விஜய்க்கு தூக்கம் போனது.. வெள்ளிக்கிழமை நோ.. சனிக்கிழமை காலையில் முடிவு - திருமா
தமிழக அரசியல் களம் தொடர்ந்து பரபரப்பில் உள்ள நிலையில், விடுதலை சிறுத்தைகள் கட்சி (விசிக) தலைவர் தொல் திருமாவளவன் முக்கிய அறிவிப்பு ஒன்றை வெளியிட்டுள்ளார். தமிழக வெற்றிக் கழகம் (தவெக) தலைமையில் ஆட்சி அமைப்பதற்கு விசிக ஆதரவு அளிப்பது குறித்து இன்று மாலை Zoom வாயிலாக உயர்நிலைக் குழுவுடன் ஆலோசனை நடத்த உள்ளதாக அவர் தெரிவித்துள்ளார். இந்தக் கூட்டத்தில் எடுக்கப்படும் முடிவு தமிழக அரசியலின் அடுத்தகட்டத்தை தீர்மானிக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.
விசிக கட்சியின் உயர்நிலைக் கூட்டம் முடிந்த பிறகு நாளை (மே 9, சனிக்கிழமை) காலை பத்திரிகையாளர்களை சந்தித்து முடிவுகளை அறிவிக்க உள்ளதாக திருமாவளவன் தெரிவித்தார்.

ஏன் இந்த கூட்டம்? திருமாவளவன் விளக்கம்
மேலும் தவெக-வுக்கு ஆதரவு அளிப்பது குறித்த முடிவுகளை எடுக்க நாங்கள் எந்த விதத்திலும் தாமதப்படுத்தவில்லை. தேர்தல் முடிவுகள் மே 4 அன்று வெளியான நிலையில் இன்று மே 8 தான். ஜனநாயகக் ஆட்சியில் கூட்டாக விவாதிப்பது இயல்பான செயல்முறை" என்று அவர் விளக்கினார்.
கட்சித் தலைவராக தனக்கு முடிவெடுக்கும் அதிகாரம் இருந்தாலும், கட்சி நிர்வாகிகளின் உணர்வுகள் மற்றும் கருத்துகளை அறிந்த பிறகே முடிவு எடுப்பது தனது பொறுப்பு என்றும் அவர் கூறினார். மூத்த தலைவர்கள் தமிழகத்தின் பல்வேறு பகுதிகளில் இருப்பதால் இணைய வழியில் கூட்டம் நடத்தப்படுவதாகவும் அவர் தெரிவித்தார்.
திமுக - அதிமுக கூட்டணி குறித்த கேள்விக்கு பதில்
செய்தியாளர் சந்திப்பில், திமுக ஆதரவுடன் திமுக ஆட்சி அமைத்தால் விசிக ஆதரவு அளிக்குமா? என்று கேட்டபோது திருமாவளவன் தெளிவான பதிலை அளித்தார். "கட்சியின் முன்னணி நிர்வாகிகளுடன் கலந்தாலோசிக்காமல் நான் முன்கூட்டியே கருத்து தெரிவிப்பது சரியல்ல. எனவே உயர்நிலைக் குழு கூட்டம் முடிந்த பிறகு நாளை காலை பத்திரிகையாளர்களை சந்தித்து முடிவை அறிவிப்போம்" என்று அவர் மீண்டும் மீண்டும் வலியுறுத்தினார்.
ஸ்டாலின் அளித்த உறுதிமொழி
திருமாவளவன், திமுக தலைவர் முக.ஸ்டாலின் தன்னிடம் நேரடியாகக் கூறியதாக ஒரு முக்கிய தகவலைப் பகிர்ந்தார். "மக்கள் தீர்ப்பை மதிக்கிறோம். தவெக ஆட்சி அமைப்பதற்கு திமுக முட்டுக்கட்டை போடாது" என்று ஸ்டாலின் தெரிவித்ததாக அவர் செய்தியாளர்களிடம் தெரிவித்தார். தாக்கத்தை ஏற்படுத்தும் என அரசியல் வட்டாரங்கள் கருதுகின்றன.
விசிக-வின் ஆலோசனை மற்றும் அறிவிப்பு தமிழக அரசியலில் பெரும் எதிர்பார்ப்பை ஏற்படுத்தியுள்ளது. விசிகவின் முடிவு என்னவாக இருக்கும் என்பதைப் பொறுத்தே தவெக ஆட்சி அமைப்பதற்கான வாய்ப்புகள் தீர்மானிக்கப்படும்.
-
கோட் சூட்டிற்கு பதிலாக பட்டு வேஷ்டி சட்டை.. திடீரென டிரஸ் கோடு மாற்றிய முதல்வர் விஜய்! ஏன் தெரியுமா? -
விஜய் வீட்டுக்கு பக்கத்தில் வீடு வாங்கணும்! பனையூரை வட்டமடிக்கும் ரியல் எஸ்டேட் முதலைகள்! என்ன விலை? -
முதல்வர் விஜய்.. பதவியேற்ற 20 நாட்களில் 6 பெரிய சறுக்கல்கள்.. சொதப்பல் மேல் சொதப்பல்! -
பரந்தூர் ஏர்போர்ட் டிராப்? சென்னையை காவு கொடுக்க போகிறாரா விஜய்... நெட்டிசன் வெளியிட்ட பதிவு -
பரந்தூர்-க்கு சொன்ன நோ.. சென்னை மக்களுக்கு அடுத்த அதிர்ச்சி! சீட்டுக்கட்டுப்போல் சரியும் மெகா திட்டங்கள்! -
விஜய் கொடுத்த வாக்குறுதி.. தவெகவில் இணைந்தது ஏன்.. உண்மையை உடைத்த அதிமுக எக்ஸ் எம்எல்ஏ -
திருச்சி கிழக்கில் வெல்லமண்டி நடராஜன் போட்டி? அமைச்சர் புஸ்ஸி ஆனந்த் கொடுத்த க்ரீன் சிக்னல்! -
மேகதாது அணை விவகாரம்: தேசிய பசுமை தீர்ப்பாயத்தை நாடிய தமிழக அரசு! அடுத்த கட்ட 'மூவ்’ என்ன? -
கும்பகோணத்தில் “காவலர் தேவநாதன் கையை முறித்த த.வெ.க.வினர்” என்ற செய்தியே தவறு.. காவல்துறை விளக்கம் -
அரசு மருத்துவமனையில் தந்தையை அனுமதித்து இரவு முழுவதும் தங்கிய அமைச்சர் மதன் ராஜாவுக்குப் பாராட்டு -
அதிமுகவில் அடுத்த விக்கெட்? சி.வி.சண்முகத்துக்கு இப்படியொரு லட்டு சான்ஸ்? போட்டு தாக்குதே தவெக -
சென்னையில் நாளை மாலை ‘GenZ DMK’ பிரம்மாண்ட நிகழ்ச்சி.. களமிறங்கும் திமுக உணர்வுள்ள இளைஞர்கள்!












Click it and Unblock the Notifications