வன்னியரசு என்ன கார்த்தி சிதம்பரத்தை இப்படி கேட்டுட்டாரே.. "பாஜகவை இன்னும் ஆதரிக்கணுமா என்ன?" ஏன்?
கார்த்தி சிதம்பரம் ட்வீட்டுக்கு வன்னியரசு கேள்வி எழுப்பி உள்ளார்
சென்னை: "பாஜகவின் தேசிய கல்வி கொள்கை, நீட் உள்ளிட்ட பலவற்றை தனிப்பட்ட முறையில் நீங்கள் ஆதரித்த பிறகும் இப்படி சோதனையிடுவது சரியல்ல. இன்னும் முழுமையாக பாஜகவை ஆதரிக்க வேண்டுமா என்ன? என்று கார்த்தி சிதம்பரத்திடம், விசிகவின் வன்னியரசு கேள்வி எழுப்பி உள்ளார்.
Recommended Video
காங்கிரஸ் மூத்த தலைவரும், முன்னாள் நிதியமைச்சருமான ப.சிதம்பரத்தின் மகன் கார்த்தி சிதம்பரம் சிவகங்கை தொகுதியின் காங்கிரஸ் எம்பியாக இருந்து வருகிறார்.
இவர் மீது முறைகேடு புகார் எழுந்துள்ளதாக கூறி சில மாதங்களுக்கு முன்பு அவரை போலீஸ், கைது செய்து டெல்லி ஜெயிலிலும் அடைத்தது.. ஆனால், அடுத்த சில நாட்களுக்கு பிறகு, அவர் ஜாமீனில் வெளிவந்துவிட்டார்..

சிபிஐ
அத்துடன், நாடாளுமன்ற கூட்டத்தில் ஆளும் மத்திய அரசுக்கு எதிரான கருத்துக்களையும் தொடர்ந்து தெரிவித்து வந்தார். இந்நிலையில், வெளிநாட்டு பணப்பரிவர்த்தனையில் முறைகேடு நடந்ததாக கூறி, தொடரப்பட்ட வழக்கை சிபிஐ விசாரணை செய்து வரும் நிலையில், கார்த்தி சிதம்பரத்திற்கு சொந்தமான 9 இடங்களில் சிபிஐ அதிகாரிகள் சோதனை நடத்தி வருகின்றனர்.. இன்று காலை அவருக்கு சொந்தமான வீடு, அலுவலகம் உள்ளிட்ட சென்னை, மும்பை உள்ளிட்ட இடங்களில் சோதனை மேற்கொண்டு வருகிறது.

கார்த்தி சிதம்பரம்
சென்னை நுங்கம்பாக்கத்தில் உள்ள இல்லத்தில் 7 சிபிஐ அதிகாரிகள் சோதனையில் ஈடுபட்டுள்ளனர் வெளிநாட்டு பணப்பரிவர்த்தனை தொடர்பான வழக்கில் இந்த சோதனை நடைபெறுவதாக தகவல் வெளியாகியுள்ளது. இது அரசியல் உலகில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி வருகிறது.. இதுதொடர்பாக கருத்து தெரிவித்துள்ளார் கார்த்தி சிதம்பரம்.

கிண்டல்
தன்னுடைய ட்விட்டர் பதிவில் "ஒரு வழக்கு தொடர்பாக எத்தனை முறைதான் சோதனை நடத்துவார்கள் என்று தெரியவில்லை, எத்தனை முறை சோதனை நடந்தது என்று எனக்கே நினைவில்லை.. சிபிஐ சோதனையில் இது ஒரு சாதனையாக இருக்கக்கூடும்" என்று ட்விட்டர் பதிவில் கிண்டலாக பதிவிட்டிருந்தார்... கார்த்தி சிதம்பரத்தின் இந்த ட்வீட்டுக்கு விசிகவின் வன்னியரசு கேள்வி எழுப்பி உள்ளார்.. இது தொடர்பாக பதிவிட்டுள்ள ட்வீட்டும் பதிவிட்டுள்ளார்.

வன்னியரசு
அதில், "பாஜகவின் தேசிய கல்வி கொள்கை, நீட் உள்ளிட்ட பலவற்றை தனிப்பட்ட முறையில் நீங்கள் ஆதரித்த பிறகும் இப்படி சோதனையிடுவது சரியல்ல. இன்னும் முழுமையாக பாஜகவை ஆதரிக்க வேண்டுமா என்ன? என்று கேட்டுள்ளார்... இதற்கு பலரும் திரண்டு வந்து கமெண்ட் செய்து கொண்டிருக்கிறார்கள்.. "மடியில் கணம் இல்லாதோர் எதற்காக பயப்பட வேண்டும் ஏதோ ஒரு வகையில் திருட்டுத்தனமாக சேர்த்த சொத்து என்பதால் தான்.. மத்திய அரசு CBI விடுங்க மக்கள் சேவை செய்கிறேன் என்று சொல்லி கொள்ளும் இவர்களுக்கு இவ்வளவு சொத்து எப்படி வந்தது? " என்று வன்னியரசுவிடம் கேள்வி எழுப்பி வருகிறார்கள்.
-
ரேஷன் கார்டுதாரர்களுக்கு ஹேப்பி நியூஸ்.. ஜூன் 2, 3ல் வீடு தேடி வரும் சர்ப்ரைஸ்.. கலெக்டர் அதிரடி -
வங்கி கணக்கில் வரும் ரூ.3000.. விஜய் அனுப்பும் ஜூன் மாத தொகை.. 3 திட்டங்களில் கிடைக்கும் பணம் -
பசிக்கு இரண்டு சமோசா.. கல்வி கடன்.. ஐஐடி-யில் தோற்றவர் துபாயில் சரித்திரம் படைத்த இந்திய இளைஞன் -
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்! -
தாய் பத்திரம் தொலைஞ்சிருச்சா? ஆன்லைனில் ஈஸியாக ஒரிஜினலை மீட்க 6 ஆவணங்கள் என்ன? சிம்பிள் ஸ்டெப்ஸ் -
கோயம்புத்தூர்-க்கு ஓடிவரும் ராகுல் ப்ரீத் சிங்.. ரேஸ் கோர்ஸ் சாலையில் புது ஆரம்பம்! -
எல்பிஜி சிலிண்டர் பயன்படுத்துபவர்களுக்கு..நாளை முதல் புதிய கட்டுப்பாடுகள்! PNGக்கு மாற்றம் கட்டாயம்? -
ஆள் மட்டுமில்லை.. கட்சியையே தவெகவில் இணைக்கும் புகழேந்தி.. புஸ்ஸி - செங்கோட்டையனுடன் சந்திப்பு -
அரசியலுக்கு முழுக்கு.. திமுக பொதுச்செயலாளர் பதவியில் இருந்து விலகும் துரைமுருகன் -
பிறந்தநாளன்று புதிய கட்சி அறிவிப்பு? பாஜக மேலிடத்திடம் டைம் கேட்ட அண்ணாமலை.. ரகசிய மூவ்! -
8-வது ஊதியக் குழு அப்டேட்! சாதாரண ஊழியருக்கு 1.5 லட்சம்.. மத்திய அரசு ஊழியர்களுக்கு குஷி -
இந்தா ஆரம்பிச்சுட்டாங்கல்ல.. திருச்சி இடை தேர்தலில் திமுகவில் சீட் யாருக்கு! ரேசில் அன்பில் - இனிகோ!












Click it and Unblock the Notifications