின் காரில் முன்பக்க ஜன்னல் டோரை பிடித்துகொண்டே நிர்வாகி ஒருவர் பேசிக்கொண்டே சென்ற வீடியோ இணையத்தில் டிரெண்ட் ஆகி வருகிறது. கார் சுமார் 60 கிமீ வேகத்தில் வேகமாக பறந்த போதும் ஆபத்தை உணராமல் அந்த நிர்வாகி பேசியபடியே வந்தார். சிறிது தூரம் வந்த பிறகு அவரை இறக்கிவிட்டுவிட்டு திருமாவளவன் சென்றார்.

விடுதலை சிறுத்தைகள் கட்சியின் தலைவர் தொல் திருமாவளவன் எம்பி கடந்த சில நாட்களுக்கு முன்பாக கடலூரில் சுற்றுப் பயணம் மேற்கொண்டார். உளுந்தூர்பேட்டையில் விடுதலை சிறுத்தைகள் கட்சியின் மாநாடு நடைபெற உள்ளது. இந்த மாநாடு தொடர்பாக கட்சி நிர்வாகிகளுடன் திருமாவளவன் ஆலோசனை நடத்தினார்.

VCK functionary chats with Thirumavalavan while holding onto the car door at 60 km h Speed


பேசிக்கொண்டிருந்த போதே புறப்பட்ட கார்

பின்னர் புறப்பட்ட திருமாவளவனை விழுப்புரம் - நாகப்பட்டினம் தேசிய நெடுஞ்சாலை அருகே உண்ணாமலைசெட்டி சாவடி அருகே விசிகவினர் திரண்டு இருந்தனர். திருமாவளவன் வந்ததும் அவருக்கு உற்சாக வரவேற்பு அளிக்கப்பட்டது. அப்போது அங்கு நின்று கொண்டு இருந்த கடலூரை சேர்ந்த விசிக நிர்வாகி ஒருவர், காரில் முன்பக்கத்தில் அமர்ந்து இருந்த திருமாவளவனிடம் பேசிக்கொண்டு இருந்தார்.

அவர் பேசிக்கொண்டு இருக்கும் போதே கார் புறப்பட்டது. ஆனாலும் விடாப்பிடியாய் காரில் தொங்கிய அந்த நிர்வாகி, திருமாவளவனிடம் பேசிக்கொண்டே சென்றார். கார் மணிக்கு 60 கி.மீட்டர் வேகத்தில் சீறிய போதிலும் காரின் ஜன்னலை பிடித்து தொங்கியபடி திருமாவள்வனிடம் பேசிக்கொண்டு இருந்தார்.

இப்படியா தொங்கியபடி செல்வது?

கார் சுமார் 100 மீட்டர் தொலைவு தூரம் சென்றதும் திருமாவளவன் காரை உடனே நிறுத்துமாறு, டிரைவரிடம் சொன்னார். இதையடுத்து கார் மெதுவாக இயக்கப்பட்டது. ஸ்லோவாக சென்ற போது, திருமாவளவனிடம் பேசிக்கொண்டு இருந்த அந்த நிர்வாகி காரில் இருந்து இருந்து இறங்கினார். திருமாவளவன் காரில் அமர்ந்து இருப்பது, கட்சி நிர்வாகி ஜன்னலில் தொங்கியபடி பேசிக்கொண்டு இருக்கும் காட்சிகளும் சமூக வலைத்தளங்களில் தற்போது வைரலாகி வருகிறது.

அதாவது, கடலூர் வி.சி.க நகர துணைச் செயலாளர் பரதன் என்பவர்தான், திருமாவளவன் காரில் சென்றபோது தொங்கியபடி அவருடன் உரையாடிய நிர்வாகி என்று கூறப்படுகிறது. இது குறித்த வீடியோ வைரலாகி பலரது கவனத்தையும் ஈர்த்துள்ள நிலையில், என்னதான் முக்கியமான விவகாரமாக இருந்தாலும் இந்த அளவு ஆபத்தான முறையில் தொங்கியபடியா செல்வது என்று நெட்டிசன்கள் தங்கள் ஆதங்கத்தை வெளிப்படுத்தி வருகிறார்கள். கடந்த ஜூன் 17 ஆம் தேதி இந்த நிகழ்வு நடைபெற்றதாக சொல்லப்படுகிறது.

மாநாடு எப்போது நடைபெறும்

கடலூர் மாவட்டம் உளுந்தூர்பேட்டையில் விசிகவின் மாநாடு நடைபெற உள்ளது. ஆகஸ்ட் 17 ஆம் தேதி நடைபெற உள்ள இந்த மாநாட்டிற்கான ஏற்பாடுகளை கட்சி நிர்வாகிகள் முழு வீச்சில் செய்து வருகிறார்கள். தமிழ் தேசிய எழுச்சி மாநாடு என்ற பெயரில் நடைபெறும் இந்த நிகழ்ச்சிக்காக பிரமாண்ட பந்தல் அமைக்கும் பணிகள் நடைபெற்று வருகிறது. தமிழகத்தில் ஆளும் தவெக கூட்டணி அரசில் விசிக அங்கம் வகிக்கிறது.

சட்டமன்ற தேர்தலில் திமுக கூட்டணியில் போட்டியிட்டு வெற்றி பெற்ற விசிக, தேர்தலுக்கு பிறகு விஜய்யின் தவெகவிற்கு ஆதரவு அளித்தது. விசிக எம்.எல்.ஏ வன்னி அரசு அமைச்சராகவும் பதவியேற்றுள்ளார். இத்தகைய அரசியல் திருப்பங்களுக்கு பிறகு நடைபெற உள்ள விசிக மாநாடு தமிழக அரசியல் வட்டாரத்திலும் கவனம் பெற்றுள்ளது. இந்த மாநாடு பணிகளை நேற்று முன் தினம் அமைச்சர் வன்னி அரசு ஆய்வு செய்தார். பின்னர் பேசிய வன்னி அரசு, மாநாட்டிற்கு கூட்டணி கட்சி தலைவர்களுக்கு அழைக்கப்படுமா? என்பது குறித்து திருமாவளவன் முடிவு செய்வார் என்று கூறினார்.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+